Pages

Thursday, February 24, 2011

புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் நடேசன் அவர்களின் மகன் அளித்த வாக்குமூலம்

19 December, 2010 by admin


ஐ நா சபையின் போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைக்குழுக்கு விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் நடேசன் அவர்களின் மகன் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்தவை வருமாறு:

18 ஆம்திகதி அதிகாலை இரண்டு மணிக்கு எனது தந்தையார் என்னுடன் தொடர்புகொண்L 1000 இற்கு மேற்பட்ட காயப்பட்ட போராளிகளும் அவர்களது குடும்பத்தினரும் தன்னுடன் இருப்பதாகவும் அதனால் தாங்கள் அவர்களை காப்பாற்றுவதற்காக சரணடைய முடிவெடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். சரணடைவது தொடர்பாக தான் ஐக்கிய நாடுகளின் இராஜதந்திரகளுடன் கதைத்துள்ளதாகவும் கூறினார்.

எனது தந்தையுடன் புலித்தேவன் அவர்களும் இருந்தார். இன்னும் அரை மணித்தியாலயத்தில் தன்னோடு தொடர்பு கிடைக்கவில்லை என்றால் தங்களுடைய வாழ்வு முடிந்துவிட்டது என்று கருதுமாறும் கூறினார்.

எனது தந்தை உட்பட சரணடைந்த எல்லோரையும் சிறிலங்கா இராணுவத்தினர் அழைத்துசெல்வதை பலர் பார்த்துள்ளனர். பார்த்தவர்கள், இப்போதும் தாயகத்தில் வசித்துவருகின்றார்கள்.

ஐக்கியநாடுகள் சபை போதிய பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கும் பட்சத்தில் அவர்கள் நேரடியாக சாட்சியம் அளிப்பார்கள் என தெரிவித்தார்.

இதேவேளை தளபதி ரமேஷ் அவர்களின் மனைவி அளித்த வாக்குமூலத்தில் தனது கணவனின் நிலையை தனக்கு தெரியப்படுத்துமாறு ஐக்கிய நாடுகள் சபையை கேட்டுள்ளார்.

No comments:

Post a Comment