Pages

Friday, March 11, 2011

ஆழிப்பேரலை (சுனாமி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து..........

சுனாமி அல்லது கடற்கோள்அல்லது ஆழிப்பேரலை (யப்பானிய மொழி: 津 波 ட்சு னமி "துறைமுக அலை") என்பது கடல் அல்லது குளம் போன்ற பாரிய நீர்ப்பரப்புகளில் சடுதியாக பெருமளவு நீர் இடம்பெயர்க்கப்படும் போது ஏற்படும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அலைக் தொடர்களைக் குறிக்கும். நிலநடுக்கம் (பூமி அதிர்ச்சி), மண்சரிவுகள், எரிமலை வெடிப்பு, விண்பொருட்களின் மோதுகை போன்றவை சுனாமி அலைகளை ஏற்படுத்தக் கூடிய மூலக் காரணிகளாகும்.

ஏற்படும் முறை

பூகம்பம் என்பது நிலப்பகுதியில், கடல் பகுதியில், மலைப்பகுதியில் ஏற்படும். நிலப்பகுதியில் வந்தால் நிலத்தில் உள்ளவை அதிர்ந்து சேதமாகிறது. கடலில் வந்தால் கடலின் ஆழமான பகுதியிலுள்ள நிலத்தட்டுக்களின் அசைவு பெரிய அலைகளை உருவாக்குகின்றது. மலையில் எரிமலையாக உருவெடுகிறது.

பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரே நிலத்தட்டுத்தான் இருந்தது. அதன் மீது தான் பூமி இருந்தது. ஆனால் கண்டங்களாக பிரிய, பிரிய, அதன் தட்ப, வெப்ப, இயற்கை சூழ்நிலைகளுக்கு ஏற்ப, பல்வேறு நிலத்தட்டுக்கள் உருவாகின. இந்தத் தட்டுக்களின்மீதுதான் ஒவ்வொரு கண்டமும் இருக்கின்றன. நிலம், கடல் எல்லாவற்றையும் தாங்கி நிற்பது இந்த நிலத்தட்டுக்கள் தான். இதைத் தான் ‘டெக்டானிக் பிளேட்கள்’ என்று புவியியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
2004 ஆம் ஆண்டில், டிசம்பர் 26 ஆம் நாளன்று, யுரேஷியன் நிலத்தட்டின் ஒரு பகுதியாகக் கருதப்படும் பர்மா நிலத்தட்டும், இந்தோ-ஆஸ்திரேலியன் நிலத்தட்டின் ஒரு பகுதியாகிய இந்திய நிலத்தட்டும், இந்தோனேசியாவின் வடக்கே சுமாத்திரா தீவில், கடலுக்கடியில் மோதியது. அதனால் ஏற்பட்ட பூகம்பத்தால் தோன்றிய அலைகள் தான் இந்தியப் பெருங்கடலில் சுனாமியை ஏற்படுத்தியது. இதுவே 2004 ஆம் ஆண்டின் மிகப்பெரிய இயற்கை அழிவாகக் கருதப்பட்டது. இது 2004 ஆம் ஆண்டு - இந்தியப் பெருங்கடலின் பூகம்பமும், ஆழிப்பேரலையும் எனப்படுகின்றது.
The tsunami that struck Thailand on December 26, 2004.

[தொகு] வரலாறு

ஆராய்ச்சியாளர்கள் கூற்றுப்படி, கி.மு., 365ம் ஆண்டு ஜூலை 21ம் தேதி கிழக்கு மத்திய தரைக்கடலில் தோன்றி, எகிப்தில் அலெக்சாண்டிரியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
1. சமீப நூற்றாண்டுகளை கணக்கில் கொண்டால், முதன்முதலில் கடந்த 1755ம் ஆண்டு, நவம்பர் 1ம் தேதி போர்ச்சுக்கல் நகரான லிஸ்பனில் ஏற்பட்ட பயங்கர பூகம்பம், போர்ச்சுக்கல், ஸ்பெயின், மொராக்கோ நாடுகளில் சுனாமி பேரழிவை ஏற்படுத்தியது.
2. 1883ம் ஆண்டு வாக்கில் ஜாவா சுமத்ரா இடையே கிரகோடா என்ற பகுதி எரிமலைப் பகுதியாக திகழ்ந்தது. அங்கு ஏற்பட்ட பூகம்பத்தில் அணுகுண்டை விட 10 ஆயிரம் மடங்கு சக்தி வாய்ந்த வெடிசம்பவம் நடந்தது. பல்லாயிரம் கிலோமீட்டர் தூரத் துக்கு அப்போது சத்தம் கேட்டதாக தகவல் கூறுகிறது. 35 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர்.
3. அதன் பின்னர் தொடர்ந்து 1999ம் ஆண்டு வரை கூட சுனாமி தாக்குதல் நடந்துள்ளது. ஆனால், கடந்த 1964ம் ஆண்டு தான் கடைசியாக அலாஸ்கா வளைகுடாவில் மிகப் பயங்கர சுனாமி ஏற்பட்டது. அதன் விளைவாக, அலாஸ்கா, வான்கூவர் தீவு (பிரிட்டீஷ் கொலம்பியா), அமெரிக்காவில் கலிபோர்னியா, ஹவாய் பகுதிகளை தாக்கியது. ஆனால், உயிர்சேதம் 120 பேர்தான். காரணம், பாதுகாப்பு ஏற்பாடுகள் தான்.

[தொகு] சுனாமி வரும் முறை

1. கடலாழத்தில் ஏற்படும் எந்த பாதிப்பின் போதும் வரும்.
2. கடலாழ பூகம்பத்தினால் வரும்.
3. கடலை ஒட்டிய நிலப்பகுதியில் ஏற்படும் பூகம்பத்தால் வரும்.
4. மலையில் எரிமலை உண்டாகி, அதனால் வரும்.
5. வானில் கிரகங்களின் செயல்பாடுகள் மாறும் போதும் ஏற்பட வாய்ப்புண்டு (இது இன்னும் உறுதிப்படுத்தப் படவில்லை)
6. கடலில் இயற்பியல் மாற்றங்கள் ஏற்பட்டாலும் வரும்.

[தொகு] சுனாமி எச்சரிக்கை அமைப்பு

அமெரிக்காவில் உள்ள ஹவாய் தீவில்தான் முதன் முதலாக பசிபிக் பெருங்கடல் பிராந்திய சுனாமி எச்சரிக்கை அமைப்பு நிறுவப்பட்டது. அதற்கு காரணம் கடந்த நூற்றாண்டில் சுனாமியால் தாக்கப்பட்ட முதல் இடம் ஹவாய். 1946 ஏப்ரல் 1ல் ஹவாய் தீவை தாக்கிய ராட்சத சுனாமி அலை 159 பேரின் உயிரை விழுங்கி விட்டது. கோடிக்கணக்கான சொத்துகளும் நாசமாயின.
அமெரிக்கா 1949ல் அங்கு பசிபிக் கடல் சுனாமி எச்சரிக்கை அமைப்பை நிறுவியது. அப்போது விடுக்கப்பட்ட எச்சரிக்கைகளில் 75 சதவீதம் தவறாக அமைந்தது. இதனால் பொது மக்கள் மூட்டை முடிச்சுகளை எடுத்துக் கொண்டு இடம் பெயர்வதும் மீண்டும் பழைய இடத்துக்கே திரும்புவதும் சலிப்பை ஏற்படுத்தின. செலவும் ஆனது. அதனால் சுனாமி அலை உருவானால் மட்டும் கடலில் இருந்து தகவல் கொடுக்க கருவி வேண்டும் என்பதை உணர்ந்து கண்டுபிடிக்கப்பட்டதுதான் ‘சுனாமி மிதவை கருவி’.
1960ல் சிலியில் ஏற்பட்ட பூகம்பத்தால் ராட்சத அலைகள் ஹவாயை தாக்கின. இதனால் 12 ஆண்டுக்குப்பின் அங்கு மீண்டும் சுனாமி ஏற்பட்டது. முன்னரே முன்னெச்சரிக்கை தகவல்கள் அனுப்பப் பட்டதால் அங்கு 61 பேர் மட்டுமே பலியானார்கள். அப்போது ஜப்பான், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட பசுபிக் கடல் நாடுகளுக்கும் எச்சரிக்கை அமைப்பு வேண்டும் என்று உணரப்பட்டது. 1963ல் சர்வதேச சுனாமி எச்சரிக்கை மையம் அமைக்கப்பட்டது. இதில் உறுப்பினராக 26 நாடுகள் உள்ளன. உறுப்பினராக சேர்ந்துள்ள நாடுகளுக்கு மட்டுமே எச்சரிக்கைத் தகவல்களை அனுப்ப வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.
ஆஸ்திரேலியா, கனடா, சிலி, கொலம்பியா, குக் ஐலண்ட்ஸ், கோஸ்டரிகா, தென் கொரியா, வடகொரியா, ஈக்வேடார், எல்சல்வடார், பிஜி, பிரான்ஸ், குவாதமாலா, இந்தோனேஷியா, ஜப்பான், மெக்சிகோ, நியூசிலாந்து, நிகரகுவா, பெரு, பிலிப்பைன்ஸ், ரஷ்யா, சமோவா, சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு மட்டுமே சுனாமி பேரலைகள் பற்றிய தகவல் வழங்கப்பட்டு வருகிறது.

[தொகு] சுனாமி மிதவை கருவி செயல்படும் விதம்

படிமம்:Dart tsunamicover.jpg
One of the deep water buoys used in the DART tsunami warning system
கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டவுடன், சுனாமி அலைகள் கடலில் ஏற்படுகின்றனவா என்பதை அறிய சுனாமி எச்சரிக்கைக் கருவிகளால் மட்டுமே முடியும். அவற்றில் உள்ள பிரத்யேக கருவிகள், கடலில் நீர் இயக்கத்தில் ஏதாவது மாற்றம் இருக்கிறதா என்பதை தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருக்கும். நிலநடுக்கம் ஏற்பட்ட உடன் கடல் அலைகள் தோன்றினால், அந்த அலைகள் உருவாக்கும் அழுத்த மாறுபாட்டை ஒலி அலைகளாக மாற்றி, அவற்றை சிக்னல்களாக வானில் உள்ள செயற்கைக் கோள்களுக்கு அனுப்பிவைக்கும். அங்கிருந்து தரையில் உள்ள மையங்கள் சிக்னலைப் பெற்றுக் கொள்ளும். அலையின் தன்மையை விஞ்ஞானிகள் அறிந்து அது பாதிப்பை ஏற்படுத்துமானால் எச்சரிக்கைத் தகவல்களை அனுப்புவார்கள்.
இத்தகவலை சுனாமி உருவான 3 நிமிடத்தில் வெவ்வேறு நாடுகளில் உள்ள அலுவலகங்களுக்கு சென்றுவிடும். ஆனால், சுனாமி அலைகள் உருவான இடத்துக்கும் கரைப் பகுதிக்கும் உள்ள தூரத்தைப் பொறுத்துத்தான் அலைகளின் தாக்குதல் வேகம் மற்றும் நேரம் அமையும்.
நிலநடுக்கம் ஏற்படும் போதெல்லாம், சுனாமி குறித்த பயம் இனி ஆசிய நாடுகளின் கடலோர பகுதி மக்களுக்கு ஏற்படும். இதைத் தடுக்க தெற்காசியாவுக்கான சார்க், தென்கிழக்கு ஆசிய நாடுகளான பிம்ஸ்டெக், ஆப்ரிக்க-ஆசிய கூட்டமைப்புகள் இந்தியாவுடன் இணைந்து கடலில் சுனாமி எச்சரிக்கை அமைப்புகளை நிறுவ வேண்டும். அதை சர்வதேச சுனாமி எச்சரிக்கை அமைப்புக்கு கீழ் கொண்டு வரவேண்டும். எதிர்காலத்தில் பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய நாடுகளை பட்டியலிட்டு அந்நாடுகள் அனைத்தையும் இந்த பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரவேண்டும்.

[தொகு] படங்களின் தொகுப்பு

 

Saturday, March 05, 2011

சிந்துவெளிக்கும் தமிழகத்துக்குமான உறவு!

