22 February, 2011 by admin
மதிமுக பொது செயலாளர் வை.கோ, ஈழத்தின் பேரன்னை பார்வதி அம்மையாருக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் விதமாக தமிழ்நாடு முழுவதும் அமைதி பேரணிகளும், இரங்கல் பொதுக்கூட்டங்களும் நடத்துமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.அதையொட்டி தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களிலும்,கிராமங்களிலும் பார்வதி அம்மையாருக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் நடந்த வண்ணம் உள்ளது.
இதன் ஒரு பகுதியாக கரூரில் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் இன்று நடத்தப்பட்ட அமைதி பேரணியில்,மதிமுக மாநில இளைஞர் அணி செயலாளர் திரு.அழகுசுந்தரம் கலந்துகொண்டு நினைவுரையாற்றினார். பெருந்திரளானோர் கலந்துகொண்ட இந்த பேரணியில் பெண்கள் பெருமளவில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கது.பேரணியில் மதிமுக மாவட்ட செயலாளர் பரணி மணி, பெ.தி.க மாவட்ட செயலாளர் திரு.தனபால்,தமிழர் முன்னணியின் தலைவர் திரு.முருகேசன்,தமிழ் தேசிய இயக்கத்தின் மாவட்ட செயலாளர் திரு.சந்திரன்,கொங்கு இளைஞர் பேரவை செயலாளர் திரு.கார்வேந்தன்,மற்றும் பெண்கள் முன்னணி,தமிழர் முன்னணி,நாம் தமிழர் கட்சி,ஆதி தமிழர் பேரவை உட்பட பல்வேறு தமிழ் அமைப்பை சார்ந்தவர்களும்,மதிமுக தொண்டர்களும்,தமிழ் உணர்வாளர்களும் திரளாக பேரணியில் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment