23 February, 2011 by admin
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாளின் மறைவுக்கு உலகம் முழுக்க இருக்கிற தமிழர்கள் தங்கள் கண்ணீர் அஞ்சலியை தெரிவித்து வருகிறார்கள். தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் செயற்குழுவிலும் பார்வதியம்மாளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
சங்கத்தின் தலைவர் பாராதிராஜா, செயலாளர் ஆர்.கே.செல்வமணி, பொருளாளர் எழில் ஆகியோர் முன்னிலையில் கூடிய சங்கத்தின் நிர்வாகிகள் பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.
திரைப்பட இயக்குனர்கள் சங்கம் சார்பில் வெளியிடப்பட்ட அஞ்சலி செய்தியில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது-
தாய் என்பவள் ஒரு உயிரின் மூலம். பிரபாகரனின் தாய் தமிழீழ வரலாற்றின் மூலம். இயற்கை எனது நண்பன். வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி என்று வாழ்ந்த பிரபாகரனை 1954 ம் ஆண்டு நவம்பர் 26 ம் நாள் பெற்றெடுத்த தாயார் பார்வதியம்மாள். தமிழ் இன வரலாற்றின் தவமாய் தவமிருந்த வந்த தவப் புதல்வி.
வேறு ஒரு இனம் ஆள்வதையும், தமிழ் மக்களின் மரண ஓலமும் பிரபாகரனை காயப்படுத்தியது. எனவே செய் அல்லது செத்துமடி என்ற ஆணித்தரமான காரணங்களோடு தமிழீழத்திற்காக போராடினார். பிரபாகரனின் தாய் இறந்துவிட்டார் என்ற செய்தி உலக தமிழ் மக்களின் இதயத்தை உடைக்கிறது. ஒட்டு மொத்த குடும்பமும் தமிழ் இனத்திற்காகவே வாழ்வை அர்பணித்த தருணங்களை தமிழ் மக்களாகிய நாம் நினைவு கூற வேண்டும்.
மரணம் கையடக்க சாம்பலாகலாம். எங்கள் மனம் சர்வாதிகாரத்தால் கறையாது என்று எல்லா மாவீரர்களையும் ஊக்கப்படுத்திய பிரபாகரனை அன்பால் வாழ வைத்த தாயின் மரணம் தமிழ் இனத்திற்கு பேரிழப்பு.
தமிழீழ மக்களின் இடம், இருப்பு, வாழ்வு இவையனைத்தும் மாற்றார் கையில் மறுபடியும் போய்விட்ட காலம். எந்த காட்டில் எந்த பதுங்கு குழியில் பாவதியாய் ஒரு தாய் மற்றொரு பிரபாகரனை பெற்றெடுப்பாள்? இனி தமிழீழ வரலாற்றின் முதல் பிள்ளைகளை பெற்றெடுத்த தாயை இன்று முதல் முழு முதல் கடவுளாகவும் தமிழீழ மக்கள் வணங்குவார்கள்.
மண்ணுக்காக மக்களுக்காக வாழ்ந்த பிரபாகரனின் தாயை மருத்துவம் அளிக்காமல் இந்தியா திருப்பி அனுப்பிய சோகம், அனைத்து மக்களின் மனதில் உள்ளது.
காலம் எதன் மீதும் தவறான தீர்ப்புகளை எழுதி விடாது.
அந்த வீரத்தாயின் மரணத்திற்கு தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

இந்த தாய் மடியில் பிறந்த பிரபாகரன் இவர்களின் வாழ்க்கை அர்ப்பணிப்பு இவை யாவும் இன்னும் நூற்றாண்டு ஆனாலும் சரித்திரமாக போற்றப்படும்.
காலம் எதன் மீதும் தவறான தீர்ப்புகளை எழுதி விடாது.
அந்த வீரத்தாயின் மரணத்திற்கு தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
No comments:
Post a Comment