Relationship between Tamil and Indus Valley Civilization - Tamil Literature Ilakkiyam Papers உலகின் தொன்மையான நாகரிங்களில் மிகப் பெரியதும் பல துறைகளில் சிறந்ததும் சிந்துச் சமவெளி நாகரிகம் ஆகும். ஆனால், உலகின் பிற தொன்மை நாகரிகங்களுக்கு நேராத அவலம் தமிழர் நாகரிகமான சிந்துவெளிக்கு நேர்ந்து வருகிறது. எகிப்து நாகரிகம் எகிப்தியருடையத் சீன நாகரிகம் சீனருடையத் கிரேக்க நாகரிகம் கிரேக்கருடையது என்பதில் எந்தக் குழப்பமும் இல்லை. ஆனால், சிந்துவெளி நாகரிகம் யாருடையது என்பதில் இந்துத்துவவாதிகள் ஏற்படுத்தி வரும் குழப்பங்களுக்கு அளவே இல்லை. சிந்துவெளியை "வேதகால நாகரிகம்" என்று கூசாமல் எழுதியும் பேசியும் வருகின்றனர் இந்துத்துவவாதிகள். திராவிட மாயைக்குள் சிக்கியவர்களோ, "அது திராவிட நாகரிகம்" என பொருந்தாப் பொய்யை உரைத்து வருகின்றனர். சிந்துவெளியைப் பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளும் போதெல்லாம், "பழங்கதை பேசுவதால் என்ன பயன்?" என்று கேலி செய்யும் வழக்கம் ஒருபுறம்.
கடந்தகால வரலாற்றைப் பயிலாமல் புதிய வரலாறு படைக்க இயலாது என்பதே சமூக அறிவியல். சிந்துவெளி நாகரிகம் என்பதே, ஆரியருக்கு எதிரானது. ஆரியரை எதிர்த்துப் போரிட்ட தமிழரின் வரலாறு. ஆரியரின் யாகங்களை சிந்துவெளித் தமிழர் எதிர்த்தனர். ஆரியருக்கும் தமிழருக்குமான பகை சிந்துவெளியிலேயே தொடங்கிவிட்டது. இந்த உண்மைகள் ஆய்வுகளின் அடிப்படையில், மறுக்கவியலா வண்ணம் முன் வைக்கப்பட்டால் மட்டுமே இன்றைய தமிழினம் தன் பகையை எதிர்த்துப் போராடும்.
இந்த அடிப்படையில்தான் சிந்துவெளிக்கும் தமிழகத்துக்குமான உறவு குறித்த இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
சிந்துச் சமவெளி நாகரிகம் தமிழர் நாகரிகம் என்பதற்கான சான்றுகள் ஏராளமாக வெளி வந்துள்ளன. ஆயினும், சிந்துச் சமவெளிக்கும் தமிழகத்திற்குமான உறவு / தொடர்பு குறித்த சான்றுகள் ஏதும் இல்லாத நிலை கடந்த காலத்தில் நிலவியது. ஆய்வுலகில் இது ஒரு குறையாகவே கருதப்பட்டது.
டார்வின் வடித்த பரிணாமக் கோட்பாட்டில் "விடுபட்ட இணைப்பு" என்ற ஒரு குறை நீண்ட காலமாக நிலவியது. மனிதக் குரங்கு மனிதனாக மாறிய நிலையை அவரால் சான்று காட்டி நிறுவ முடியாமல் போனது. அதாவது, அவ்வாறான இரட்டை நிலையில் (குரங்கின் தன்மையும் மனிதத் தன்மையும் கலந்த நிலை) உள்ள விலங்கின் படிமம் எதையும் அவரால் கண்டறிய இயலவில்லை. இந்த விடுபட்ட இணைப்பு, டார்வின் மரணத்திற்குப் பிறகும் புதிராகவும் சவாலாகவும் நீடித்தது. கடந்த 2002 ஆம் ஆண்டு, எத்தியோப்பியாவில் அந்த விடுபட்ட இணைப்பிற்குத் தொடர்பு கிடைத்துவிட்டது. டார்வினுக்குக் கிடைக்காத அந்த இரட்டை நிலை விலங்கின் படிமங்கள் எத்தியோப்பியாவில் கண்டறியப்பட்டன. டைம் இதழ் இது குறித்த விரிவான கட்டுரையை அப்போது வெளியிட்டது.
சிந்துவெளிக்கும் தமிழகத் துக்குமான விடுபட்ட இணைப்பு, இணைக்கப்படும் அளவுக்கான ஆய்வுகள் தற்போது வெளிவரத் தொடங்கிவிட்டன. இது தமிழர் வரலாற்று ஆய்வுகளில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த வளர்ச்சியாகும்.
சிந்துவெளியில் வாழ்ந்தவர்கள் தமிழர்கள்தான் என்பதைப் பல்வேறு ஆய்வாளர்களும் உறுதி செய்துள்ளனர். சிந்துவெளி எழுத்துகளின் ஒலி வடிவம், தமிழில் இன்றும் புழங்கும் சொற்களுடன் கூடியவையாக உள்ளன.
"சிந்துவெளிப் பண்பாடும் சங்க இலக்கியமும்" என்ற நூலை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்நூல் முனைவர் ஐராவதம் மகாதேவன் எழுதிய ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம் ஆகும். இந்நூலில் அவர் குறிப்பிடத்தக்க சான்று ஒன்றை விளக்கியுள்ளார். அவரது ஆய்வின் வெளிச்சத்தில், சிந்துவெளிக்கும் தமிழகத்துக்குமான உறவு நிலைகளை முன் வைக்கிறேன். முனைவர் ஐராவதம் மகாதேவன், சிந்துவெளிப் பண்பாட்டுக் கூறுகளை "இந்து மதத்தோடு" தொடர்பு படுத்துகிறார். இக்கருத்தை இக்கட்டுரை ஏற்கவில்லை. இது குறித்து வேறு வாய்ப்பில் விரிவாகக் காணலாம்.
கபிலர் பாடிய இருங்கோவேள்
கடையெழு வள்ளல்களில் ஒருவரான பாரி போரில் மரணமடைந்த பிறகு, பாரியின் நண்பரும் அறிவாளருமான கபிலர், பாரியின் இரு மகள்களான அங்கவை சங்கவை ஆகியோரை அழைத்துக் கொண்டு பறம்பு மலையிலிருந்து வெளியேறுகிறார். பாரி மகளிரைத் திருமணம் செய்துகொள்ளும்படி, எருமை நாட்டுத் துவரை நகரில் அரசாண்ட இருங்கோவேள் எனும் மன்னனைச் சந்திக்கிறார் கபிலர். எருமை நாடு என்பது, இன்றைய மைசூர் ஆகும். எருமை நாடு, என்பது பழந்தமிழப் பெயர். எருமை என்பதை வட மொழியில் மகிஷம் என்றாக்கினர். மகிஷ நாடு, பின்னாளில் மைசூர் ஆனது. துவரை நகரம் எனச் சங்க இலக்கியங்கள் குறிக்கும் நகரம் இன்று மைசூர் அருகே உள்ள துவாரகா நகரமே ஆகும். எருமையூர் மகிசூர் என்றாகி, மைசூர் ஆனதுபோல், துவரை நகரம், துவாரகா ஆகிவிட்டது.
துவரையில் இருந்த இருங்கோவேளைச் சந்தித்து, கபிலர் தமது வேண்டுகோளை முன் வைக்கிறார். அதன் சுருக்கம்:
"இருங்கோவேளே... என்னுடன் வந்துள்ள இவர்கள் யார் என்றால், பறம்புத் தலைவன் பாரியின் மகளிர். நான் இவர்கள் தந்தையின் தோழன். நீ யார் தெரியுமா? வடக்கில் வாழ்ந்த முனிவனது பெரும் மண் பாண்டத்தில் தோன்றிய வேளிர் பரம்பரையின் நாற்பத்து ஒன்பதாம் வாரிசு நீ. உன் முன்னோரான வேளிர், வடக்கே... செம்பினால் கட்டியது போன்ற உயரமான மதில் சுவர்களையுடைய துவரை என்னும் நகரை ஆண்டவர்கள்.
யாரும் நெருங்க அச்சப்படும் வீரனே! புலியைக் கொன்றவனே (புலிகடிமாலே)! இந்த மகளிரை ஏற்றுக் கொள்வாயாக!"
- இந்தப் பாடலில்தான் சிந்து வெளிக்கும் தமிழகத்துக் குமான இணைப்பு ஒளிந்துள்ளது.
கபிலர் இருங்கோவேளின் முன்னோர் குறித்து உரைத்த சேதி,
"நீயே வடபால் முனிவன் தடவினுள் தோன்றி" என்ற வரியில் தொடங்குகிறது.
"வடபால் முனிவன்" யார் என்பதில் கடந்த காலத்தில் பல முரண்பட்ட முடிவுகள் முன்வைக்கப்பட்டன. வடக்கே வாழ்ந்த முனிவர் ஒருவர், அங்கிருந்த துவரை நகரை ஆண்ட வேளிர்குலத்தவரைத் தமிழகத்துக்கு அழைத்து வந்தார் என்பதே பாடல் கூறும் சேதி.
"வடபால் முனிவன் தடவினுள் தோன்றி" என்றால், வடக்கே வாழ்ந்த முனிவனது "பெரும் மண் பாண்டத்தில் தோன்றி" என்று பொருள். பல உரையாசிரியர்கள் தடவினுள் என்பதற்கு, 'ஓமகுண்டத்தில்' என்று தவறாகப் பொருள் கூறினர். 'தட' என்பது மண் பாண்டத்தைக் குறிக்கும். சிந்துவெளியின் சின்னங்களில் மண்பாண்டம் ஒன்றாகும். மேலும், தொல் பொருள் ஆய்வுகளில் 'தட' என்பது மண்பாண்டத்தையே குறிப்பதாக முனைவர் ஐராவதம் மகாதேவன் நிறுவியுள்ளார்.
வடபால் முனிவன் என்பவர், அகத்தியர்தான் என்பதே இக் கருத்தின் அடிப்படை. அகத்தியர் குறித்த தகவல்களில் இந்த இடத்திற்குப் பொருத்தமானது ஒன்றைக் காண்போம்.
துவரை என்பது வட நாட்டில் கண்ணன் ஆட்சி செய்த நகரம் அல்லது நாடு. அகத்திய முனிவர், கண்ணனிடமிருந்து 12 வேளிர்குலத்தவரை, தென்னாடு அழைத்து வந்தார் என்பது நச்சினார்க்கினியார் விளக்கம். அகத்தியர் வடக்கே இருந்து வந்தவர் என்பதைத்தான் ஏறத்தாழ எல்லா புராணங்களும் கூறுகின்றன.
கண்ணன் தமிழன்
நச்சினார்க்கினியரின் குறிப்பிற்கும் கபிலரின் பாடலுக்கும் நேரடி உறவே உள்ளதைக் கவனிக்கலாம்.
அதாவது, துவரையை ஆண்ட கண்ணன் ஏதோ ஒரு காரணத்திற்காக அகத்திய முனிவரை அழைத்து, 12 வேளிர் குலத்தவரைத் தென்னாட்டுக்கு அனுப்பினார். இதைத்தான் கபிலர், "வடபால் முனிவர் தடவினுள் தோன்றி" என்கிறார். மண்பாண்டம் என்பது அகத்தியருக்கான குறியீடு. அக்கால, சிந்துவெளி எழுத்துக்கள் சித்திர வகைப்பட்டவை. சித்திரங்களின் வழிதான் அவர்கள் மொழியைப் பதிவு செய்தார்கள். அதன்படி, மண்பாண்டம் அல்லது கும்பம் என்பது அகத்தியரைக் குறிக்கும் என்பது முனைவர் ஐராவதம் மகாதேவன் ஆய்வு முடிவு.
இந்த இடத்தில் வேறொரு வரலாற்று ஆய்வையும் நாம் காண வேண்டும். சிந்துவெளியில் வாழ்ந்த தமிழர்களின் நகரங்களை அழித்தொழித்த ஆரியர்கள், அடுத்ததாக கங்கைச் சமவெளிக்கு வந்தார்கள். அங்கே இருந்த நகரம் துவரை என்பதாகும். அதாவது, இன்றும் துவாரகா எனப்படும் நகரமே அக்கால துவரை. துவரையின் மன்னன் கண்ணன். கண்ணனைப் பற்றிய குறிப்பை, ஆரிய வேதங்களின் மூலங்களில் ஒன்றான பாகவதம் பதிவு செய்துள்ளது. பாகவதம், கண்ணனை 'தாச யாதவன்' என்கிறது. சிந்துவெளி மக்களையே ஆரியர் தாசர் என்றனர். தாசர் என்றால், வள்ளல் என்று பொருள். பின்னாளில் தாசர் என்றால், அடிமை என ஆரியரால் பொருள் மாற்றப்பட்டது என்ற கருத்தை ஆய்வாளர் கோசாம்பி முன் வைத்துள்ளார். (சிந்து முதல் குமரி வரை - குருவிக்கரம்பை வேலு) ஆக, தாச இனத்தைச் சேர்ந்தவனே கண்ணன். இந்தக் கண்ணன் ஆண்ட நகரம் துவரை!
கண்ணன், தமிழ் இனத்தைச் சேர்ந்த மன்னன் என்பது இக்கருத்தால் உறுதிப்படுகிறது. கண்ணன் மற்றும் அவனது மக்களின் நிறம் கருப்பு என்பதை பாகவதம், ரிக் வேதம் ஆகியன மிகத் தெளிவாகப் பதிவு செய்துள்ளன. கண்ணனது படைகளுடன் ஆரிய இந்திரன் படைகள் போரிட்டுத் தோற்றதாக பாகவதம் கூறுகிறது. போரில் ஆரியர் வென்றதாகவும் கண்ணன் படை தோற்றதாகவும் ரிக் வேதம் கூறுகிறது.
"கண்ணன் கருப்பு நிறத்தவன் தாச இனத்தவன். அவனுக்கும் ஆரியருக்கும் போர் நடந்தத் ஆரியர் தலைவன் இந்திரன்" ஆகிய தகவல்களை ஆரியரின் வேதங்களே ஏற்றுக் கொள்கின்றன. ஆகவே, கண்ணன் ஆரியன் அல்லன் என்பது மிகத் தெளிவானது. மேலும், அவன் தமிழன் என்பதற்கான புறச் சான்றுகளும் உள்ளன.
அகத்தியர், அக்கால அறிவாளர்களில் தலைமைத்துவம் வாய்ந்தவர். தமிழரின் பேரரசியல் நடவடிக்கைகளில் அவருக்கு முக்கியப் பங்குண்டு. ஆனால், அகத்தியரை ஆரிய முனிவர் என்று, ஆரிய வேதங்கள் சொந்தம் கொண்டாடத் தொடங்கின. அவை, அகஸ்தியர் என்று அவரை அழைத்தன. ஆய்வறிஞர் டி.டி.கோசாம்பி, அகத்தியரை சிந்துவெளியோடு தொடர்புடையவராக இருக்கலாம் என்று முடிவு செய்துள்ளார். (பண்டைய இந்தியா - அதன் பண்பாடும் நாகரிகமும் பற்றிய வரலாறு).
அகத்தியரோடு தொடர்புடைய 'தட' குறித்து கோசாம்பியும் விளக்கியுள்ளார். தட என்பது மண்பாண்டத்தைக் குறிக்கும் எனக் கண்டோம். மண்பாண்டம் என்பது, பொருண்மையான சொல். நடைமுறையில் - அகத்தியரைக் குறிக்கையில், இது கும்பம் ஆகும். அதாவது, அகத்தியரின் சின்னம் கும்பம். கும்பம் என்பது கருப்பையின் குறியீடு என்கிறார் கோசாம்பி. பண்டைய பண்பாடுகளை ஆய்பவர்களுக்கு குறியீட்டு மொழி விளங்க வேண்டும். இது அடிப்படையானதும் இன்றியமையாததும் ஆகும். ஏனெனில், அக்கால மக்கள் தமது பண்பாட்டு நடவடிக்கைகளை உரைநடையாக எழுதவில்லை. புனைவுகளாகத்தான் பதிவு செய்தனர். இன்று உள்ளது போல, மொழியின் எழுத்துரு வளர்ச்சியும் அக்காலத்தில் இல்லை. ஆகவே, குறிப்பிட்ட கருத்தை அவர்கள் ஏதேனும் குறியீடாக வரைந்து வைத்தனர். சான்றாக, தாமரை இதழ்கள், பிளந்த மாதுளைப் பழங்கள் ஆகியவை, பெண்ணின் பிறப்பு உருப்பைக் குறிக்கும் குறியீடுகள். இது போலவே, கும்பம் என்பது கருப்பையின் குறியீடு.
அகத்தியரின் குறியீடு கும்பம் என்பதால், அவரது பிறப்பு ஏதோ ஒரு தாய் தெய்வ வழிபாட்டுச் சமூகத்துடன் தொடர்புடையது என்ற கருத்தைக் கோசாம்பி முன்வைக்கிறார். சிந்துவெளித் தமிழர் தாய் தெய்வ வழிபாட்டைக் கொண்டிருந்தனர். ஆரியர், இதைக் கடுமையாக எதிர்த்தனர். ஆகவே, அகத்தியர் சிந்துவெளியோடு நெருங்கிய உறவு கொண்ட தமிழரே, என்பதை உறுதிபடக் கூறலாம்.
மீண்டும் கண்ணனிடம் வருவோம். நச்சினார்க்கினியார் குறிப்பில் வரும் வேளிரை கண்ணன் ஏன் தென்னாட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற கேள்வி இயல்பானது. மேலும், அவ்வாறு அனுப்பப்பட்ட வேளிர் குலத்தவர் எருமை நாட்டில் ஆட்சி செய்யும்போது, அங்கும் ஒரு நகரத்துக்கு துவரை என ஏன் பெயரிட வேண்டும் என்ற கேள்வியும் தவிர்க்க இயலாதது.
ஆரியருக்கும் தமிழருக்கும் நடந்த போரின்போது ஏதோ ஒரு தவிர்க்க இயலாத சூழலில், துவரை மன்னன் கண்ணன் அங்கிருந்த வேளிர்குலத்தவரில் 12 பேரைத் தமிழகத்துக்கு அனுப்பிவிட்டான். இப்பணியை மேற்கொள்ள அவன் அகத்திய முனிவரது உதவியை நாடியுள்ளான். அவ்வாறு தமிழகம் வந்த 12 வேளிர் குலத்தவரும் காடு அழித்து துவரை நகரை உருவாக்கி ஆட்சிசெய்தனர். அந்தப் பரம்பரையில் 49 ஆம் வாரிசாக வந்தவனே இருங்கோவேள். அவனிடமே கபிலர் பாரி மகளிரை அழைத்துச் சென்றார். அவனைப் பற்றிப் புகழ்ந்து கூறும்போது, அவனது குலப் பெருமையாக, "நீயே வடபால் முனிவன் தடவினுள் தோன்றி" என்றார். இதுவே விடையாக இருக்க முடியும்.
இந்தக் கூற்றை வலுப்படுத்த மேலும் ஒரு சான்று உள்ளது. கபிலரே அந்தச் சான்றையும் விட்டுச் சென்றுள்ளார்.
அழிந்த நகரங்கள்
இருங்கோவேள், பாரி மகளிரை ஏற்க இயலாதென மறுத்துவிட்டான். இதனால் கோபம் கொண்ட கபிலர் அவனை நோக்கிப் பின்வருமாறு பாடினார்
"உன் முன்னோர் வாழ்ந்த சிற்றரையம் பேரரையம் ஆகிய இரு நகரங்கள் அழிந்துபோயின. அந்த நகரங்களில் பொன்னும் பொருளும் குவிந்து கிடந்தன. ஆயினும் அவற்றின் அழிவைத் தடுக்க முடியாமல் போனது. காரணம் என்ன தெரியுமா? கழாத்தலையார் என்ற புலவர் ஒருவரை உன் முன்னோர் அவமதித்தனர். அதன் விளைவுதான் இந்த நகரங்களின் அழிவு" என்கிறார் கபிலர். (புறநானூற்றில் சில பாடல்களை இயற்றிய கழாத்தலையார் வேறு. கபிலர் குறிப்பிடும் கழாத்தலையார் வேறு)
இருங்கோவேளின் முன்னோர் வடக்கே வாழ்ந்தவர்கள். அவர்களது இரு நகரங்கள் அழிந்தன. இதைக் கபிலர் "நீடுநிலை அரையத்துக் கேடு" என்கிறார். அரையம் என்றால், பெரும் நகரம் என்று பொருள். அரையம் என்பதன் திரிந்த வடிவமே அரப்பா என்ற கருத்து ஆய்வுலகில் நீண்ட காலமாக உள்ளது. முனைவர் ஐராவதம் மகாதேவன் இக்கருத்தையும் கணக்கில் கொள்ளலாம் என்கிறார்.
மேலும், கபிலர் பாடலில் உள்ள நகரங்கள் வடக்கே இருந்தவைதான் என்ற கருத்தில் நிற்கின்றன. ஆகவே, வேளிர் குலத்தவரின் முன்னோர் சிந்துவெளியில் அரசாண்டவர்கள் என்பதும், அவர்களது நகரங்கள் அழிக்கப்பட்டன என்பதும் தெளிவாகிறது.
வேளிர் என்பது, வேளாளர் என்பதன் முந்தைய சொல். வேளிர் குலத்தவர், வேளாண் குடியினர் ஆவர். வேளாளர் / வேளிர் என்ற சொல், எந்தச் சாதியையும் குறிக்கவில்€ல் அக்காலத்தில் சாதி அமைப்பும் நிலவவில்லை.
சிந்துவெளியின் முக்கியத் தொழில் வேளாண்மையே ஆகும். சிந்து ஆற்றின் குறுக்கே சிந்துத் தமிழர் அணைகள் கட்டி வேளாண்மை செய்தனர். அந்த நாகரிகம் ஆரியரால் அழிக்கப்பட்ட போது, அங்கிருந்து தப்பிய வேளிர் குலத்தவர், துவரையை ஆண்ட கண்ணனிடம் வந்திருக்க வேண்டும். கண்ணன், கால்நடைச் சமூகத் தலைவன். பண்டைய ஆரியப் பாடல்கள் கண்ணனை, 'தாச யாதவன்' என்கின்றன.
கண்ணன், வேளிருக்கு உதவி செய்து அகத்தியருடன் அவர்களைத் தமிழகத்துக்கு அனுப்பியிருக்க வேண்டும். தமிழகம் வந்த வேளிர் குலத்தவர், எருமை நாட்டைத் தேர்ந்தெடுத்து, அங்கிருந்த காட்டை அழித்து, வேளாண் தொழிலில் ஈடுபட்டு, அரசு அமைத்திருக்க வேண்டும். கண்ணன் ஆண்ட துவரை நகரிலிருந்து வந்ததால், பன்னிரு வேளிரும் தமது புதிய நகரத்துக்கும் "துவரை" என்றே பெயரிட்டிருக்க வேண்டும்.
இந்தக் கருத்துக்களையே கபிலர் பாடல்களும் பிற அறிஞர் ஆய்வுகளும் உணர்த்துகின்றன.
தமிழின் மிகத் தொன்மை வாய்ந்த அறிவாளரான அகத்தியர் இயற்றிய நூல் "அகத்தியம்" என்பதாகும். தொல்காப்பியத்துக்கும் முந்தையதான அந்நூல் அழிந்து விட்டது. சித்தர் மருத்துவ அறிவியலின் தந்தை அகத்தியரே ஆவார். எருமை நாட்டில் வேளிரை அரசாளச் செய்த அகத்தியர், வேளாண் விளை நிலங்களை உருவாக்க காவிரி ஆற்றிலிருந்து கிளைகளை வெட்டும் திட்டத்தில் பங்காற்றியிருக்க வேண்டும். "அகத்தியர்தான் காவிரி நீரை உருவாக்கினார்" என்ற கதை நீண்ட காலமாக நிலவுகிறது. இக்கதை புராணங்களின் வடிவில் கூறப்படுவதாலேயே புறக்கணித்துவிடக் கூடாது.
பொதுவாகவே, புராணங்களின் கற்பனைகளுக்கு இடையே வரலாற்று உண்மைகள் மறைந்தும் திரிந்தும் இருக்கும். ரிக் வேதத்தின் மந்திரங்களின் வழியேதான், சிந்துவெளித் தமிழரின் ஆரிய எதிர்ப்புப் போரை அறிந்து கொள்ள முடிகிறது. இலியட், ஒடிசி ஆகிய கிரேக்க இதிகாசங்களின் கற்பனைக் கதைகளின் ஊடாகவே கிரேக்க வரலாறு எழுதப்பட்டது.
சிந்துவெளிக்கும் தமிழகத்துக்குமான உறவில் இந்தக் குறிப்புகள் பல புதிய ஆய்வுகளை நோக்கி அழைத்துச் செல்லப் போகின்றன என்பதை உணர முடிகிறது.
சிந்துவெளிப் பண்பாட்டின் உன்னதமான கூறுகளை, மடை மாற்றி இந்துப் பண்பாட்டுக்குள் அடைக்கும் முயற்சிகள் நீண்ட காலமாகவே நடக்கின்றன. உண்மையில், இந்துத்துவம் எனும் தத்துவத்தின் ஆரிய மூலத்தை எதிர்த்தவர்களே சிந்துவெளித் தமிழர். இன்றும் இந்துத்துவத்தைத் தத்துவார்த்தமாகவும் நடைமுறையிலும் எதிர்க்கும் இனமாக தமிழ் இனமே உள்ளது. இந்த முரண்பாட்டை, ஆரியமயப்படுத்தவே ஆரியம் தொடர்ந்து முயற்சிக்கிறது. அகத்தியரை, ஆரிய முனிவர் ஆக்கியது போல, சிந்து வெளியையே, இந்துப் பண்பாட்டின் சின்னமாக மாற்றத் துடிக்கிறது ஆரியம்.
முனைவர் ஐராவதம் மகாதேவன், தமது ஆய்வின் முன்னுரையில், சிந்துவெளியில் இருந்த நீச்சல் குளத்தை, "இன்றைய இந்துமதக் கோயில் குளங்களின் முன்னோடி வடிவம்" என்கிறார். சிறப்பான ஆய்வுகளை மேற்கொள்ளும் ஆய்வாளரே, இவ்வாறான பிழையான / உள்நோக்கமுள்ள முடிவுகளை முன் வைப்பதைக் கவனிக்க வேண்டும். தமிழிய ஆய்வுலகம் இது போன்ற சதிகளை முறியடித்து வெற்றிகாண வேண்டும். தமிழ் இன உணர்வாளர்கள் தமிழிய ஆய்வுலகை ஆதரிக்க வேண்டும்.
கட்டுரை: ம.செந்தமிழன்
நன்றி: தமிழ்த் தேசிய தமிழர் கண்ணோட்டம்

பாரதிதாசன் - எதிர் மதிப்பீடுகள் பற்றிய மதிப்பீடு

Tamil Literature Ilakkiyam Papers பாரதிதாசன் சமூக மாற்றத்தை விரும்பிப்பாடிய கவிஞர். அவர் விரும்பிய சமூக மாற்றங்கள் மிக மெல்லவே இன்றும் அரும்பி வருகின்றன. ஆயினும், சமூக மாற்றத்திற்கு எதிராக சக்திகள் இன்னும் வலிமையாகவே உள்ளன. இந்திய மக்கள் தொகையில் 70 விழுக்காடு பிற்படுத்தப்பட்ட வகுப்பினரே அன்மையில் அவர்களுக்கு மைய அரசு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு தந்திருப்பதை எதிர்த்து வட இந்தியாவில் கலவரம் வெடிக்கிறது. ஆதிக்க சக்திகளும் அவர்களின் கையிலுள்ள தகவல் தொடர்பு சாதனங்களும் பதறுகின்றன, துடிக்கின்றன. கலவரத்தைத் தூண்டுகின்றன. இதன் மூலம் சமூக நீதியை நோக்கிய பயணம் எவ்வளவு கடுமையானது என்பதனை இன்று கூட நாம் நன்றாக உணருகிறோம்.
இந்தச் சூழ்நிலையில் பாரதிதாசனைப் பற்றி தமிழ்நாட்டில் நிலவிய, நிலவுகின்ற கருத்துக்களைத் தொகுத்துப்பார்ப்பது, பயனுள்ளதாக இருக்கும். தான் வாழ்ந்த காலத்திலேயே மிகப்பெரிய அளவு வரவேற்பையும் மிகப் பெரிய அளவு எதிர்ப்பையும் சந்திக்கின்ற வாய்ப்பு பாரதிதாசனைப் போல் வேறு எந்த கவிஞருக்கும் கிட்டவில்லை. ஏன் பாரதிக்குக்கூட கிட்டியதில்லை. தமிழ் என்பது இழிசாதியினரின் மொழி என்ற உணர்வு ஆழ வேரூன்றி நான்கைந்து நூற்றாண்டுகளுக்குப் பிறகு, தமிழ் மட்டுமே அறிந்த ஒரு கவிஞருக்கு உரிய மதிப்பினைப் பெற்றுத்தந்தவர் பாரதிதாசன்.
தமிழ்நாட்டில் பாரதிதாசனைப் பற்றி எதிர் மதிப்பீடு செய்தவர்களை மொத்தத்தில் மூன்று வகையாகப் பகுக்கலாம்.
1. நிகழ்காலத் தமிழர்களுக்கு கவிதை என்றால் என்னவென்று தெரியவில்லை. அவரது கவிதைகள் வெறும் சொல்லடுக்குகளே. எனவே பாரதிதாசன் கவிஞரல்லர். - இது முதல் வகை.
2. பாரதிதாசன் நன்றாகக்கவிதை எழுதுவர் தான், ஆனாலும் ஒரு கவிஞனுக்கு இருக்கக்கூடாத முரட்டுப் பண்புகளும், நாத்திகரும், அவரது கவிதைகளில் இருந்தன. எனவே அவர் முழுமையான கவிஞரல்லர். - இது இரண்டாவது வகை.
3. பாரதிதாசன் கொண்டிருந்த பிராமண வெறுப்பு கவிஞர் என்ற அவரது ஆறாமையைச் சிதைத்துவிட்டன. இன வெறுப்புக் கொள்கை காரணமாக வர்க்க உணர்வு அவரிடம் போதுமான அளவு இல்லை. - இது மூன்றாவது வகை.
பாரதிதாசனை மதிப்பீடுபவர்களில் முதல் வகையினரை எடுத்துக் கொள்வோம்.
மத்திய ஐரோப்பாவில் ஜிப்கா நாட்டின் "டின்பன்" என்ற கவிஞன் ஒரு குப்பைத் தொட்டிக்கு அருகிலே ஓடிய பூரானோடு பேசிய கவிதை உலகின் தலைசிறந்த கவிதை என்பர். இந்த ஞான ஆரியன்கள். தமிழர்கள் திருந்துவதற்காக மிகச்சிறிய பத்திரிகைகளை நடத்துவர், அப்பொழுதும் இலக்கியத்தில் சிலவற்றைக் காப்பியடிப்பர். இனி மேலாவது டின்பன் கவிதையைத் தமிழர்களே படியுங்கள் என்று தமிழர்களுக்காக அதை மொழிபெயர்ப்பர். பாரதிதாசனின் "கொலை வாளினை எடடா" என்பது போன்ற வடுகளும், "உதையப்பர்" "கொடுந்தடியர்" முதலிய சொல்லாட்சிகளும், கவிதையின் மேன்மையைக் கெடுத்துவிட்டன. என்பது இவர்களின் வாதம். மார்க்சைக் கூடச்சிறுபிள்ளையாக மதிக்கும் இவர்களுக்குப் பதில் சொல்லி நமக்குப் பொழுது விடியாது. இவர்களின் மன "அவசங்கள்" தேசத்தையே நாள அடிக்கும் வல்லமை பெற்றவை.
பாரதிதாசனை மதிப்பிடுபவர்களில் இரண்டாவது வகையினரை எடுத்துக் கொள்வோம்.
இவர்கள் "வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடி" அதற்குத் தண்ணீர் விடவும் மறந்து மனம் கசிந்து போனவர்கள், வண்ணச்சரபம் தண்டபானி சுவாமிகள் என்பவர் புலமை இலக்கணம் என்ற தமது கவிதையில் இவர்களுக்காகவே ஒருதலைக் கோட்பாட்டை தந்திருக்கிறார். "நாத்திகள் என்பான் கவிஞன் ஆகன்" இதைப் பற்றிக் கொண்ட இவர்களுக்கு,
"கடவுள் என்ற நாமதேயம் சுழறிடாத நாளிலும் உலகும் முற்றும்
பொதுமையாக உலகு நன்கு வாழ்ந்தது
கடையர் செல்வர் என்றபேதம் கடவுள் பேர் இழைத்ததே"
என்ற பாரதிதாசனனின், கவிதை வரிகள் அவர்களால் மன்னிக்கப்படவே முடியாத ஒன்று.
ஆயினும் உண்மை என்ன?
கருணையில்லா ஆட்சி துடிது ஒழிக என்று இராமலிங்க அடிகளும்,
"ஜகத்தினை அழித்திடுவோம்"
"தண்டச்சோறு உண்ணம் பாரப்பு"
"பாயுங்கடி நாய்ப்போல்சுக்காரப்பார்ப்பான்"
என்று பாரதியாரும் தமிழ்க் கவிதை மரபு விலக்கிய சொற்களையெல்லாம் தங்கள் கவிதைகளில் புழங்கி இருக்கின்றனர்.
வாழ்க்கை வீதிப்புழுதியிலும் சாக்கடையிலும் கிடக்கும் பொழுது வாழ்க்கையின் வினை பொருளான கவிதை மென்மைச் சொற்களும் மேன்மைச் சொற்களும் கொண்டதாக இருக்க முடியாது. ஒரு அறத்தை நிறுவி அதை மீறியவர்கள் இழிவடையவர் எனும் கருத்தைச் சொல்ல வரும் பொழுது "இத்தருமத்துக்கு அகுதம் செய்வான் தன் தாய்க்கு மிணாளன் ஆன பாவத்தை அடைய கடவான்" என்ற வாசகத்தைத் தாங்கிய கல்வெட்டுகள் தமிழ்நாட்டில் நிறைய இருக்கின்றன. அந்தக்காலச் சமுதாயம் நாகரிகமற்றது என்று இவர்கள் சொல்லுவார்களா? சொல் புனிதமானது அல்ல. ஒரு சமூகம் தன் அனுபவத்துக்கு ஏற்பவே தன்னுடைய சொற்களைத் தேர்ந்தெடுக்கிறது. எனவே சொல்லிலும், எழுத்திலும் இவர்கள் காட்ட விரும்புகின்ற பண்பாடு போலித் தனமானது. மேல் தட்டு மனப்பான்மை உள்ளது. அதைப் போலவே நாத்திக வாதம் தமிழிலக்கியத்திற்கு புதிய செய்தியன்று. கடவுளை மறுத்த சமயங்களான சமணமும், பௌத்தமும் தமிழ்நாட்டில் செழித்திருந்ததும், தமிழிலக்கியத்தை வளப்படுத்தியதும் வரலாற்றுச் செய்திகளாகும்.
மற்றுமொரு செய்தி பாரதிதாசனின் நாத்திய உணர்வு சமூக நீதிக்கான தேடலில் விளைந்ததாகும். குமரகுருபரன் என்ற தமிழ்ப்புலவன் பாட்டுக்கு மீனாட்சியம்மை குழந்தையாக வந்து முத்துமாலை பரிசளித்தாள் என்பதை உணர்வுப் பூர்வமாகப் பாரதிதாசன் ஏற்றுக்கொண்டார். மீனாட்சிக் குழந்தை தமிழ்ப்புலவனுக்குப் பரிசளித்து மறைந்த காட்சியைப் பாடும் போது "கூட்டத்தில் இல்லை வந்த குழந்தையாம் தொழும் சிமாட்டி", என்றே அவர் பாடுகிறார். தன் தாய்மொழிக்கு சமூக நீதி மறுக்கப்பட்ட போது அதை எதிர்த்துப் போராடிய யாரையும் நான் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருந்தார் பாரதிதாசன். இதை உணராத காரணத்தால் தான் இத்தகை திறனாய்வாளர்கள் 1960 வரை பாரதிதாசன் மீது நிகழ்ந்த பழி தூற்றுப்படலத்திற்கு இரையாகிப் போனார்கள். கிணற்றுத் தவளைகளான இவர்களையும் இவர்களின் விமர்சனைகளையும் பாரதிதாசனைப் பொருத்தவரை விலக்கியே வைக்க வேண்டும்.
இனி மூன்றாவது வகையினரைக் காண்போம். இவர்கள் பொதுமை உணர்வு உடையவர்கள். ஆனால் இவர்களுக்குக் கிடைத்த பொதுவுடைமைக் கல்வி கலப்படம் நிறைந்தது. பாரதிதாசனின் பிராமண்ய எதிர்ப்புணர்வினை இன்றளவும் இவர்களால் செரித்துக் கொள்ள முடியவில்லை. ஆனால் பாரதிதாசனின் பிராமண்ய எதிர்ப்புணர்வு சமூக நீதிக்காணப் போராட்டம்தான். அதை ஓரளவு பாரதியிடமிருந்தும், பேரளவு பெரியாரிடமிருந்தும் பாரதிதாசன் பெற்றுக் கொண்டார்.
மக்களுக்காக மக்கள் வரிப்பணத்தில் நடக்கும் தொலைக்காட்சியில் ஆறு வாரகாலம் வேதம், சிரார்த்தம், தர்ப்பணம், ஆகியவற்றின் பெருமை, அவற்றை உடைய பிராமணர்களின் பெருமை ஆகியன தொடர்ந்து ஒளிபரப்பப்படுகின்றன. இவர்களும் இவர்களின் பொதுவுடைமை உணர்வும், இந்தக் கொடுமையை நோக்கிச் சுட்டுவிரலைக்கூட அசைத்ததில்லை.
இந்தியாவில் சாதிக்கும் வர்க்கத்திற்கும் இடையிலான உறவை அறுதியிடுவதில் இடமும் வலமுமாக நின்று கடந்த 50 ஆண்டு காலமாக தோற்றுப் போனவர்கள் இவர்கள். பாரதிதாசனின் பிராமண எதிர்ப்பு இறுதிவரை இவர்களாலே புரிந்து கொள்ளப்படாமலே போயிற்று. பாரதிதாசனின் தலைவரான பெரியாரே தமிழ்நாட்டில் முதலில் "பொதுவுடமை அறிக்கையை"த் தமிழில் வெளியிட்டார். மயிலம் சிங்காரவேலைப்பாடி கவிதை உலகில் காலடி எடுத்து வைத்த பாரதிதாசன் தமிழ்நாட்டின் பொதுவுடமை இயக்கத்தின் தலைவனான சிங்காரவேலர் குறித்தும் பாடி உள்ளார். தான் பொதுஉடமை உணர்வை சிங்காரவேலரிடமிருந்து பெற்றுக் கொண்டதற்கு,
"கோலப் பொதுவுடமை கிளைத்ததும் அவனால்
கூடின அறிவியல் அரசியல் அவனால்"
என்று கவிதையிலே சான்று தருகிறார். இரண்டாம் உலகப்போரின் போது சோவியத் நாட்டின் மீது ஹிட்லர் படை எடுத்த போது ஹிட்லரின் தோல்வியை முன் மொழிகிறார் பாரதிதாசன்.
"மக்கள் வாழ்வின் மதிப்பு இன்னதென
ஒக்க வாழும் உறுதி இதுவென
முதிய பெரிய முழு நிலத்திற்கும்
புதியதாகப் புகட்டிய நாட்டில்
செலுத்தினான் இட்லர், தீர்ந்தான் முற்றிற்று".
எனவே பாரதிதாசனின் பொது உடமை உணர்வு ஐயத்திற்கு இடமில்லாதது. இன்றைக்கு ஐரோப்பிய நாடுகள் முழுவதும் தேசிய இன உணர்வுகள் கிளர்ந்து எழுந்து நிற்கின்றன. பல்வேறு தேசிய இனங்கள் வாழும் சோவியத் நாட்டில் ருஷிய மொழிபேசும் தேசிய இனம் மற்ற இனங்களின் மீது ஆதிக்கம் செலுத்துவதாக எதிர்ப்புக் குரல்கள் எழுகின்றன.
சிங்களப் பெருந்தேசியஇனவாதத்தைப் போல ரஷ்ய பெருந்தேசிய இனவாதம் ஒன்று சோவியத் நாட்டில் உருவாக இருப்பதாகக் கருதப்படுகிறது. தேசிய இனங்களுக்கு இடையில் பகை உணர்வுகள் அரும்பிக் கலவரங்கள் வெடிக்கின்றன. இந்தப் பின்னணியை மனத்தில் கொண்டு பாரதிதாசனின் இன உணர்வுக் கவிதைகளை நாம் அணுகவேண்டும்.
பாரதிதாசனின் பிராமணீய எதிர்ப்பு உணர்வு கண் மூடித்தனமானதல்ல. பாரதி பரிதிமாற்கலைஞர், ஆகியோரையும் பின்னர் விவாதத்திற்குள்ளாகிய வ.வே.க. ஐயரையும்கூடப் பாரதிதாசன் கவிதையில் பாராட்டினார்.
"பிராமண்யம் என்பது உடல் உழைப்பில் இருந்து அந்நியப்படுவது", சமுதாயத்தின் மேல், கீழ் என்ற பிரிவுகளையும் பண்பாட்டு நீதியாக நியாயப்படுத்துவது என்கிற உண்மையைத் தமிழ்நாட்டில் வாக்குக் கேட்க வந்த மார்க்சியர்கள் மறந்து போய் விட்டார்கள். வார்க்க வேறுபாடுகளைப் பிராமண்யம் நியாயப்படுத்துவதால் தான் இன்று சில மேல்தட்டுத் தமிழர்கள் "புதிய பிராமணர்களாக" உருவெடுத்து வருகின்றனர். எனவே இன்றும்கூடப் பிராமண்யம் ஒரு வாழ்நெறியே. பொதுமை உணர்வு கொண்டோறால் எதிர்க்கப்பட வேண்டிய ஒன்றே. இந்த உண்மையை மறந்தும், மறுத்தும் நின்றதால்தான் மார்க்சியர்களின் உழைப்பு தமிழ் நாட்டில் விழலுக்கு இறைந்த நீராகப்போயிற்று. பாரதிதாசனைப் பற்றி அவர்களது மதிப்பீடுகள் தவறாகி நின்றன.
வாழ்வின் மிகப்பெரிய பரிமானம் ஆகிய காலம் இன்று நமக்குச் சில உண்மைகளை உணர்த்துகின்றது. ஒரு படைப்பாளியைப் பற்றிய சம காலத்து மதிப்பீடுகள் பொதுவாக அவனுக்கு நியாயம் செய்வதில்லை. தமிழ் இலக்கிய வரலாற்றில் இது தொடர்ந்து நிகழ்ந்து வந்த ஒன்றுதான். இன்றைக்கும் பசி வந்துவிடுமோ என்று அஞ்சிய திருவள்ளுவர் முதல் பசிக்கும் நோய்க்கும் பலியான நம் காலத்துப் புதுமைப்பித்தன் வரையில் இதுதான் நடந்தது... எனவே பாரதிதாசனை மதிப்பிடுவதிலும் அப்படியொரு தவறு நடந்தது வியப்புக்குரிய செய்தியன்று.
பாரதிதாசன் கவிதை எழுதிய காலத்திலும் அவர் வாழ்வின் இறுதிக்காலம் வரையிலும் பாரதிதாசன் பற்றிய மதிப்பீடுகளில் நூற்றுக்கு தொன்னூறு எதிர் மறையானவை. இன்று 20ம் நூற்றாண்டின் கடைசிப்பகுதியில் நின்று கொண்டு ஐரோப்பாவையும் ஆசியாவையும் அரசியல் ரீதியாக உணர்ந்து கொள்கிற யாரும் பாரதிதாசன் பற்றிய புதிய மதிப்பீட்டைக் கட்டாயம் செய்வார்கள். செய்ய மறுப்பவர்களையும், மனமில்லாதவர்களையும் காலவெள்ளம் புரட்டி இழுத்துக் கொண்டு போய்விடும் என்பதில் ஐயமில்லை
கட்டுரை: பிறைசூடி , நன்றி:தமிழ்கூடல் 

உலகின் முதல் செயற்கை ரத்தம்

கட்டுரை: விஸ்வநாதன்
செயலும் ஒருங்கிணைந்த கடுமையான உழைப்பும் "செயற்கையான மனித உறுப்பு கள் உருவாக்க முடியும் என்றால், ஏன் செயற்கை ரத்த செல்களை உருவாக்க முடியாது?' 1956-இல் உடற்கூறு மருத்துவம் படிக்கும் 23 வயது இளநிலை மாணவனுக்குள் உதித்த மிகச் சாதாரணமான கேள்விதான் இது. கற்பனை கேள்விக்கு நிஜ உலகில் விடை காண புறப்பட்ட அந்த மாணவனின் முயற்சிகள்தான் ஆராய்ச்சி யாளர்கள் மத்தியில் வேறிட்டு நிற்கச் செய்கிறது. தான் வசித்த அறையின் ஒரு பகுதிதான் ஆய்வகம். வாசனை திரவியம் (சென்ட்) தெளிப்பான், கொல்லாய்டின் திரவம் (அந்தக் காலத்தில் காயத்தின் மீது தடவப்படும் செல்லுலோஸ் நைட்ரேட் திரவம்), சிறிது ஹீமோகுளோபின் திரவம் (அதுவும் ஆய்வகங்களில் கடனாக பெறப்பட்டது), சக மாணவர்களின் ஏளனம், கனடா நாட்டு மெக்கில் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்களின் முழு ஆதரவு இவற்றை மூலதனமாகக் கொண்டு தொடங்கியது அந்த மாணவனின் ஆராய்ச்சி.

1957-இல் பி. எஸ்.சி. பட்டம் (மருத்துவம்), 1961-இல் எம்.டி. முதுகலைப் பட்டம், 1965-இல் பி.எச்.டி. (மருத்துவத்தில் நிபுணத்துவம்) என வளர்ந்து, இதுவரை 400 அறிவியல் கட்டுரைகள், 21 புத்தகங்கள் எழுதி முடித்த மருத்துவ நிபுணர். தன் வாழ்நாளில் 50 ஆண்டுகளை செயற்கையான மனித உயிர் திரவம் உருவாக்கப் பாடுபட்ட அந்த மனிதனை என்னவென்றழைப்பது? இரத்த சிவப்பணு மனிதன் என்பதைத் தவிர வேறென்ன பொருத்தமாக இருக்கப் போகிறது.

இத்தனை சிறப்புகளுக்கும் பெருமைக் கும் உரிய மனிதர் தாமஸ் மிங் ஸ்வி சாங் என்பவர்தான். கனடா நாட்டின் மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் உதவி யுடன் இந்த சாதனையை நிகழ்த்தினார்.

மனித உடலில் உயிர் திரவம் இரத்தம். இது திரவ நிலையிலுள்ள இணைப்புத் திசு. இரத்தத்தில் 55% பிளாஸ்மா, 45% செல்கள் அடங்கியுள்ளது. இரத்தத்தில் பிளாஸ்மா நீர் கரைப்பானாகவும்; புரோட்டீன்கள், கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் கடத்துவதற்கும்; அயனி களாக கலந்திருக்கும் சோடியம், பொட்டாசியம் பாஸ்பேட், கால்சியம், மெக்னீசியம் ஆகியவை அமில- காரத்தன்மை சமன் செய்யவும்; உணவுப் பொருட்களான குளூக்கோஸ், அமினோ அமிலங்கள் உடலுக்கு சக்தியளிக்கவும்; ஆக்சிஜன், கார்பன் - டை- ஆக்ஸைடு போன்றவை சுவாச நிகழ்வு களுக்காகவும்; ஹார்மோன், என்சைம்கள் உடலின் செயல்பாடுகளுக்காகவும் அடங்கியுள்ளன. பிளாஸ்மா வில் மூன்று வகையான இரத்தச் செல்கள் உண்டு. அவை இரத்த சிவப்பணுக்கள், இரத்த வெள்ளை அணுக்கள், இரத்த பிளேட்லெட்டுகள்.

ஆண்களின் ஒரு கன மில்லிமீட்டர் இரத்தத்தில் சுமார் 5.2 மில்லியன் சிவப்பு அணுக்களும், பெண்கள் இரத்தத்தில் சுமார் 4.5 மில்லியன் சிவப்பு அணுக்களும் காணப்படும். இதன் குறுக்கு விட்டம் 7.5 மெக்ரோ மீட்டர். சிவப்பு அணுவில் ஹீமோகுளோபின் எனும் இணைவு புரதம் முக்கிய அங்கம். இதுதான் இரத்தத்தின் சிவப்பு நிறத்திற்கு காரணமானது. இதன் முக்கியப் பணிகள் ஆக்சிஜனை எடுத்துக் கொண்டு ஆக்சி ஹீமோகுளோபின் நிலையில் கடத்திச் சென்று திசுக் களுக்கு கொடுப்பது, திசுக்களிலிருந்து கார்பன் - டை- ஆக்ஸைடை மற்றும் கார்பன் அன்ஹைட் ரஸ் நிலையில் நுரையீரலுக்கு கொண்டு சென்று கழிவுப் பொருளாக வெளியேற்றுவது.

போர்க் காலங்களிலும், எதிர்பாராமல் மிக அதிக எண்ணிக்கையிலான விபத்துகள் ஏற்படும் போதும் அதிக இரத்த இழப்பு ஏற்படுகிறது. இவ்வகை நேரங்களில் இரத்த இழப்பை சரிசெய்ய காயம் அடைந்தோரின் இரத்த குரூப்பை பொருத்து, அதே வகையான இரத்தம் அவர்களுக்கு செலுத்தப்படுகிறது.

அவ்வாறு செலுத்தும் இரத்தமானது எய்ட்ஸ், மஞ்சள்காமாலை, அலர்ஜி போன்ற நோய்களை கொண்டிருப்பவையாக இருக் கக் கூடாது. இதனால் இரத்தம் பெறுவோருக் கும் அந்த நோய் வரும். மேலும் தவறான இரத்த வகையினால் இரத்தம் பெறுவோருக்கு பல்வேறு வகையான அலர்ஜிகள் ஏற்படக் கூடும். உதாரணமாக, குடிகாரர்களுக்கு வரக்கூடிய லிவர் சிரோசிஸ் எனும் நோய் இரத்தம் பரிமாற்றம் வழியாக மதுபானம் அருந்தாதவர்களுக்குக் கூட வந்த சரித்திரம் நம் நாட்டில் உண்டு. அதிகமான மனிதர்களுக்கு விபத்து நேரும்போது அதிக இரத்தம் தேவைப்படுகிறது. அதிகளவிலான இரத்தம் சேகரித்துவைப்பது என்பது இயலாத காரியம். ஏனெனில் இரத்த தட்டுகள் சில நாட்களும், இரத்த சிவப்பணுக்கள் 42 நாட்களுமே வாழ்நாளைக் கொண்டவை. மேலும் ஒரு வருடத்தில் சுமார் 100 மில்லியன் யூனிட் இரத்தம் பரிமாற்றம் செய்யப்படுகிறது. இதனால் நோய்கள் இல்லாததும், மனித இரத்தத்திற்கு சரியான மாற்று கண்டுபிடிக்க வேண்டியதன் அவசியம் முக்கியமானதாகிறது.

இந்தளவு தேவையை கருதிதான் செயற்கை இரத்தத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கினார் சாங். முதலில் சாங் ஹீமோகுளோபின் திரவத்தை மிக நுண்ணிய துளிகளாக்கி, அதன்மீது செல்லுலோஸ் நைட்ரேட்டினாலான மெல்லிய சவ்வு படரச்செய்து இரத்த சிவப்பணுக்களை உருவாக்கினார்.

இந்த சவ்வு உறுதியானது, சில குறிப்பிட்ட மூலக்கூறுகளை மட்டுமே அதனுள் செல்ல அனுமதிக்கும் தன்மை கொண்டது. புரோட்டீன் போன்ற மிகப்பெரிய மூலக்கூறுகளை அனுமதிக்கும். ஆனால் மிகச்சிறிய, தேவையற்ற மூலக் கூறுகளை அனுமதிக்காது. 10 மி.லி. செயற்கை அணுக்களில், 20 மைக்ரோ மீட்டர் குறுக்கு விட்டமுடைய அணுக்களின் மொத்த பரப்பு 2500 செ.மீ2. இது ஒரு செயற்கை சிறுநீரகத்தின் வடிகட்டும் பரப்புக்கு சமமானது. மேலும் அதன் சவ்வு செயற்கை  சிறுநீரகத்தைக் காட்டிலும் 100 மடங்கு மெல்லியது. செயற்கை இரத்த அணுக்களில் சில உயிரிபொருட்களும், காந்த பொருட்கள், மருந்து பொருட்கள், உறிஞ்சும் திறனுடைய பொருட்கள் போன்றவற்றை செயற்கையாக உட்படுத்தினார் சாங். முதலில் 1 மி.மீ குறுக்கு விட்டம் கொண்ட செயற்கை அணுக் களை உருவாக்கிய சாங், பின்னர் மேக்ரோ மற்றும் மைக்ரோ அளவுள்ள இரத்த அணுக்களை உருவாக்கினார். மனித உடலுக்கு உகந்ததான மைக்ரோ மீட்டருக்கும் 5 மைக்ரோ மீட்டருக்கும் இடைப்பட்ட அளவிலான இரத்த அணுக்கள் பிரித்தெடுக்கப்பட்டது. மேலும் அதன் சவ்வானது பாலிமர், இயற்கையாக சிதைவடையக்கூடிய பாலிமர், லிபிட், புரோட்டீன், லிபிட்- பாலிமர் கூடுகை, லிபிட்- புரோட்டீன் கூடுகை போன்றவற்றினால் உருவாக்கி சோதனை மேற்கொள்ளப்பட்டது.
1960-இல் என்சைம்களை செயற்கை அணுக்களில் உட்படுத்துவதனால் ஜீவ பரிணாமத்தால் ஏற்படும் பிறப்பு குறை பாடுகளை சரிசெய்யமுடியும் என்பதை கண்டறிந்தார். இது அவரது ஆராய்ச்சியின் மிக முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.

நானோ தொழில்நுட்ப முறை யில் செயற்கை இரத்த அணுக்கள்:
நானோ தொழில்நுட்ப முறை என்பது மிக நுண்ணிய நானோ தடிமன் மற்றும் நானோ குறுக்கி விட்டம் கொண்ட மெல்லிய சவ்வினா லான உயிரி மூலக்கூறுகளை நானோ அளவு அமைப்பில் பொருத்துவது. நானோ என்பது 10-9ஐ குறிக்கும். அப்படியென்றால் எவ்வளவு நுண்ணியது என்று தெரிந்து கொள்ளலாம். முதன்முறையாக நானோ தொழில்நுட்ப முறையை பயன்படுத்தி, நானோ தடிமன் கொண்ட மெல்லிய சவ்வினுள் ஹீமோகுளோபினை அல்ட்ராதின் பாலி ஹீமோகுளோபினுள் குறுக்கிணைவு செய்து சாங் உருவாக்கினார். நம்முடைய இரத்தத்தில் பலவகையான என்சைம்கள் உள்ளன. எனவே செயற்கை இரத்த அணுக்களில் மூன்று வகையான என்சைம்கள் இணைந்து, அவை யூரியா, அம்மோனியா போன்ற கழிவுகளை அமினோ அமிலமாக மாற்றத்தக்க விதத்தில் செய்யப்பட்டது.
வெளியே காந்தப்புலத்தை வைத்துக் கொண்டு செயற்கை இரத்த அணுக்களின் இயக்கத்தை கட்டுப்படுத்த காந்தப் பொருள்கள் சேர்க்கப்பட்டது. தற்கொலை செய்துகொள்ள அதிகமான விஷம் உட்கொண்டவர்களின் இரத்தத்தில் உள்ள நச்சுத் தன்மையை அகற்றவும், உடலுக்கு ஒவ்வாத வேதிப் பொருட்களை உறிஞ்சி அகற்றுவதற்கு உறிஞ்சும் தன்மையுடைய பொருட்களை செயற்கை அணுக்களில் உட்படுத்தப்பட்டது. மேலும் கதிரியக்க ஐசோடோப்புகளை உட்படுத்துவதனால் உடலில் டியூமர் உள்ள இடத்தில் அதனை தங்க வைத்து டியூமர் நோயை முற்றிலும் குணப்படுத்த முடியும் என்ற ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார் சாங்.
மேலும் செயற்கை அணுக்களில், இயற்கையான இரத்தத்தில் உள்ளதைப்போன்று பல்வேறு என்ஸைம்கள், நோய் தடுப்பு மருந்துகள், ஜீன்தெரபிக்கான ஜீன்கள், ஹார்மோன்கள், பெப்டைடுகள், புரதங்கள் போன்றவற்றை உட்படுத்தினார் சாங். இவ்வாறு உருவாக்கப்பட்ட இரத்த சிவப்பணுக்கள் குறைந்தது ஒரு வருடம் வரை பாதுகாப்பாக வைக்க முடியும். நோயுள்ள இரத்தத்தை மாற்றிவிட்டு, செயற்கை இரத்தத்தை செலுத்தி மனிதர்களை அந்நோயினின்று குணப்படுத்த முடியும்.
இரத்தத்தில் ஹீமோகுளோபினும், பொட்டாசியம் அயனிகளும் பி.எச். எனும் கார அமில சமநிலையை நிலை நிறுத்துகிறது. ஆனால் செயற்கை இரத்த அணுக்களில் பொட்டாசியம் அயனிகள் இல்லை. இயற்கை இரத்தத்தில் ஹீமோகுளோபினுடன் பரவலாக இணைந்து காணப்படும் பொட்டாசியம் அயனிகளை, செயற்கை அணுக்களில் உட்படுத்துவதை பற்றியான ஆராய்ச்சிகள் எதிர்காலத்தில் நடைபெறும். மனிதனின் ஒவ்வொரு உறுப்புகளையும் செயற்கையாக உருவாக்கும் முயற்சிகள் விஞ்ஞான உலகில் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. இந்த வகையான ஆராய்ச்சிகள் எதிர்காலத்தில் செயற்கை மனிதனை இவ்வுலகில் நடமாட வைத்தால் ஆச்சர்யப்படுவதிற்கில்லை.

Thursday, March 03, 2011

உங்கள் பேஸ்புக் கணக்கை வேறு யாராவது பயன்படுத்துகிறார்களா என்பதை கண்டறிய வேண்டுமா?

 பேஸ்புக் முகப்பில் உங்களுக்கு தெரியாமல் வேறுயாரவது விடயங்களை பிரசுரிக்கிறார்களா? அல்லது நண்பர்கள் நீக்கப்படுகின்றனரா?
அண்மையில் பேஸ்புக் ஸ்தாபகரின் கணக்கே ஹேக் செய்யப்பட்டது நினைவிருக்கலாம். இவ்வாறு பேஸ்புக் கணக்கை வேறு யாரும் பயன்படுத்தினால் உடனடியாக உங்களுக்கு தெரியப்படுத்த என்ன செய்யலாம்?
இதற்கு பேஸ்புக்கில் பாதுகாப்பு வசதியொன்று உள்ளது. பேஸ்புக் லாகின் செய்து Facebook.com -> Account -> Account Settings -> Account Security செல்லுங்கள்.

பின்னர் அங்கு IP முகவரியை வைத்து பேஸ்புக் கணக்கு எங்கிருந்து கையாளப்படுகிறதென்ற விபரங்கள் காட்டப்படும். இதில் சந்தேகம் வரும்படியான இடங்கள் காட்டப்பட்டால் உடனடியாக அதை “end activity " செய்துவிடுங்கள்.
மேலதிக பாதுகாப்பு வசதியாக வேறு எங்கிருந்தாவது பேஸ்புக் கணக்கு அக்செஸ் செய்யப்பட்டால் மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்துமாறு கொடுத்து விடலாம். அல்லது உங்கள் கணக்குடன் மொபைல் எண்ணை இணைத்திருந்தால் எஸ்.எம்.எஸ் மூலம் அறிவிக்குமாறூம் செய்துவிடலாம்.
மேலுள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு send me an email என்பதையும், மொபைல் வசதி இருந்தால் send me a text message என்பதையும் டிக் செய்து விட்டால் மின்னஞ்சலில் அல்லது எஸ்.எம்.எஸ்  இல் பேஸ்புக் கணக்கை வேறு இடத்திலிருந்து யாரும் அக்செஸ் செய்தால் அந்த தகவல்கள் தெரியப்படுத்தப்படும்.

Wednesday, March 02, 2011

உலகின் மிகப் பெரிய "குடும்பஸ்தன்' ஜியோனா சானா: 39 மனைவிகள்; 94 குழந்தைகள்

பலதார மணம் தடை செய்யப்பட்டுள்ளது என்றாலும், உலகிலேயே அதிகமான மனைவிகளை கொண்டு, பெரிய குடும்பமாக வாழ்பவர் என்ற பெருமையை, ஒரு இந்தியரே பெற்றுள்ளார். வடகிழக்கு மாநிலமான மிசோரமைச் சேர்ந்த ஜியோனா சானா என்ற, "இளைஞர்' தான், 39 மனைவிகளுடன், பெரிய குடும்பமாக வாழ்ந்து வருகிறார்.

விலைவாசி விண்ணை முட்டும் இந்த காலகட்டத்தில், ஒரு மனைவி, இரண்டு குழந்தைகளை வைத்து குடும்பம் நடத்துவது என்பதே, இமாலய சாதனை. ஆனால், அந்த காலத்தில் மன்னர்களும், பிரபுக்களும் ஏராளமான மனைவிகளை கொண்டிருந்தனர். ராமாயணத்தில், தசரத சக்ரவர்த்தி, 60 ஆயிரம் மனைவியருடன் வாழ்ந்தார் என்று கூறப்பட்டுள்ளது. நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து, ஒருவனுக்கு ஒருத்தி என்பது சட்டமாக்கப்பட்டது. குறிப்பிட்ட சில சமூகங்களை தவிர்த்து, இச்சட்டம் கடுமையாக பின்பற்றப்படுகிறது. வடகிழக்கு மாநிலமான மிசோரமைச் சேர்ந்த ஜியோனா சானா என்பவர், 39 மனைவிகளுடன் வாழ்ந்து, உலகின் மிகப் பெரிய குடும்பத்தை கொண்டவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 39 மனைவிகள் மூலம் 94 குழந்தைகளை பெற்றுள்ளார். தற்போது இவர் வீட்டில், 14 மருமகள்களும், 33 பேரக் குழந்தைகளும் உள்ளனர். தனது பெரிய குடும்பத்தை பராமரிப்பதற்காக, தனது சொந்த கிராமத்தில், 100 அறைகள் கொண்ட ஒரு மாளிகையை அவர் கட்டினார்.
இந்நிலையில், தனது குடும்பத்தினரின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வேண்டும் என்று விரும்பிய ஜியோனா சானா, தனது அடுத்த திருமணத்திற்காக பெண் பார்க்கும் படலத்தை துவக்கியுள்ளார். தன்னைச் சுற்றி வரும் பல பெண்களில் இருந்து ஒருவரை அவர் தேர்ந்தெடுக்க உள்ளதாக குடும்பத்தினர் கூறுகின்றனர். தற்போது 67 வயதான ஜியோனா சானா, உள்ளூர் பெண்களை தவிர்த்து, அமெரிக்கா சென்று, அங்கு ஒரு பெண்ணை பார்த்து மணம் செய்து கொள்ளலாம் என்று திட்டமிட்டுள்ளார். திருமணத்தில் அதிக நாட்டம் கொண்ட ஜியோனா சானா, தனது மனைவிகளுக்கு அறைகளை ஒதுக்குவதில் கவனமாக இருக்கிறார். இளம் மனைவிகளை, தனது பிரத்யேக படுக்கை அறைக்கு பக்கத்தில் உள்ள அறைகளிலும், வயதான மனைவிகளை, தனது மாளிகையின் ஒதுக்குப் புறங்களில் அமைக்கப்பட்டுள்ள மற்ற அறைகளிலும் தங்க வைத்துள்ளார். "நான் கடவுளின் சிறப்புக் குழந்தை. அதனால் தான், என்னை கவனித்துக் கொள்வதற்காக ஏராளமான சொந்தங்களை எனக்கு கொடுத்துள்ளார். நான், 39 மனைவிகளின் கணவன் என்பதை நினைத்து பெருமைப்படுகிறேன். இந்த வகையில் நான் அதிர்ஷ்டக்காரன்' என்று கூறியுள்ளார், "காதல் மன்னன்' ஜியோனா சானா.
நன்றி: தினமலர்

ஐரோப்பிய மொழிகளில் வழங்கும் தமிழ்ச் சொற்கள்!!!!

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.....
பண்டைய மற்றும் தற்கால ஐரோப்பிய மொழிகளில் தமிழ்ச் சொற்களை மூலங்களாகக் கொண்ட சொற்கள் பல காணப்படுகின்றன. மேற்படி மொழிகளுக்கான அகராதிகள் அவ்வாறான சில சொற்களுக்கான மூலங்களாகத் தமிழ் மொழியைக் குறிப்பிடுகின்றன. அவ்வாறான மேலும் பல சொற்கள் காணப்படுவதை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.
இவ்வாறு ஐரோப்பிய மொழிகளில் தமிழ்ச் சொற்களின் கலப்பு பல்வேறு காலகட்டங்களிலும், பல காரணங்களால் நிகழ்ந்துள்ளன. கிறிஸ்து சகாப்தத்துக்கு முன்னரே தமிழகத்துக்கும், ஐரோப்பிய நாகரீகங்களுக்கும் இடையேயான வணிகத் தொடர்புகள் காரணமாக சில வணிகப் பொருட்களின் பெயர்கள் தமிழிலிருந்து ஐரோப்பிய மொழிகளுள் புகுந்துள்ளன. பைபிளின் பழைய ஏற்பாட்டில் இவ்வாறான தமிழ்ச் சொற்கள் சில எடுத்துக்காட்டப் பட்டுள்ளன. ஆங்கில மொழியிலும் அதனையொத்த ஐரோப்பிய மொழிகள் பலவற்றிலும் உள்ள ரைஸ் (Rice) என்னும் சொல் அரிசி என்னும் தமிழ்ச் சொல்லை மூலமாகக் கொண்டதாகச் சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இது லத்தீன், கிரேக்கம் போன்ற பண்டைய மொழிகளின் வழியாக நவீன மொழிகளுக்கு வந்து சேர்ந்தது என்பது அவர்கள் கருத்து.
அண்மைக் காலங்களிலும் இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் ஐரோப்பியர் ஆட்சி நடைபெற்ற போது சில தமிழ்ச் சொற்கள் ஐரோப்பிய மொழிகளுக்குச் சென்றுள்ளன. ஆங்கில மொழி அகராதிகளில் காணப்படும், mammoty (மமொட்டி - தமிழ் மண்வெட்டி இலிருந்து), cooly (கூலி - தமிழ் கூலி இலிருந்து) போன்ற சொற்கள் இத்தகையவை. தமிழ்ச் சொல்லான கட்டுமரம் ஜெர்மன் மற்றும் ஆங்கில மொழிகளில் கடமரன் (Katamaran) என வழங்கப்படுவதும் இன்னொரு எடுத்துக்காட்டு.

[தொகு] ஐரோப்பிய மொழிகளில் வழங்கும் தமிழ்ச் சொற்களின் பட்டியல்

தமிழ்ச் சொல் பிறமொழிச் சொல் மொழி வழி
கட்டுமரம் katamaran ஆங்கிலம் தமிழ் --> ஆங்கிலம் Ginger=ingi in tamil also arabic gingabeer

எகிப்து மக்களின் எழுச்சி!!!!!!! எல்லா நாட்டரசுகளுக்கும் எச்சரிக்கை மணி!!!!!!!

எகிப்து மக்களின் எழுச்சி எல்லா நாட்டரசுகளுக்கும் எச்சரிக்கை மணி
எகிப்பதிய மக்களின் விடுதலை சதுக்க போராட்டம் கடைசியாக வெற்றி பெற்று விட்டது. முபாரக் நாட்டை விட்ட ஒடி விட்டார். ராணுவம் தேர்தலுக்கு உறுதி அளித்துள்ளது. போராட்ட காரர்கள் துணை ஜனாதிபதியை பொறுப்பு ஏற்‌பதை விரும்பினாலும்
ராணுவம் அதற்கு இசைவளிக்குமா என்பது தெரியவில்லை. ராணுவம் விரும்பவது எல்லாம் போராட்டகாரர்கள் உடன் கலைந்து செல்ல வேண்டும் என்பதாக இருக்கிறது. 300 ‌பேரை இழந்து பெறப்பட்ட வெற்றி. அவர்கள் செய்த தியாக மாபெரும் தியாகமாகும். ஆதிக்க சக்தியை எதிர்த்து மக்கள் ‌போராடி வெற்றி பெற்றதை கண்முன்னால் ( தொலைகாட்சி வாயிலாக)காண்பது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது.
மக்கள் ஒன்று சோ்ந்தால் எப்படிப்பட்டவர்களையும் கீழே இறக்கி விடலாம் . எகிப்திய மக்களின் போராட்டம் பக்கத்து அரபு நாடுகளுக்கு பரவியதை கண்ட போது மற்ற நாடுகள் எங் கே நமக்கும் ஆபத்து வந்து விடுமோ என அச்சம் அடைந்ததை நம்மால் உணர முடிந்தது.
நம்ம இந்தியா கூட பயந்து போய் எகிப்திய போராட்டம் தொடர்பான செய்திகளை செய்தி நிறுவனங்கள் வெளியிடுவதை குறைக்க வைத்து விட்டது. முதல் 8 நாட்கள் விலாவாரியாக வந்த செய்திகள் படிபடியாக தவிர்க்கப்பட்டதை கண்டு எனக்கு சிரிப்பு தான் வந்தது.
தேவையற்ற பயம். நமது மக்களை தான் ஆண்டு ‌ஆண்டு காலமாய் அவர்களது துன்பங்களுக்கு விதிதான் காரணம் என நம்பவைத்து தற்போது விதி அவர்கள் இரத்தத்தில் ஊறி போய் விட்ட ஒரு விஷயமாகிவிட்டது. நாய் வந்து வாயில் ‌மொண்டுட்டு போனாலும் –நாயை ஊச்ச விட்ட பெண்ணை ஊஷார் பண்ணுவதை ரசிக்கும் கூட்டம் தானே நாம்.
ஆதிவாசிகளை வனங்களை விட்டு விரட்டினால் நமக்கென்ன. லட்சகோடிகளில் கொள்ளை அடித்தாலும் அவன் தரும் ஆயிரத்தை வாங்கிவிட்டு வாக்களிக்க தயாராகிவிட்ட ஒரு ஈன ஜென்மங்கள்தானே நாம் . இது உங்க பணம்தான் வாங்கி கொள்ளுங்கள் ஆனால் வாக்கை எங்களுக்கு போடுங்கள் என பொழிப்புரை கொடுக்கும் அரசியல்வாதிகள் நடிகர்கள் நிறைந்த நாடு நம் நாடு.
எகிப்து மாதிரி மக்கள் எழுச்சி வர வாய்ப்பு இருக்கிறதா என்ன. ஏன் நம் தமிழர்கள் இப்படி சுரணை இல்லாமல் போய்விட்டார்கள் கோழையாக பயந்தாங்கொள்ளிகளாக வாழ்கிறார்கள் (என்னையும் சேர்த்துதான்) என்று யோசித்து பார்த்த போது அதற்கு காரணம் இதுவாக இருக்குமோ என எண்ணம் வந்தது
1. விதியை நம்புவதால்
2.நீண் ட காலம் ஆங்கிலேயர்க்கு அடிமை யாக இருந்ததால்
3.சமண மத புத்த மத அகிம்சை வழிகளை பின்பற்றியதால்
4. சோறு கண்ட இடம் சொர்க்கம் என பழகி விட்டதால்
5. சாதி பித்து பிடித்து அலைவதால்
6.. சில ஆயிரங்களுக்கும் பிரியாணி குவாட்டர் பிராந்தியில் மயங்கி விடும் பு்த்தி
7. சாமி மேல் சத்தியம் போட்டு விட்டு மாற்றி போட்டால் சாமி குற்றம் ஆகி விடும் என
நம்புவதால்
8. தான் சார்ந்து கட்சி அவன் தலையையே வெட்டினாலும் கட்சி விசுவாசம் காட்டும் மடமை
9. கல்வி அறிவு இன்மை.
10 படித்தவர்கள் பயந்து ஒதுக்கி விட்டது.
11 நல்லவர்கள் நமக்கு எதற்கு வம்பு இருக்கிற பெயரை தக்க வைத்து கொள்ளுவோம் எனும் எண்ணம்
12. சோம்பேறிகள்
13. தீக்குளிக்கு தெரியும் ஆனால் அந்த உயிரை எதிரியின் உயிரை எடுப்பதில் விட தெரியாமை
14.எல்லாவற்றையும் சீக்கிரம் மறந்து விடும் தன்மை.
15. பொது நலமின்மை.
இன்னும் எத்தனையோ.
வல்லம் தொடும் தூரத்தி்ல்
இன மக்களின் வாழ்க்கை சூறையாடப்பட்டபோதும்
சும்மா இருந்து விட்ட நம்மை நாமே செருப்பால்
அடித்து கொண்டால் தான் பாவம் விமோசம் கிடைக்கும்.
எகிப்து மக்கள் போல் எம் மக்கள் எழுச்சி அடைவார்களா.
அது கானல் நீர்தானா.
காலம் பதில் சொல்லுமா
வாகை தேவதை
தமிழன் கழுத்தில் மாலை யிடுவது எப்போது.

Tuesday, March 01, 2011

இவர்கள் பிழைக்க தெரியாதவர்களா?

அம்மா, அப்பா: கூலி
மகள் : எம்எல்ஏ

இந்த ஆட்சிக்கான சட்டமன்றக் கூட்டத் தொடர் கடந்த பத்தாம் தேதியோடு முடிவடைந்துவிட்டது. ஐந்து ஆண்டுகள் எம்எல்ஏ-வாக இருந்திட்ட தெம்பில் பலர் உற்சாகத்தோடு தொண்டர்கள் புடைசூழ விடுதியில் வலம் வந்து கொண்டிருந்தார்கள்.

ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர் விடுதிக்கு முன்னாலும் குறைந்தது ஐம்பது, அறுபது பேர் தேவ்டு காத்து நிற்கிறார்கள். மார்க்சிட் கட்சியின் மதுரை கிழக்கு தொகுதி எம்எல்ஏவான நன்மாறனின் அறை மட்டும் ஆள் அரவமற்று அமைதியாய் நிற்கிறது. உள்ளே ஒரு உருவம் ஓடியாடி ஏதோ அவசரத்தில் தன் உடைமைகளை ஒரு பையில் எடுத்து அழுத்திக் கொண்டிருந்தது. கூர்ந்து பார்த்தால் நன்மாறன் எம்எல்ஏ.
நன்மாறன்
எம்எல்ஏவுக்கு 50 ஆயிரம் சம்பளம் தருகிறது அரசாங்கம். அத கட்சிக்கு கொடுத்துடுவேன். கட்சியின் முழு நேர ஊழியர் நான். அதற்காக கட்சி 5500 ரூபாய் சம்பளம் தருகிறது. அதுதான் குடும்ப ஜீவனத்துக்கு ஆதாரம் என்று எளிமையாய் சிரிக்கிறார்.

நன்மாறனுக்கு இரண்டு மகன்கள், ஒரு பையன் எம்எசி படித்துவிட்டு வேலைபார்க்கிறார். இன்னொருவர் பி.ஏ.பட்டதாரி. மனைவி சண்முக வள்ளி நன்மாறனின் உறவினர் வீட்டுப் பெண்!
பாட்டி காலத்துல இருந்து ஒரு வீட்ல குடி இருந்தோம். அந்த வீட்ட வாங்கிக்கச் சொல்லி வீட்டு உரிமையாளர் கேட்டுக்கிட்டார். பத்து வருஷத்துக்கு முன்னாடி வாங்கினது.184 சதுரடி. சின்னதா ஒரு வீடு, இதுதாங்க நம்ம சொத்து என்கிறார்.


நன்மாறனின் எளிமை ஊர் அறிந்த விஷயம். தன்னுடைய மகனின் கல்லூரி சேர்ப்புக்காக சென்றபோது, கல்லூரி கேட்ட சின்ன தொகையை தயார் செய்து கொண்டு போவதற்குள், அட்மிஷன் முடிந்துவிட்டது. சிபாரிசு எதுவும் போகாமல் வேறு கல்லூரியில் தன் மகனைச் சேர்த்துவிட்டு விட்டார். யாரும் தன்னை குறை சொல்லிவிடக் கூடாது என்று அச்சப்படும் தன்மாறன் இந்த நன்மாறன்.

இவரைப் போலவே மிக சிம்பிள் திருவட்டாரு எம்எல்ஏ லீமாரோ. அவரைத் தேடிச் சென்றபோது ஒரு டீக்கடையில் தனியாக நின்று டீ குடித்துக் கொண்டிருந்தார். யாரும் அவருடன் இல்லை. தனி மனுஷி!
லீமாறோஸ்
ஒருமுறை மக்கள் பிரச்சனைக்காக அரசு அலுவலகத்திற்குப் போன போது உள்ளே விட மறுத்துட்டாங்க. எம்எல்ஏன்னா ஆடம்பரமாக பெரிய படையோட வரணும்னு எதிர்பார்க்குறாங்க அதிகாரிங்க. என்னோட அடையாள அட்டையைக் காட்டினதற்கு அப்புறம்தான் உள்ளேயே விட்டாங்க என்கிறார். இந்தக் காலத்திலும் எம்எல்ஏவுக்கான எந்த அடையாள மும் இல்லாமல் இருப்பவர். எங்க போனாலும் பதாங்க. பலமுறை எம்எல்ஏன்னு நடத்துனர்கிட்ட சொன்னாக் கூட நம்ப மறுக்கிறாங்க.

சாதாரண குடும்பத்துல இருந்து வந்தவள் நான். ஊர்ல என் அம்மாவும், அப்பாவும் கூலி வேலைக்குப் போறா ங்க. இந்த மக்கள் என்னை மாதிரியான ஒரு ஏழ்மையான பின்னணியில் இருந்து வந்தவளை ஏற்றுக் கொண்டாங்க இல்லையா? அவங்களுக்கு தான் நான் நன்றி சொல்லணும் என்று சொல்லும் லீமாரோ பணபலம் இல்லாமல் வெற்றி பெற்ற எம்எல்ஏ.

உங்களுக்கு என்று உள்ள சொத்து என்ன? என்றால், பெரியதாக சிரித்தவர்... ஒன்றுமில்ல. 2002ல் இருந்து மூன்று மாசத்துக்கு ஒருமுறை 359 ரூபாய் பிரீமியம் கட்டுற மாதிரி ஒரு எல்ஐசி பாலிசி போட்டேன். அதான் என் சொத்து என்று நம்மை பதற்றப்பட வைக்கிறார்.
கட்சி இவருக்கு சம்பளமாக கொடுப்பது மாதம் 4 ஆயிரம்!

சட்டமன்றக் கூட்டத் தொடருக்கு வரும்போது கூட ரயிலில் இரண்டாம் வகுப்புலதான் வருகிறேன். ஏ.சி. கோச்ல வரலாமே என்று ரயில் பரிசோதனை அதிகாரிகள் கேட்கிறார்கள். எந்த கிளால வந்தா என்ன சார்? எல்லா ரயிலும் சென்னைக்குதானே வருகிறது? என்று சொல்லும் லீமா ரோ,

நன்மாறன் மாதிரியான எம்எல் ஏக்களை அடுத்த ஆட்சியில் மக்கள் கௌரவிப்பார்களா?

Monday, February 28, 2011

வரலாறு படைத்த எம்மின தலைவன் பிரபாகரன்.

 மறப்பேனோவேலுப்பிள்ளை பிரபாகரன் தந்த பதிலை? 2002-ம் ஆண்டு நேர்காணலில் நான் கேட்ட 62-வது கேள்வி அது. ""உங்களுக்கு கடும் கோபம் வர வேண்டுமென்றால் நான் என்ன செய்ய வேண்டும்?'' அதற்கு அனிச்சை செயல் வேகத்தோடு அவரிடமிருந்து வந்த பதில்: ""என் தமிழ் இனத்தின் எதிரியாக இருந்து பாருங்கள். அப்ப தெரியும் என்ட கோபம்!''

வலியது வாழும். நியாயம், நீதி, உணர்வுகள், ஒழுக்கம், விழுமியங்கள் எவை பற்றியும் அதிகம் அலட்டிக் கொள்ளாத இயற்கையின் நியதி இது. ஆம், வலியது வாழும். போரின் கொடுமையோ அதனிலும் பெரிது. வெற்றி பெற்றவன் அனைத்தையும் எடுத்துக் கொள்வான், வரலாறு உட்பட. தோற்றுப் போனவன் தலைகுனிந்து குறுகி நிற்க வேண்டும். வேலுப்பிள்ளை பிரபாகரனும், தமிழீழ விடுதலைப்புலிகளும் விட்ட பிழைகளையும், செய்த தவறுகளையும்தான் இனி பலரும் அதிகமாகப் பேசப்புறப்படுவார்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகள் தவறிழைக்காத தேவ தூதர்கள் இல்லைதான். அவர்கள் செய்த குற்றங்களை, குற்றமென்று உரைக்கும் ஒழுக்க நிலை நமக்கு இருந்தால் மட்டுமே அவர்கள் முன்னெடுத்த விடுதலைப் போராட்டத்தை போற்றி, தொடர்ந்து அப்போராட்டத்தின் அரசியல் இலக்குகளை அம்மக்களுக்கு உறுதி செய்யும் செயற்பாடுகளை நாம் மேற்கொள்ள முடியும்.

மாற்றுக் கருத்துடைய பலரை அரசியல் களத்திலிருந்து அகற்றியது, உலக அளவிலான அரசியல் தலைமைத் துவங்களை உருவாக்காதது, "போர் வெற்றி' தொடர்பான மிகைப்படுத்தப்பட்ட நம்பிக்கைகளை மக்களிடையே உருவாக்கி தங்களை மக்களின் "பந்தயக் குதிரைகளாக' நிறுத்தி -மக்களை அரசியல்மயப்படுத்த தவறியது, ராஜீவ்காந்தி படுகொலையில் சம்பந்தப்பட்டது -அல்லது சம்பந்தப்படவில்லை யென்றால் அதனை சரிவர விளக்காதது... என தமிழீழ விடுதலைப்புலிகள் விட்ட பிழைகள் பல உண்டு.

எனினும் தமிழீழ விடுதலைப்புலிகள் இல்லாத தமிழ் வரலாறும், அவர்தம் வரலாற்றோடு தொடர்பற்ற தமிழர் எதிர்கால எழுச்சியும் இல்லை என்பதே நிதர்சனம். தமிழர் வரலாற்றின் அகற்றமுடியா ஆதர்சமாகவும் வரலாற்றுப் பிரமாண்டமாகவும் வேலுப்பிள்ளை பிரபாகரன் நிலைபெற்று விட்டார் என்பதுதான் உண்மை. எனவேதான் அவரைப் பற்றின சரியான புரிதல் தமிழ் நாட்டுத் தமிழர்களாகிய நமக்கும் முக்கியமானதாகிறது. தமிழர்களாகிய நமது எதிர்கால எழுச்சிக்கும் அது முக்கியம்.

உலகின் ஒரு மூலையில் மிகச்சிறியதோர் தமிழ்க் கூட்டத்திலிருந்து முன்னுதாரணமான தோர் விடுதலைப் போராட்டத்தை கட்டி யெழுப்பியவர் வேலுப்பிள்ளை பிரபாகரன். அந்தப் போராட்டம் நமது இனத்தில் பிறந்த தென்பது, உணர்வுகளைத் தவிர வேறெதுவும் பெரிதாகப் பங்களிக்காத நமக்கும் பெருமையே.

நாற்புறமும் நீர்சூழ்ந்த சிறியதோர் நிலப்பரப்பில், இலங்கையோடு சுற்றியிருக்கும் பெரிய நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், சீனா நாடுகளினது நெருக்குவாரங்களுக்கு ஈடுகொடுத்து, மரபுவழித் தாக்குதல் படை யணிகள், சிறப்புப் படை பிரிவுகள், பீரங்கிப் பிரிவு, கடற்படை, உலக உளவு அமைப்புகள் மெச்சும் மிகத்திறன் கொண்ட புலனாய்வுத் துறை, 70-க்கும் மேலான கப்பல்களை கொண்ட அனைத்துலக ஆயுத கொள்வனவுப் பிரிவு, அரை உரிமை கொண்ட ஒரு செயற்கைக்கோள் -இவற்றிற்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல் 2002-முதல் ஓர் அரசுக்கு இருக்க வேண்டிய துறைசார் அலகுகளுடன் கூடியதோர் நடை முறை அரசை உருவாக்கி பல உலக நாடுகளை விடவும் நேர்த்தியான முறையில் அதனை நிர்வகிக்கும் திறனும், கண்ணியமும், ஒழுக்கமும் கொண்ட நிர்வாக ஏற்பாட்டையும் உருவாக்கி சாதனை செய்தவர் வேலுப்பிள்ளை பிரபாகரன். உலகெங்கும் யூதர்கள் இருந்தாலும் இஸ்ரேல் அவர்களது உரிமை பூமியாய் இருப்பதுபோல் உலகெங்குமுள்ள எட்டு கோடித் தமிழர்கள் தம் இனத்திற்கும் ஒரு நாடு இருக்கிறது என்று பெருமையுடன் பேசும் நிலைக்கு வெகு அருகில் தமிழினத்தை கொண்டு வந்தவர் அவர்.



அவற்றிற்கெல்லாம் மேலாய் இயல்பாகவே தாழ்வு மனப்பான்மை, இலக்கு நோக்கிய விடாப் பிடியான உறுதியின்மை, அதிகாரவர்க்கத்தை கண்டு அஞ்சுதல் போன்ற குணாதியங்களைக் கொண்ட தமிழ் இனத்தினது மனவெளியில் கண்ணுக்குப் புலப்படாத போராட்டமொன்று நடத்தி, நம்பிக்கை ஊட்டி, துணிவுடன் நிமிர வைத்து, பிறர் வாழ தம் உயிரை மனமுவந்து ஈகம் செய்யும் தலைமுறை ஒன்றினை புடமிட்டு, நானும் பிறந்து பாக்கியம் பெற்ற இத்தமிழினத்தின் சிந்தனை இயக்கத்தையும் போக்கையும் மாற்றியமைத்ததுதான் வேலுப்பிள்ளை பிரபாகரன் படைத்த உண்மையான வரலாறு.

முல்லைத்தீவில் பல்லாயிரம் போராளிகளையும், பலநூறு கோடி ரூபாய் பெறுமதியுடைய ஆயுதங்களை யும் முற்றாக இழந்து ராணுவரீதியாய் நிர்மூலமாகி விட்டாலும்கூட -வேலுப்பிள்ளை பிரபாகரன் படைத்த இந்த மகத்தான வரலாற்றையும், கால் நூற்றாண்டிற்கு முன் தமிழர்கள் கற்பனைகூட செய்து பார்த்திராத அரசியல் உச்சநிலைக்கு தமிழினத்தை அவர் அழைத்து வந்துவிட்டதையும் தமிழர்களாகிய நாம் ஒவ்வொருவரும் உணர வேண்டும். ராஜீவ்காந்தி படுகொலையில் அவர் குற்றவாளியென்றால் அவ்வாறே இருக்கட்டும். தீர்ப்பு எழுதப்படட்டும், தண்டனையும் தரப்படட்டும். அதேவேளை சில குற்றங்களையும், சில தவறுகளையும் கடந்து அவர் படைத்த இவ்வரலாற்றினை பெருமையுடன் சுவீகரித்துக் கொள்ளும் உரிமை தமிழராகிய நமக்கு இல்லையென்று சொல்ல எந்த அரசுக்கும், அதிகார அமைப்புக்கும் உரிமையில்லை.

தனிப்பட்ட மனிதனாகவும், தன் வாழ்விலும் ஒரு இனத்தின் மாபெரும் நாயகனாகப் போற்றப்படும் இயல்புகள், ஒழுக்கங்கள் கொண்டிருந்தார் அவர் என்பதும் முக்கியமானது. ""தலையை குனியும் நிலையில் இங்கே புலிகள் இல்லையடா, எவனும் விலைகள் பேசும் நிலையில் எங்கள் தலைவன் இல்லையடா'' என அவர்கள் பாடும் பாடல் மிகவும் தகுதி யானதே. ""உலகத் தமிழ் மக்கள் உங்களை தேசியத் தலைவர் எனப் போற்றுகிறார்கள். இத்தகுதியை நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?'' என்று 2002-ல் நான் கேட்ட கேள்விக்கு அவர் தந்த பதில் இவரைப் போலொரு நேர்மையான தலைவரை நாமறிந்த தமிழர் வரலாறு பெற்றிருக்கவில்லை என்ற உணர்வினை அன்றே என்னுள் உருவாக்கியது. 


இதோ அவர் சொன்ன அதே வார்த்தைகள்: ""என்னை நானே மிகைப்படுத்திக்கொள்ளும் எண்ணம் எனக்குக் குறைவு. இப்படி தகுதியையெல்லாம் அடைய வேண்டு மென நான் உழைத்ததை விட என் இனத்திற்கான கடமையை செய்ய வேண்டும், எனது மக்களின் விடுதலைக்காக நான் அர்ப்பணிப்போடு போராட வேண்டும் என்ற எண்ணம்தான் மேலோங்கியிருந்தது. கடமை உணர்வுதான் எனக்கு அதிகம். அதற்கு அப்பால் என்னை நானே பெரிதாக சிந்திக்கிற பழக்கம் எனக்கு இல்லை. என்னோடு கூட நிற்கும் தளபதியர், போராளிகள், அவர்களோடு போராட்ட சவால்களுக்கெல்லாம் ஈடுகொடுக்கும் எமது மக்கள் -எல்லோராலும்தான் போராட்ட சாதனைகள் உருவாக்கப்படுகின்றன''.

தொடர்ந்து நான் கேட்டேன், ""தமிழ் மக்கள் உங்களை அசாதாரணமான ஆற்றல்கள் கொண்ட ஒருவராகப் பார்க்கிறார்களே?'' -இக்கேள்விக்கு அவர் தந்த பதில் எனது வாழ்வில் பெற்ற நேர்காணல் பதில்களிலெல்லாம் அற்புதமானது. ""எல்லோரையும்போல் நானும் ஒரு சாதாரண மனிதன்தான். ஆனால் தமிழ் மக்களுக்கு ஒரு பலவீனம் உண்டு. ஒருவருக்கு பெரிய உருவம் கொடுத்து, தெய்வம் போன்ற மாயையை அவரைச் சுற்றி உருவாக்கி, எல்லா பொறுப்பையும் அவர் மீது போட்டு, தங்கள் கடமை முடிந்ததென்று ஒதுங்கிக் கொள்வார்கள். தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய கடமைகளை நானும் செய்திருக்கிறேன். ஒவ்வொரு தமிழரும் தமிழரென்ற வகையில் தாம் செய்யவேண்டிய கடமைகளை செய்தார்களென்றால் என்னை சுற்றின இந்த பிரம்மாண்டம் இருக்காது. நான் தலைவராகவே உங்களுக்குத் தெரியமாட்டேன்''. என்னே தெளிவு. என்னே நேர்மை! என்னே தன்னம்பிக்கை!

முல்லைத்தீவு பேரழிவிலிருந்து தங்களையும் விடுதலைப் போராட்டத்தையும் தற்காத்துக்கொள்ள ஒரே ஒரு வாய்ப்பு தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு இருந்தது. கடந்த ஜனவரி 24 அன்று வன்னிப்பரப்பிலுள்ள கல்மடு குளத்தை புலிகள் உடைத்துவிட நூற்றுக்கணக்கான ராணுவத்தினர் பலியான செய்தியை நக்கீரன் வாசகர்கள் அறிந்திருப்பீர்கள். கல்மடு குளத்தைவிட பன்மடங்கு பெரியது இரனைமடு ஏரி. இரனைமடு ஏரியை உடைத்திருந்தால் ஊழிப்பெருக்குபோல் பெருவெள்ளம் புறப்பட்டு வன்னிப் பரப்பு முழுதையும் விழுங்கி பூநகரி வரையுள்ள மரம், செடி, உயிர் அனைத் தையும் அழித்துத் தீர்த்திருக்கும். மிகக் குறைந்தபட்சம் 40,000 சிங்கள ராணுவத் தினர் செத்து மிதந்திருப்பர். அவர்தம் பல்லாயிரம் கோடி பெறுமதியுடைய ஆயுதங்கள், ராணுவ கட்டுமானங்களும் புதையுண்டு போயிருக்கும். இந்த மரண அடியிலிருந்து அடுத்த பத்து ஆண்டு களுக்கு சிங்கள ராணுவம் எழும்பியிருக் காது.


ராஜபக்சே சகோதரர்களின் அரசியலும் முடிந்திருக்கும். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க தளபதிகள் இறுதி அஸ்திரமாக இரனைமடு ஏரியை உடைக்கும் ஆலோசனையை முன்வைத்தபோது யோசனைகளுக்கு இடம் கொடுக்காமலேயே பிரபாகரன் சொன்னாராம், ""நீங்க சொல்றது சரிதான். இரனை மடுவெ உடைச்சா சிங்கள ஆர்மிகாரனுக்கு மரண அடி கொடுக்கலாம். ஆனால் வன்னியின்றெ பொருளாதாரமும் அதோட போகும். அடுத்த நூறு ஆண்டுக்கு அந்த மண்வளத்தையும் விவசாய பொருளாதாரத்தையும் ஒருத்தராலயும் மீட்டெடுக்க முடியாது.

நம் வன்னி சனம் எத்தனையோ கஷ்டங்கள்பட்டு விடுதலைப்போராட்டத் தோடு நிக்கிறாங்கள். அந்த சனத்துக்கு நாம் இப்படியொரு துரோகம் செய்ய ஏலாது.'' பேரழிவு நெருங்கிவந்த பொழுதில்கூட தனது மக்களின் வாழ்வுக்கான ஆதார வளங்களை அழித்து தன்னையும் இயக்கத்தையும் பாதுகாக்க மறுத்த இந்த மாமனிதனா பயங்கரவாதி? ஐயப்படும் அன்பர்களுக்கும், ஆங்கில ஊடகத்து அந்நியர்களுக்கும் இவற்றையெல் லாம் எடுத்துரையுங்கள். அவர்கள் வனைவு செய்த பயங்கரவாத வர்ணஜாலங்களுக்கு அப்பால் இதயம் கொண்டதொரு மனி தன் பிரபாகரன் என்பதை உரத்துச் சொல்லுங்கள்.


Image Hosted by ImageShack.us
நன்றி: தமிழீழ வேங்கை
                                          

நீங்கள் அனுப்பிய மெயிலை படித்துவிட்டாரா என்பதை அறிய.......

நீங்கள் ஒரு முக்கியமான நபருக்கு அல்லது நண்பர்களுக்குப் மெயில் அனுப்பி விட்டு அவருடைய பதிலுக்காகக் காத்துக்கொண்டு இருப்பீர்கள்.
குறைந்த பட்சம் அவர் உங்கள் மெயில் படித்து விட்டாரா? இல்லையா? என்பதை அறிந்து கொண்டால் நன்றாக இருக்கும் அல்லவா. இதை அறிந்து கொள்ள spypig என்ற நிறுவனம் இந்த சேவையை அளிக்கிறது.இதற்கு 1. முதலில் எப்போதும் போல மெயில் டைப் அடித்து தயாராக வைத்துக் கொள்ளுங்கள்
2. இப்போது http://www.spypig.com/ இணைய தளத்திற்குச் செல்லுங்கள். அங்கு உங்கள் முகவரி மற்றும் உங்கள் நண்பர் முகவரி கொடுங்கள்.

3. முதல் படத்தைத்(வெற்றுப் படம்) தேர்ந்து எடுத்து, ”Click to Activate my Spypig" என்பதைச் சொடுக்குங்கள்.
4. இப்போது ஒரு பெட்டியில் நீங்கள் தேர்ந்து எடுத்த படம் காட்டப்படும். அதன் மீது சுட்டியை வைத்து வலது பொத்தானை சொடுக்கி, “Copy Image (Firefox) & Copy(IE)" சொடுக்கி copy செய்யவும்.
5. இப்போது நீங்கள் டைப் செய்து வைத்த மெயிலை திறந்து அந்த பக்கத்தின் அடியில் இந்த படத்தை ஒட்டி உடனே மெயிலை அனுப்பி விடுங்கள்.
நீங்கள் அனுப்பிய மெயிலை அவர் திறந்த உடன் எந்த ஊரிலிருந்து படித்தார், எப்போது படித்தார் போன்ற தகவல்கள் உங்கள் மெயிலுக்கு வந்துவிடும்.

ராஜபக்சே கொடும்பாவி எரிப்பு: வைகோ - பழ நெடுமாறன் கைது

பிரபாகரன் தாயார் மறைந்த பார்வதி அம்மாளின் அஸ்தியை நாசமாக்கி அவமதித்த சிங்களர்களைக் கண்டிக்கும் வகையில் சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிட்டு, ராஜபக்சே கொடும்பாவியை எரித்த வைகோ, பழ நெடுமாறன் ஆகியோர் இன்று கைது செய்யப்பட்டனர்.

பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் இறுதி சடங்கில் அஸ்தியை நாசமாக்கியும், அவர் எரியூட்டப்பட்ட இடத்தில் நாய்களைக் கொன்று வீசியும் அவமதிப்பு செய்த இலங்கை அதிபர் ராஜபக்சே அரசை கண்டித்தும் சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை அகற்றக் கோரியும் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் பழநெடுமாறன் தலைமையில் மயிலாப்பூர் நாகேஸ்வரா பூங்கா அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டார். அவர் பேசுகையில், "அன்னை பார்வதி அம்மாள் சடலத்தை அவ மதிப்பு செய்த இலங்கை அரசை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த கொடூரமான செயலுக்கு காங்கிரஸ் ஆட்சிதான் காரணம். முத்துக்குமார் ஏற்றி வைத்த தீயை அணைக்க கூடாது. தொடர்ந்து அதே வேகத்தில் செயல்பட வேண்டும்.

பார்வதி அம்மாள் சிதையை அவமதிப்பு செய்ததை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்...", என்றார்.

Sunday, February 27, 2011

ஜெனீவா மனித உரிமைக்கவுன்சிலில் தமிழரொருவருக்கு உரையாற்றும் வாய்ப்பு:

இலங்கைக்கெதிரான ஆதாரங்கள் முன் வைக்கப்படும்
[ ஞாயிற்றுக்கிழமை, 27 பெப்ரவரி 2011, 12:18.39 AM GMT ]
ஜெனீவாவில் இன்று (28) ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் பேரவையின் மனித உரிமைக் கவுன்சில் தொடர்பான அமர்வின் போது இலங்கைக்கெதிரான குற்றச்சாட்டுகளை முன் வைக்கும் சந்தர்ப்பம் தமிழர் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இன்டர் பெய்த் இன்டர்நெஷனல் மற்றும் தமிழர் மனித உரிமைக் கவுன்சில் என்பவற்றின் தலைவரான விஸ்வலிங்கம் கிருபாகரனுக்கே அந்த வாய்ப்புக் கிட்டியுள்ளது. மனித உரிமைக்கவுன்சில் அமர்வின் போது அவர் இலங்கைக்கு எதிரான ஆதாரங்களை முன் வைக்கவுள்ளார்.
இச்செய்தி கேள்விப்பட்டவுடன் அவர் விடுதலைப் புலிகளின் அபிமானி என்று குற்றம் சாட்டி அரசாங்கம் அவரது குற்றச்சாட்டுகளை மழுங்கடிக்கும் முயற்சிகளை முன்னெடுத்துள்ளது.
கனேடிய உளவுத்துறையும் அவர் விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் என்று பட்டியலிட்டுள்ளது. அவ்வளவையும் மீறி இன்று அவர் மனித உரிமைக் கவுன்சில் பேரமர்வில் உரையாற்ற உள்ளார்.

ஒரு நோயாளிக்கு இரு இதயங்கள்! : மருத்துவ உலகின் புதிய சாதனை!

மருத்துவ வரலாற்றில் மிக அரிதான சத்திரசிகிச்சை ஒன்றை அமெரிக்க வைத்தியர்கள் அண்மையில் வெற்றிகரமாக முடித்தனர்.

நோயாளி ஒருவருக்கு மேலதிகமாக இன்னொரு இதயத்தினைப் பொருத்தியே அவர்கள் இச்சாதனையைப் புரிந்தனர்.

சென் டியாகோ தோர்டன் வைத்தியசாலையிலேயே இச்சத்திரசிகிச்சை இடம்பெற்றது.

டைசன் ஸ்மித் என்ற 36 வயதான நபருக்குச் சாதாரண இதயத்தின் அருகில் வலது பக்கத்தில் இன்னொரு இதயம் இவ்வாறு பொருத்தப்பட்டுள்ளது.

இதயத்தின் இடது இதயவறை, புது இதயத்துடன் சத்திரசிகிச்சையின் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒக்சிஜன் ஏற்றம் பெற்ற குருதி, பழைய இதயத்திலிருந்து புதிய இதயத்திற்குப் பாய்ச்சப்படும்.

இதன்பிறகு புதிய இடது இதயக்கீழறையிலிருந்து குருதியானது பெருநாடியின் மூலம் உடலின் பாகங்களுக்கும் பாய்ச்சப்படும். ஓர் இதயம் செய்யும் வேலையை இரு இதயங்களும் பகிர்ந்துகொள்ளும்.

குறித்த நபரின் இதயம் பலவீனமடைந்திருந்தமையினாலேயே அவருக்கு இன்னுமொரு இதயம் பொருந்தப்பட்டது. இச்சத்திர சிகிச்சையானது 'ஹெடரோடொபிக் ஹார்ட் டிரான்ஸ்பிளான்டேசன்' என அழைக்கப்படுகின்றது. மிகவும் அரியதொரு சத்திரசிகிச்சையாக இது கருதப்படுகின்றது.

இது நோயாளின் வாழ்நாளை 10 வருடங்களால் அதிகரிக்கும் என சத்திரசிகிச்சையை மேற்கொண்ட வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
நன்றி: பதிவு

Saturday, February 26, 2011

‘‘துரை... எங்கப்பா இருக்கே..?’’ பார்வதி அம்மா நினைவுகளில் கலங்கும் வல்வெட்டித்துறை!






‘‘எம்முடைய புனித விடுதலைப் போராட்டத்தில் வரலாற்றுக் காவியமாகி-விட்ட தியாகிகளில் அன்னை ஓர் உன்னத இடத்தைப் பெறுகிறார். ஒரு பெண்ணாக, ஒரு தாயாக, ஒரு குடும்பத்தின் தலைவியாக வாழ்ந்து வந்த சாதாரண வாழ்க்கையைத் துறந்து, பற்று உறவுகளைத் துறந்து, தன்னுடைய இனத்தின் விடுதலைக்காக அவர் தன்னுடைய உயிரை அர்ப்பணித்தார்.

இந்திய ராணுவ அடக்குமுறைக்கு எதிராக அவர் தொடுத்த அறப்போர் காந்திய தேசத்தை தலைகுனிய வைத்தது. தனிமனித பிறவியாக அவர் சாகவில்லை. தமிழீழ தாய்க்குலத்தின் எழுச்சி வடிவமாக அவருடைய தியாகம் உன்னத வடிவம் அடைகிறது’’

-1988-ம் ஆண்டு இந்திய அடக்குமுறைக்கு எதிராக மட்டக்களப்பில் உண்ணாநோன்பிருந்து உயிர்விட்டார் ஈழத்தாய் அன்னை பூபதி. அவருக்காக விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் வெளியிட்ட இரங்கல் உரை 23 வருடங்கள் கழித்து அவருடைய அன்னையாரான பார்வதி அம்மையாருக்கே பொருந்திப் போவது காலத்தின் கண்களிலும் கண்ணீர்த் துளிகளை வரவழைக்கிறது.

‘‘துரை... எங்கப்பா இருக்கே? உன்னைத்தேடி வாசல்ல சிங்களக் காடையர்கள் வந்து நிக்கிறாங்கள்..?’’ ஓர் அதிகாலையில் பார்வதியம்மா குரல் கொடுத்தபோது, வல்வெட்டித்துறையில் உள்ள வீட்டிலிருந்து தப்பியோடினார் பதினைந்து வயது சிறுவன் பிரபாகரன். அப்போது முதல் தாய்மண்ணுக்கான போராட்டத்தில் தன்னை அர்ப்பணித்துவிட்ட பிரபாகரனால், இன்று தன்னுடைய தாயின் கடைசி முகத்தைக்கூடப் பார்க்க முடியவில்லை.

‘இனி பிரபாகரனை ‘துரை...’ என வாஞ்சையோடு கூப்பிட அவருடைய அன்னை இல்லை’ என்று கறுப்புக்கொடி கட்டி கலங்கிக் கொண்டிருக்கிறது வல்வெட்டித்துறை.

பத்து வருடங்கள் முன்பு வலது பாகம் முழுவதும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட பார்வதி அம்மா, இந்தியாவுக்கு வந்து திருச்சி அருகே உள்ள முசிறியில் தங்கி சிகிச்சை எடுத்துக் கொண்டார். அப்போது முசிறியிலிருந்து திருச்சி செல்வதாக இருந்தால்கூட கே.கே.நகர் டி.எஸ்.பி.யிடம் சொல்லிவிட்டுத்தான் செல்லவேண்டும் என்பது உட்பட பல கடும் கட்டுப்பாடுகளில்தான் சிகிச்சை எடுத்தார் பார்வதி. ஒருவேளை, சிகிச்சை பெறும் பார்வதி அம்மாவை பார்க்க அவருடைய மகன் பிரபாகரன் வரக்கூடும் என்று சந்தேகப்பட்டு மருத்துவமனை வாசலிலேயே எப்போதும் போலீஸை நிறுத்தியிருந்தது அன்றைய அரசு.

அதன்பின் இலங்கை சென்றுவிட்ட பார்வதி அம்மா... சில வருடங்களுக்கு முன் சிகிச்சைக்காக மலேசியா சென்றார். அங்கிருந்து கடந்த வருடம் ஜூலை மாதம் சிகிச்சைக்காக சென்னை வந்த பார்வதி அம்மாவை... தமிழ்நாட்டில் காலடிகள் படவிடாமல் அதே விமானத்திலேயே மீண்டும் மலேசியாவுக்கே திருப்பி அனுப்பியது இன்றைய தி.மு.க. அரசு.

அதன்பின், மலேசியாவில் இருந்து பார்வதி அம்மா எழுதுவதுபோல் தமிழக முதல்வருக்கு கடிதமும் வந்தது. அதில் சென்னையில் சிகிச்சை பெற கலைஞரிடம் பார்வதி அம்மையார் கெஞ்சுவதுபோல எழுதப்பட்டு, முடிவில் நன்றியுடன் உங்கள் உடன்பிறப்பு என எழுதி, பார்வதி அம்மாவின் கைரேகையும் வைக்கப்பட்டிருந்தது.

இந்தக் கடிதத்தை அடுத்து, ‘மருத்துவமனையை விட்டு வெளியே வரக்கூடாது. யாரிடமும் பேசக்கூடாது, எந்த அரசியல் நண்பர்களையும் பார்க்கக் கூடாது’ என்று கடும் நிபந்தனைகளுடன் பார்வதி அம்மையாருக்கு சிகிச்சை அளிக்க கலைஞர் முன்வந்தும்... இப்படியொரு ‘சிறை’ சிகிச்சை தேவையில்லை’ என்று கருதி மறுத்துவிட்டார் பார்வதி அம்மையார்.

இந்த கடிதம் பற்றி அன்றே சர்ச்சையைக் கிளப்பிய வைகோ, தி.நகர் முத்துரங்கன் சாலை பொதுக்-கூட்டத்தில்... ‘‘நினைவு இல்லாமல் படுத்திருக்கும் பார்வதி அம்மையாரின் கைரேகையைப் பெற்று இதுபோன்ற ஒரு கடிதத்தை அவருக்குத் தெரியாமலேயே இவர்களாகவே எழுதியுள்ளனர். நான் கேட்கிறேன் கருணாநிதி அவர்களே... உங்களின் உடன்பிறப்பு என சொல்லிக் கொள்வதற்கு பார்வதி அம்மா என்ன தியாகராய நகர் தி.மு.க.வின் வட்டச் செயலாளரா?’’ என்று கேட்டார் ‘‘பாகிஸ்தானிய சிறுவனுக்கு கூட இதய மாற்று சிகிச்சை கொடுக்கும் சென்னையில்... தமிழச்சியான பார்வதி அம்மையாருக்கு சிகிச்சை அளிக்க மறுத்துவிட்டீர்கள். என்ன காந்தி தேசம் அது?’’ என்று இப்போதும் கேட்கிறார்கள் கொழும்பில் உள்ள தமிழ் பத்திரிகையாளர்கள்.

பார்வதி அம்மையாரின் இறப்பு செய்தியை அறிவிக்கும்போது எந்த வகையிலும் பிரபாகரனின் பெயரை பயன்படுத்தக் கூடாது என்று... எழவு வீட்டுக்கே சென்று எச்சரித்துவிட்டு வந்திருக்கிறது சிங்கள ராணுவம். இதைவிடக் கொடுமையாக... இறந்தபிறகு வாரிசுகளால் செய்யப்படும் ஈமச் சடங்குகள் செய்யக்கூட பார்வதி அம்மையாரின் வாரிசுகளை இலங்கைக்கு அனுமதிக்க மறுத்து வருகிறதாம் சிங்கள அரசு. இதனால் கனடாவில் உள்ள பார்வதி அம்மையாரின் மகள்களும், டென்மார்க்கில் வசிக்கும் பிரபாகரனின் அண்ணன் மனோகரனும்கூட வல்வெட்டித்துறைக்கு வந்து அஞ்சலி செலுத்துவது கேள்விக்குறியாகியுள்ளது.

இதற்கிடையில், தமிழகத்திலிருந்து பார்வதி அம்மையாருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சென்ற விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனை... கொழும்பு விமான நிலையத்தில் வைத்தே திருப்பி அனுப்பியிருக்கிறது சிங்கள அரசு. மகன் தாய் நாட்டுக்காக போராடுகிற ஒரே காரணத்-துக்காக, அஞ்சலியில்கூட வன்மம் காட்டிய ராஜபக்ஷே... ஈழ தேசத்தின் தாய் இறந்த அன்றுதான் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை ரசித்துக் கொண்டிருந்தார்.

பிரபாகரன் என்னும் வீரன் தவழ்ந்து விளையாடிய அந்த மடி, வல்வெட்டித்துறை மயானத்தில் எரியூட்டப்பட்டிருக்கிறது. அந்த சாம்பலில் இருந்து மீண்டும் விடுதலைப்பூக்கள் மலராதா என்ற எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள் ஈழத் தமிழர்கள்!
நன்றி: தமிழக அரசியல்



பிரபஞ்சப் பிறப்பை விளக்கிய ஜார்ஜ் காமாவ் (George Gamow) 1904-1968

பிரபஞ்சப் பிறப்பை விளக்கிய ஜார்ஜ் காமாவ் (George Gamow) 1904-1968

சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா


"நமது பிரபஞ்சம் பெரும் பாய்ச்சலில் (Big Bounce) உதித்ததே தவிரப் பெரு வெடிப்பில் (Big Bang) தோன்றவில்லை ! அதாவது முதலில் குவாண்டம் ஈர்ப்பாற்றல் நிகழ்த்திய விந்தை விளைவுகளால் உள்வெடிப்பு தூண்டிப் புற வெடிப்பில் (An Implosion Triggering an Explosion) உண்டானது."

மார்டின் போஜோவால்டு, (Martin Bojowald, Asst Professor of Physics, Penn. State, USA) (Authour of Big Bounce Theory) (July 2007)

"எனது வெளியீட்டுத் தாள் ஓர் புதிய கணித மாடலை அறிமுகப்படுத்துகிறது. துகளியல் நிலையில் (Quantum State) "பெரும் பாய்ச்சல்" மூலம் (Big Bounce) பயணம் செய்யும் பண்பாடுகளின் புதிய விளக்கங்களை அதிலிருந்து பெற்றுக் கொள்ளலாம், அந்தக் கோட்பாடு ஆரம்ப காலத்துப் பெரு வெடிப்பில் உண்டானதாக ஏற்றுக் கொள்ளப்பட்ட நமது பிரபஞ்சத்தின் மரபுக் கருத்தை நீக்கி அமர்ந்து கொள்ளும். ஆயினும் அந்தப் பண்பாடுகள் சிலவற்றில் உறுதியில்லாமை எப்போதும் இருக்கும். காரணம் எனது கணிப்புகளில் பெரும் பாய்ச்சல் பயணம் நிகழும் போது எல்லை மீறிய துகளியல் விசைகள் (Extreme Quantum Forces) விளைவிக்கும் ஒருவித "அகிலவியல் மறதி" (Cosmic Forgetfulness) எழுகிறது !

மார்டின் போஜோவால்டு








அணுவியல், அகிலவியல், உயிரியல் பெளதிக விஞ்ஞானி

விண்வெளியை வில்லாய் வளைக்க முடியுமா ? பிரபஞ்சத்தின் முடிவுக்கும் ஒழுங்கீனக் கோட்பாடு எனப்படும் 'என்ட்ராப்பி நியதிக்கும் ' [Theory of Entropy] என்ன தொடர்பு ? அண்ட வெளியில் ஊடுறுவிச் செல்லும் ராக்கெட் ஏன் சுருங்குகிறது ? விண்மீன்கள் வெடிப்பதற்கு ஆதி அடிப்படையும், அவற்றுக்குக் காரணமும் யாவை என்று நாம் அறிந்து கொண்டவை என்ன ? சந்ததியின் மூலவிகள் [Genes] புரியும் விந்தைப் புதிர்களைப் பற்றி நவீன விஞ்ஞானம் கண்டு பிடித்தவை என்ன ? உலகத்தைப் பற்றி நாம் அறிந்ததை, 'இலக்கங்களின் விதிப் பிரச்சனைகள் ' [Problems in Laws of Numbers] எவ்விதத்தில்

பாதிக்கின்றன ? இத்தனை வினாக்களையும் தான் எழுதிய 'ஒன்று, இரண்டு, மூன்று...முடிவின்மை ' [One, Two, Three...Infinity] என்னும் நூலில் எழுப்பியவர், ரஷ்ய அமெரிக்க விஞ்ஞானி ஜார்ஜ் காமாவ் [George Gamow]! ரஷ்யாவிலே பிறந்து அமெரிக்கக் குடியினராகிய ஜார்ஜ் காமாவ் அணுக்கரு பெளதிகம் [Nuclear Physics], பிரபஞ்சவியல் [Cosmology] பெளதிகம், மூலக்கூறு உயிரியல் ரசாயனம் [Molecular Biochemistry] ஆகிய முப்பெரும் விஞ்ஞானத் துறைகளில் மேன்மை மிக்க மேதை!








பிரபஞ்சத்தின் முழுத் தோற்றத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் அதன் மூலமான நுண்ணிய பரமாணுக்களையும் [Microscopic], விரிந்து குமிழிபோல் உப்பும் அதன் பிரமாண்ட வடிவத்தையும் பற்றிய [Macroscopic] எல்லாக் கருத்துக்களைத் தனித்தனியாக அறிய வேண்டும்! பிரபஞ்சத்தின் முதல் தோற்றம் ஒரு மாபெரும் வெடிப்பில் [Big Bang Theory] உண்டானது என்பதற்கு முதன் முதல் நிரூபணத்தைக் காட்டியவர் ஜார்க் காமாவ்! அதாவது பல பில்லியன் ஆண்டு களுக்கு முன்பு ஓர் பேரளவு வெடிப்பு நிகழ்ச்சியில் [Colossal Explosion] பிரபஞ்சம் தோன்றி விரிவடைந்து வந்துள்ளது என்ற ஒரு கருத்தை ஆதரித்து, அதற்கு விளக்கம் அளித்து மெய்ப்பித்தவர்களில் முதல்வர், ஜார்ஜ் காமாவ்! பெரு வெடிப்புக்குப் பின்பு பிரபஞ்சம், பின்புல நுண்ணலைக் கதிர்வீச்சை [Background Microwave Radiation] உண்டாக்கி யிருக்க வேண்டும் என்று உறுதியாகக் கூறி, அதையும் நிரூபித்தும் காட்டினார்! அடுத்து அணுக்கருப் பெளதிகத்தின் [Nuclear Physics] ஆரம்ப கால அடிப்படை வளர்ச்சியில், காமாவ் மிகவும் ஈடுபட்டவர். அவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்ட உயிரியல் விஞ்ஞானத்தில் [Biology] ஆர்வம் கொண்டு, இனவிருத்தியில் டிஎன்ஏ [DNA] பற்றி ஆராய்ந்து, நவீன மூலவி நியதியில் [Modern Genetic Theory] ஓர் அடிப்படைத் தத்துவத்தை ஜார்ஜ் காமாவ் இயற்றி யுள்ளார். மேலும் புரோடான் சேர்க்கை [Protein Synthesis] விளக்கத்தில் ஒரு முக்கியமான பகுதியை ஆக்கியுள்ளார் காமாவ்.








ஜார்ஜ் காமாவ் புரிந்த அரும்பெரும் விஞ்ஞானச் சாதனைகள்

1936 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஜார்ஜ் காமாவின் மிக்க விஞ்ஞானச் சாதனைகள் பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றியும், விண்மீன்களின் பிறப்பு, வளர்ச்சியைப் பற்றியும் சார்ந்திருந்தன. 1938 இல் ஹெர்ட்ஸ்பிரங்-ரஸ்ஸல் [Hertzsprung-Russel (H-R Diagram)] வரைபடத்துக்கு ஒரு சிறந்த விளக்கத்தைக் கொடுத்தார். H-R வரைபடத்தில் விண்மீன்களின் ஒளித்திறம் [Brightness] நேரச்சிலும், அவற்றின் உஷ்ணம் மட்ட அச்சிலும் குறிக்கப் பட்டுப் பல விண்மீன்களின் நிலைப்பாடு காட்டப் பட்டுள்ளது. 1939 இல் விரியும் பிரபஞ்சத்தின் மாதிரிக் [Model of the Expanding Universe] கோட்பாட்டை ஆதரித்து அதை அபிவிருத்தி செய்தார். அத்துடன் நிபுளாக்களின் பிறப்பு [Origin of Nebulae], ராட்சதச் செம்மீன்கள் [Red Giant Stars] சக்தியை உற்பத்தி செய்யும் முறைகள் ஆகியவற்றை ஆராய்ந்தார். விண்மீன்கள் வெடிக்கும் போது, அவற்றிலிருந்து நியூட்ரினோ துகள்கள் [Neutrino Particles] வெளியேறுவதை 1940 இல் ஆய்வு செய்து, தான் ஆக்கிய பூதநோவாவின் நியூட்ரினோ நியதியை [Neutrino Theory of Supernova] வெளியீடு செய்தார்.









1948 இல் விஞ்ஞானி ரால்ஃப் ஆல்ஃபருடன் [Ralph Alpher] காமாவும் சேர்ந்து, யூகிப்பட்ட பெரு வெடிப்புக்கு [Postulated Big Bang] நிகழ்ச்சிக்கு முன்பு, பிரபஞ்சத்தின் நிலைமை என்ன என்று ஆராய்ந்ததில் எஞ்சிய நுண்ணலை வெப்பவீச்சு [Residual Microwave Radiation] இருப்பதைக் கண்டார்கள்! அவர்களது அவ்வரிய கண்டுபிடிப்பு மெய்யானது என்று 1965 இல் பிரின்ஸ்டன் பல்கலைக் கழக விஞ்ஞானிகள், தாமும் கண்டு உறுதிப்படுத்தினர்!

பிரபஞ்சத்தின் பிறப்புக் கோட்பாடுகளில் ஒன்றான 'பெரு வெடிப்பு நியதியை ' [Big Bang Theory] உறுதியாக நம்பி அதை விருத்தி செய்த முன்னோடிகளான, ரஷ்ய விஞ்ஞானி அலெக்ஸாண்டர் பிரைடுமான் [Alexander Friedmann], அமெரிக்க விஞ்ஞானி எட்வின் ஹப்பிள் [Edwin Hubble], பிரிட்டிஷ் விஞ்ஞானி பிரெட் ஹாயில் [Fred Hoyle] ஆகியோருள் முக்கியமானவர் ரஷ்ய விஞ்ஞானி, ஜார்ஜ் காமாவ்.









ரஷ்ய மேதை ஜார்ஜ் காமாவின் வாழ்க்கை வரலாறு

ரஷ்யாவில் ஜார்ஜ் காமாவ் ஒடிஸ்ஸா என்னும் நகரில் [Odessa now in Ukraine] 1904 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 4 ஆம் தேதி பிறந்தார். ஒடிஸ்ஸாப் பள்ளியில் படிக்கும் போது, 13 ஆம் வயதுப் பிறந்த நாள் பரிசாக அவரது தந்தையார் தந்த ஒரு தொலைநோக்கி, காமாவ் வானியல் விஞ்ஞானத்தில் ஈடுபட ஆர்வத்தை தூண்டியது! 1922 இல் லெனின்கிரார்டு பல்கலைக் கழகத்தில் [Now St. Petersburg] சேர்ந்து, புகழ் பெற்ற பேராசிரியர் அலெக்ஸாண்டர் பிரைடுமான் [Alexander Friedmann] அவரிடம் ஒளியியல் [Optics], பிரபஞ்சவியல் விஞ்ஞானம் [Cosmology] இரண்டையும் முதலில் பயின்றார். பேராசிரியர் பிரைடுமான், ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் படைத்த ஒப்பியல் நியதிச் [Theory of Relativity] சமன்பாடுகளின் பிரச்சனைகளைத் தவிர்க்க ஒரு கட்டுத் தீர்வு முறைகளை [A Set of Solutions] ஆக்கியவர்! அகிலவெளி விரிந்து கொண்டுதான் போகிறது என்ற கருத்தைக் காமாவுக்கு முதலில் ஊட்டியவர், பிரைடுமான்! ஆனால் அப்போது காமாவ் பிரைடுமான் கூறிய அகிலவெளித் தத்துவத்தைத் தொடராது, கதிர்த்துகள் நியதி [Quantum Theory] மீது வேட்கை மிகுந்து தன் திறமையை விருத்தி செய்ய முயன்றார். 1928 இல் Ph.D. பட்டம் பெற்றபின், ஜெர்மனிக்குச் சென்று காட்டிங்கன் பல்கலைக் கழகத்தில் [University of Gottingen] சேர்ந்து, பேராசிரியர் வெர்னர் ஹைஸன்பர்க் [Werner Heisenberg (1901-1976)] விஞ்ஞான மேதையிடம் ஆராய்ச்சி செய்தார். அதே சமயத்தில் அங்கு பயில வந்த ஹங்கேரியின் விஞ்ஞானி எட்வெர்டு டெல்லருன் [Edward Teller] பழகி இருவரும் கூட்டாக அணுக்கரு பெளதிகத்தில் [Nuclear Physics] பல விஞ்ஞான ஆராய்ச்சிகள் செய்தனர்.







காமாவின் அரிய திறமையை வியந்து, அணுவியல் துறை மேதை நீல்ஸ் போஹ்ர் [Neils Bohr (1871-1962)] அவரைக் கோபன்ஹேகன் கோட்பாடு பெளதிக ஆய்வுக்கூடத்தில் [Copenhegan, Institute of Theoretical Physics] ஆராய்ச்சி செய்ய டென்மார்க் வரும்படி அழைத்தார். அப்போதுதான் ஜார்ஜ் காமாவ் முதன் முதல் அணுக்கரு அமைப்பைத் 'திரவச் சொட்டு மாதிரி ' [Liquid Drop Model] போன்றது என்று எடுத்துக் காட்டினார்! அம்முறையே பின்னால் அணுப்பிளவு [Nuclear Fission], அணுப்பிணைவு [Nuclear Fusion] இயக்க நியதிகளுக்கு அடிப்படை யாக அமைந்தது! அடுத்து ஹெளடர்மன்ஸ் [F. Houtermans], அட்கின்ஸன் [R. Atkinson] ஆகியோருடன் கூட்டுழைத்து, விண்மீன்களின் உள்ளே நிகழும் அணுக்கரு இயக்கங்கள் பற்றி ஆய்வுகள் செய்தார். அதன்பின் 1929 இல் இங்கிலாந்து சென்று, கேம்பிரிட்ஜ் காவென்டிஷ் ஆய்வுக் கூடத்தில் அணுவியல் மேதை ஏர்னஸ்ட் ரூதர்ஃபோர்டுடன் [Ernest Rutherford (1871-1937)] ஆராய்ச்சிகள் செய்தார். அப்பணியில் விரைவாக்கிய புரோட்டான் கணைகளைப் [Accelerated Protons] பயன்படுத்தி அணுவைப் பிளக்க எவ்வளவு சக்தி தேவைப்படும் என்று கணித்தார். அப்போதுதான் முதன் முதலாக காமாவ் மூலகங்களின் செயற்கை ரசவாத முறைகளுக்கு [Artificial Transmutation of Elements] அடிப்படைக் கோட்பாடுகளை அமைத்தார். 1932 இல் அவற்றைப் பின்னால் ஜான் காக்கிராஃப்ட் [John Cockcroft (1897-1967)] தனது நேரடி விரைவாக்கியில் [Linear Accelerator], போரான், லிதியம் [Boron & Lithium] ஆகிய இரண்டையும் புரோட்டான் கணைகளால் தாக்கி ஹீலியத்தை வெற்றிகரமாய் உண்டாக்கினார்! அதுவே முதன் முதல் செய்யப் பட்ட மூலக மாற்றம் அல்லது ரசவாதம் [Artificial Transmutation].









அமெரிக்கா நோக்கி ஜார்ஜ் காமாவ் புறப்பாடு

1931 இல் சோவியத் யூனியன் ரோமில் நடந்த அணுக்கரு பெளதிகக் கூட்டரங்குக்குச் [Nuclear Physics Conference] செல்ல அனுமதி தராமல், ஜார்ஜ் காமாவைத் தடை செய்து அவரை அடைத்துப் போட்டது! மறுபடியும் 1933 இல் பிரஸ்ஸல்ஸ் [Brussels] பெல்ஜியத்தில் நடந்த கூட்டரங்குக்கு அனுமதி கிடைக்கவே, அதைப் பயன்படுத்தி ஜார்ஜ் காமாவ் விடுதலைப் பறவையாய், அமெரிக்காவுக்குப் புலம் பெயர்ந்து 1940 இல் அமெரிக்கக் குடியினரானார்!

அமெரிக்காவில் ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக் கழகத்தில் [Washington D.C.] காமாவ் ஆசிரியராகப் பணி ஏற்றார். அங்கே ஆசிரியராக இருந்த விஞ்ஞான மேதை எட்வெர்டு டெல்லரை மறுபடியும் சந்தித்தார்! அவருடன் கூட்டாளியாகச் சேர்ந்து, காமாவ் அணுக்கரு பெளதிகத்தில் தொடர்ந்து ஆய்வுகள் செய்தார்! 1936 இல் கன உலோகங்கள் கதிரியக்கத் தேய்வின் போது [Radiactive Decay of Heavier Elements] பீட்டா பரமாணுக்கள் [Beta Particles] வெளியேறும் முறைகளைச் சீராக வகுத்து இருவரும் புதியக் கோட்பாடுகளை எழுதினார்கள். அவற்றில் ஒன்றான காமா-டெல்லர் பீட்டா தேய்வு நியதி [Gamow-Teller Theory of Beta Decay] கதிரியக்க விளைவின் போது, எலக்டிரான் எழுச்சியைப் பற்றிக் கூறுகிறது. அடுத்து விண்மீன்களின் தோற்ற ஆரம்பத்தில் எழும் வெப்ப அணுக்கரு இயக்கங்களைப் [Thermo Nuclear Reactions] பற்றி இருவரும் ஆராய்ச்சிகள் செய்தனர்.









1942 இல் அந்த ஆய்வுகளைப் பயன்படுத்திப், பிரபஞ்சவியல் நிகழ்ச்சிகளுக்கும், அணுக்கரு இயக்கங்களுக்கும் இடையே உள்ள தொடர்புகளை ஆராய்ந்தார். அதே ஆண்டில் காமாவ் டெல்லருடன் கூட்டுழைத்து 'ராட்சதச் செம்மீன்களின் ' [Red Giant Stars] உள்ளமைப்பை விளக்கி ஒரு புதிய கோட்பாடை இயற்றினார். விண்மீன்களின் மூலப் பிறப்பைப் [Stellar Evolution] பற்றி டெல்லர் எழுதிய கருத்துக்களைப் பயன்படுத்தி, ஜார்ஜ் காமாவ் பரிதியின் பிரமாண்டமான சக்தி [Sun 's Energy] வெப்ப அணுக்கரு இயக்கங்களினால் [Thermo Nuclear Processes] வெளியாகிறது என்று உறுதியாகக் கூறினார்!

இரண்டாம் உலகப் போர் முடிந்த பிறகு, 1948 இல் அமெரிக்க அணுசக்திப் பேரவை [Atomic Energy Commission] ரஷ்ய அமெரிக்க விஞ்ஞானி ஜார்ஜ் காமாவுக்கு உச்சப் பாதுகாப்பு நம்பிக்கை உறுதி [Top Security Clearance] அளித்து, நியூ மெக்ஸிகோ லாஸ் அலமாஸ் மறைமுகத் தளத்தில் முதல் ஹைடிரஜன் குண்டு தயாரிக்க நியமனம் செய்யப் பட்டார்! 1949 ஆகஸ்டில் சோவியத் ரஷ்யா தனது முதல் புளுடோனிய அணுகுண்டை வெடித்ததும், எட்வெர்டு டெல்லர் அந்த நிகழ்ச்சியைப் பயன்படுத்தி அவரது ஒரே குறி ஆயுதமான வெப்ப அணுக்கருக் குண்டை அதி விரைவில் தயாரித்து,






அமெரிக்காவைப் பாதுகாக்க வேண்டு மென்று வாதித்தார்! ஊமைப் போர் ஊழலில் [Cold War Politics], ரஷ்யா அமெரிக்காவுக்கு முன்பே ராட்சத குண்டை ஆக்கி விட்டால், அமெரிக்காவின் கதி என்ன ஆவது என்று டெல்லர் கவலை அடைந்தார்! அவரது எச்சரிக்கைக்கு அடி பணிந்து, அமெரிக்க ஜனாதிபதி ட்ரூமன் 1950 ஜனவரி இறுதியில் ஹைடிரஜன் குண்டு திட்டத்திற்கு ஒப்புதல் தந்து அங்கீகார மளித்தார்! லாஸ் அலமாஸ் மறைமுகத் தளத்திற்கு மாற்றாக, புதிய லாரென்ஸ் லிவர்மோர் ஆய்வுக் கூடம் [Lawrence Livermore Laboratory] கலிஃபோர்னியாவில் அமைக்கப் பட்டது. அதற்கு எட்வெர்டு டெல்லர் அதிபதியாக ஆக்கப் பட்டார்! டெல்லருக்கு வெப்ப அணுக்கரு ஆய்தப் பணியில் உதவியவர் முக்கியமாக இருவர்: விஞ்ஞான மேதைகள், டாக்டர் ரிச்சர்டு கர்வின் [Richard Garwin], டாக்டர் ஸ்டனிசியா உலாம் [Stanisiaw Ulam].

காமாவ் வாஷிங்டன் பல்கலைக் கழகத்தில் 1934 முதல் 1956 வரை பெளதிகப் பேராசிரியராகவும், அதன் பின் கொலராடோ பல்கலைக் கழகத்தில் 1956 முதல் அவரது மரணம் வரை [1968] பெளதிகப் பேராசிரியராகவும் பணி யாற்றினார்.








பிரபஞ்சப் பிறப்பைக் கூறும் பெரு வெடிப்பு நியதி

பிரபஞ்சத்தின் பிறப்பைப் பற்றி யூகிக்கும் பல கோட்பாடுகளில் ஒன்றான, 'பெரு வெடிப்பு நியதியைத் ' தற்போது பெரும்பான்மையான விஞ்ஞானிகள் ஒப்புக் கொண்டுள்ளனர். அக்கருத்துப்படி ஆதியில் பிரபஞ்சம் பேரளவுத் திணிவுள்ள, மிகத் திட்பமான, வெட்பக் கட்டியாக [Extremely Dense, Compact & Hot] இருந்தது! 10-20 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, ஏதோ ஓர் அகிலப் பெரு வெடிப்பு நிகழ்ந்து [Cosmic Explosion], அதன்பின் பிரபஞ்சம் பெருகி, விரிந்து, குளிர்ந்து போய் வருகிறது!

பெரு வெடிப்புக் கோட்பாடு 1917 இல் ஐன்ஸ்டைன் பொது ஒப்பியல் நியதி விளைவித்த ஒரு கருத்து! அதை விருத்தி செய்தவர், பெல்ஜிய விஞ்ஞானி ஜார்ஜ் லெமைட்டர் [George Lemaitre], ஹாலந்து விஞ்ஞானி வில்லம் சித்தர் [Willem de Sitter], ரஷ்ய விஞ்ஞானி அலெக்ஸாண்டர் பிரைடுமான் [Alexander Friedmann]. அம்மூவரது கருத்துக்களும் பிரபஞ்சம் தோற்றத்திற்குப் பின்பு, எவ்வாறு ஒழுங்கானது என்றுதான் கூறினவே தவிர, அகிலத்தின் ஆதித் துவக்கத்தைப் பற்றி எதுவும் ஆராயவில்லை! 1940 இல் ஜார்ஜ காமாவ் அப்பணியைச் செய்ய தனது மாணவர் ரால்ஃப் ஆல்ஃபர் [Ralph Alpher], ராபர்ட் ஹெர்மன் [Robert Herman] இருவருடன் கூட்டுழைத்து, ஐன்ஸ்டைன் பொது ஒப்பியல் நியதிக்காக எழுதிய பிரைடுமான் தீர்வுகளை எடுத்துக் கொண்டு, அவற்றைப் பின்னும் அபிவிருத்தி செய்தார்.







அடுத்து ஆல்ஃபர், ஹெர்மன் இருவரும் தனியாகக் காமாவின் கருத்துகளை விரிவு செய்தனர். அதன்படி கதிர்வீச்சுக் கடலில் [Sea of Radiation] கொந்தளிக்கும் புரோட்டான், நியூட்ரான், எலக்ட்ரான் [Proton, Neutron, Electron] ஆகிய பரமாணுக்களைக் [Subatomic Particles] கொண்ட இலெம் [Ylem] என்னும் ஆதி அண்ட நிலையிலிருந்து [Primordial State of Matter] பிரபஞ்சம் விரிந்தது! பிரபஞ்சம் பெரு வெடிப்பின் போது மிக மிகச் சூடான நிலையில் இருந்து, பரமாணுக்கள் இணைந்து ஹைடிரஜன் மூலகத்தை விட கனமான மூலகங்கள் [Heavier Elements] முதலில் உண்டாயின! காமாவ், ஆல்ஃபர், ஹெர்மன் குழுவினர் பெரு வெடிப்பில் விளைந்த வெப்பவீச்சுக் கடல் [Sea of Radiation] இன்னும் அகிலத்தில் தங்கி இருக்க வேண்டும் என்று முன்னறிவித்தார்கள்! அவர்கள் கணக்கிட்ட அகிலப் பின்புலக் வெப்பவீச்சுக்கு [Cosmic Background Radiation] இணையான உஷ்ணம் [3 டிகிரி K (கெல்வின்)], 1960 இல் பின்வந்த விஞ்ஞானிகளால் மெய்ப்பிக்கப் பட்டு, பிரபஞ்சத்தின் பெரு வெடிப்பு நியதி மேலும் உறுதியாக்கப் பட்டுள்ளது!










பெரு வெடிப்பு நியதியின்படி, பிரபஞ்சம் முதற் சில இம்மி வினாடிகளில் [microseconds] அதி விரைவாக விரிந்து விட்டது! ஒரே ஓர் உச்சவிசை [Force] மட்டும் முதலில் இருந்து, பிரபஞ்சம் விரிந்து போய்க் குளிர்ந்ததும் அந்த ஒற்றை விசையே, பின்னால் நாமறிந்த ஈர்ப்பியல் விசை [Gravitational Fprce], மின் காந்த விசை [Electromagnetic Force], அணுக்கரு வலுத்த விசை [Strong Nuclear Force], அணுக்கரு நலிந்த விசை [Weak Nuclear Force] ஆகிய நான்கு பிரிவுகளாய் மாறியது! விஞ்ஞானிகள் ஒளித்துகள் யந்திரவியலையும் [Quantum Mechanics], ஈர்ப்பியலையும் ஒருங்கே பிணைக்கும் ஒரு நியதியைத் தேடி வருகிறார்கள்! இதுவரை யாரும் அதைக் கண்டு பிடிக்க முடிய வில்லை! புதிதான 'தொடர் நியதி ' [String Theory] அவ்விரண்டையும் பிணைக்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். ஈர்ப்பியல் விசையை மற்ற மூன்று வித விசைகளுடன் பிணைத்துக் கொள்ளத் 'தொடர் நியதி ' முயல்கிறது! ஆனால் பெளதிக விஞ்ஞானிகள் இப்போது இந்த நான்கு வித விசைகளையும் ஒருங்கே பிணைத்து விளக்கும் 'மகா ஐக்கிய நியதி ' [Grand Unified Theory, GUT] ஒன்றைத் துருவிக் கண்டு பிடிக்க முற்பட்டு வருகிறார்கள்!









சோப்புக் குமிழிபோல் உப்பிடும் [Inflationary Model] பிரபஞ்சம், அந்நிலை முடிந்ததும் மெதுவாகவே விரிகிறது! கோளமாய் விரியும் பிரபஞ்சத்தின் விளிம்பு திறந்த வெளிக்கும், மூடிய வெளிக்கும் இடையே அமைகிறது! பிரபஞ்சம் திறந்த வெளியாக இருந்தால், எப்போதும் அது விரிந்து, விரிந்து, விரிந்து போய்க் கொண்டே யிருக்கும்! மூடிய விளிம்பாகப் பிரபஞ்சம் இருந்தால், அதன் விரிவு நிலை ஒரு காலத்தில் நின்று விடும்! பிறகு அது சுருங்க ஆரம்பித்து, திணிவு அடர்த்தி மிகுந்து, இறுதியில் வெடித்துச் சிதறிவிடும்! பிரபஞ்சம் மூடிய கோளமா அல்லது திறந்த வெளியா என்பது அதன் திணிவு [Density], அன்றி பளு அடர்த்தியைச் [Concentration of Mass] சார்ந்தது! பிரபஞ்சம் அடர்த்தி மிகுந்த பளுவைக் கொண்டிருந்தால், அதனை மூடிய கோளம் என்று கூறலாம்!

பிரபஞ்சத்தின் பெரு வெடிப்பு நிகழ்ச்சிக்கு முன்பு எந்த நிலை இருந்தது என்று, ஸ்டாஃபன் ஹாக்கிங் [Stephen Hawking] போன்ற விஞ்ஞான மேதைகள் கேள்வி எழுப்பி யிருக்கிறார்கள்! பெரு வெடிப்பு நியதியில் பிரபஞ்சத்தின் முற்கால நிலை பற்றி எந்த விளக்கமும் இல்லை! காலக் கடிகாரமே பெரு வெடிப்பிற்கு பின்பு ஓட ஆரம்பித்திருக்கலாம்! ஆகவே பெரு வெடிப்புக்கு முன்பு என்ன இருந்திருக்கும் என்று மூளையைக் குழப்புவதில் அர்த்த மில்லை!










பெரு வெடிப்பு நியதியை மெய்ப்படுத்தும் நிகழ்ச்சிகள்

பிரபஞ்சம் பெரு வெடிப்பிற்குப் பிறகு விரிந்து கொண்டே குளிர்ந்து போகிறது. பெரு வெடிப்பிற்கு ஓரு வினாடி கழித்துப் புரோட்டான்கள் உண்டாயின. முதல் மூன்று நிமிடங்களில் புரோட்டான், நியூட்ரான்களும் பிணைந்து, ஹைடிரஜனுடைய ஏகமூலமான [Isotope] டியூடிரியம் [Deuterium], அடுத்து எளிய மூலகங்களான ஹீலியம், லிதியம், பெரிலியம், போரான் [Helium, Lithium, Beryllium, Boron] ஆகியவை உண்டாயின! விண்வெளியில் மித மிஞ்சிய அளவு ஹீலியம் இருப்பது, பெரு வெடிப்பு நியதியை மெய்ப்படுத்தி உறுதிப் படுத்துகிறது. டியூடிரியம் பிரபஞ்சத்தில் பேரளவில் பரவி யிருப்பது, அகிலத்தின் அண்டத் திணிவைக் [Density of Matter] கணிக்க அனுகூலமாய் இருக்கிறது!

பெரு வெடிப்பு ஏற்பட்டு ஒரு மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு, பிரபஞ்சத்தின் உஷ்ணம் 3000 டிகிரி C அளவுக்குக் குறைந்தது! அப்போது புரோட்டான்களும் எலக்டிரான்களும் சேர்ந்து ஹைடிரஜன் அணுக்கள் உண்டாயின. ஹைடிரஜன் அணுக்கள் ஒளியின் குறிப்பிட்ட சில அலை நீளங்கள், நிறங்கள் ஆகியவற்றை எழுப்பவோ அன்றி விழுங்கவோ செய்யும்! அவ்வாறு உண்டான அணுக்கள், தனித்த எலக்டிரான்ளுக்கு இடையூறு செய்யும், ஒளியின் மற்ற அலை நீளங்களை வெகு தூரத்திற்கு அப்பால் தள்ளி விடுகின்றன.








இந்த மாறுதல் வெப்பவீச்சை விடுவித்து இன்று நாம் காணும்படிச் செய்கிறது! பல பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு குளிர்ந்த அந்த 'அகிலவியல் பின்புல வெப்பவீச்சு ' [Cosmic Background Radiation] சுமார் 3 டிகிரி Kelvin [3 K (-273 C/-454 F)]. 1964 இல் முதன் முதல் அகிலவியல் பின்புல வெப்பவீச்சைத் தேடிக் கண்டு பிடித்த அமெரிக்க வானியல் மேதைகள் இருவர்: ஆர்னோ பென்ஸையாஸ், ராபர்ட் வில்ஸன் [Arno Penzias & Robert Wilson].

1989-1993 ஆண்டுகளில் தேசிய வானியல் விண்வெளி ஆணையகம், நாசா [NASA, National Aeronautics & Space Administration] 'அகிலப் பின்புல உளவி ' [Cosmic Background Explorer, COBE] என்னும் விண்வெளிச் சிமிழை [Spacecraft] ஏவி, அண்ட வெளியில் அகிலப் பின்புல வெப்பவீச்சைத் தளப்பதிவு [Mapping] செய்தது. அந்த தளப்பதிவு 'பெரு வெடிப்பு நியதி ' முன்னறிவித்தபடி மிகத் துள்ளியமாக பின்புல வெப்பவீச்சு அடர்த்தியை [Intensity of the Background Radiation] உறுதிப் படுத்தியது! அத்துடன் அகிலவியல் பின்புல வெப்பவீச்சு சீராக நிலவாது [Not Uniform], சிறிது மாறுபட்டுக் காணப் பட்டது! அந்த மாறுதல்கள் பிரபஞ்சத்தில் காலக்ஸிகள் [Galaxies], மற்ற அமைப்பாடுகளின் வளர்ச்சிக்கு அடிப்படையாய்க் கருதப் படுகின்றன!









பின்புல வெப்பவீச்சு பிரபஞ்சப் பெரு வெடிப்பிற்குப் பிறகு எஞ்சிய நீண்ட கால விளைவு! ஜெர்மன் விஞ்ஞானி மாக்ஸ் பிளான்க் [Max Planck (1858-1947)] கருங்கோளக் கதிர்வீச்சை [Black Body Radiation] ஆராய்ந்து எழுதிய, 'பிளான்க் கதிர்வீச்சுக் கணிப்பாடு [Planck 's Radiation Formula] மூலம் உட்சிவப்பு, நுண்ணலை, வானலை [Infrared, Microwave, Radio Waves] ஆகியவற்றின் அலை நீளங்களைத் தனியே கணக்கிட்டு விடலாம்! அவற்றின் கூட்டமைப்பே பின்புலக் கதிர்வீச்சுகளின் அடர்த்தியாகக் [Intensity of Background Radiation] காணப் படுகிறது. 'ஓர் குறித்த உஷ்ண நிலையில் கதிர்வீச்சு அடர்த்திக்கும், அதன் அலை நீளத்திற்கும் உள்ள ஓர் ஒப்பான உறவை ' மாக்ஸ் பிளான்க் வளைகோடு முன்னறிவிக்கிறது. பெரு வெடிப்பின் பின் தங்கிய பின்புலக் கதிர்வீச்சு 3 டிகிரி K [-270 C/- 450 F] உஷ்ண நிலையில், மாக்ஸ் பிளான்க் முன்னறிவித்த வளைகோட்டை வியக்கத் தக்கவாறு ஒத்துள்ளது! ஏறக்குறைய பின்புலக் கதிர்வீச்சு பிரபஞ்சத்தில் எத்திசையிலும் 'சம வெப்பநிலை ' [Isotropic State] கொண்டுள்ளதாக அறியப் படுகிறது.







ஜார்ஜ் காமாவ் எழுதிய நூல்கள், பெற்ற மதிப்புகள்

கடினமான ஐன்ஸ்டைனின் ஒப்பியல் நியதி [Relativity Theory], சிக்கலான அகிலவியல் கோட்பாடு [Cosmology] ஆகியவற்றை எளிய முறையில் பொது நபர்கள் புரிந்து சுவைக்கும் வண்ணம் காமாவ் எழுதிய விஞ்ஞான நூல்கள்: விந்தைபுரியில் திரு. டாம்கின்ஸ் [Mr. Tomkins in Worderland (1936)], பிறகு பல்லடுக்குப் பதிவுகளில் திரு. டாம்கின்ஸ் [Multi Volumes Mr. Tomkins (1939-1967)], பரிதியின் பிறப்பும், இறப்பும் [The Birth & Death of the Sun (1940)], ஒன்று, இரண்டு, மூன்று...முடிவின்மை [One, Two, Three ...Infinity (1947)], பிரபஞ்சத்தின் படைப்பு [The Creation of the Universe (1952,1961)], பூமி என்னும் ஓர் அண்டம் [A Planet Called Earth (1963)], பரிதி என்னும் ஓர் விண்மீன் [A Star Called the Sun (1964)].

1950 இல் காமாவ் டென்மார்க் ராஜிய விஞ்ஞானக் கழகம் [Royal Danish Academy of Siences (1950)], அடுத்து அமெரிக்க தேசீய விஞ்ஞானக் கழகம் [U.S. National Academy of Sciences (1953)] ஆகியவற்றின் உறுப்பினர் ஆனார். விஞ்ஞான அறிவை எளிய முறையில் பரப்பி ஒப்பிலாப் பெயர் பெற்ற ஜார்ஜ் காமாவுக்கு, 1956 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் கல்வி, விஞ்ஞானக், கலாச்சாரப் பேரவை [UNESCO, United Nations Educational, Scientific & Cultural Organization] காலிங்கப் பரிசை [Kalinga Prize] அளித்துக் கெளரவித்தது. 1965 இல் காமாவ் பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் சர்ச்சில் கல்லூரியின் சிறப்புநர் [Fellow Churchil College, Cambridge] மதிப்பைப் பெற்றார்!








பிரபஞ்ச விஞ்ஞானத்திலும், அணுக்கரு பெளதிகத்திலும் திறமை பெற்ற ரஷ்ய அமெரிக்க விஞ்ஞானி ஜார்ஜ் காமாவ் 1968 ஆகஸ்டு 20 ஆம் தேதி போல்டர் கொலராடோவில் தனது 64 ஆவது வயதில் காலமானார்.


++++++++++++++

Images : NASA, Wikipedea

Information :

1. Wikipedea - Geoge Gamow (February 13, 2011)
2. George Gamow - Answers.com
நன்றி: திண்ணை