Pages

Thursday, February 24, 2011

இலங்கைக்கு இன்டர்நெட் சிப்பாய்கள் தேவையாம்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் மற்றும் இலங்கைக்கு எதிரான சக்திகளிடமிருந்து இலங்கை தனது இணைய வெளியை பாதுகாப்பதற்கு ‘இன்டர்நெட் சிப்பாய்கள்’ தேவைப்படுவதாக இராணுவத் தளபதி லெப். ஜெனரல் ஜகத் ஜயசூரிய கூறியுள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற இணையவெளி யுத்தம் தொடர்பான கருத்தரங்கொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இணைய தடயவியல் என்பது மிக கடினமானதாகும் என்றும் ஆனால் தேசிய மற்றும் நிறுவன ரீதியில் உயர்தரமான இணைய தடயவியல் பொறிமுறையைக் கொண்டிருப்பது மிக அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் இலங்கையின் தேசிய புலனாய்வுப் பிரிவின் தகவல் மையம் ஒன்று, இணையத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இதனை அறிந்த புலனய்வாளர்கள் அதிர்ந்துபோய் உள்ளதாக சில செய்திகள் கொழும்பில் இருந்து கசிந்துள்ளது. இதனை அடுத்தே சிறு மாநாடு ஒன்றை நடத்தில் அதன் மூலம் ஒரு குழுவை வடிவமைத்து இன்டர்நெட் சிப்பாய்களைத் தோற்றுவிக்க இலங்கை அரசு முற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பில் இத் துறைசார் நிபுணர்கள் பலர் இருந்தாலும், அவர்கள் இராணுவத்தில் இல்லை. எனவே அவர்களை இணைத்து ஒரு புதிய பொறிமுறை ஒன்றைக் கையாள அரசு முற்பட்டுள்ளது தெரியவருகிறது. ‘
இராணுவத்தின் மனிதாபிமான நடவடிக்கையின்போது இராணுவத்தின் இணைய தளமும் தாக்குதலுக்கு இலக்கானது.தற்போதுகூட எமது இணைய தளத்தில் ஊடுருவி தாக்குவதற்கு தொடர்ச்சியான முயற்சிகள் நடைபெறுகின்றன. இதுவரை எமது இணைய தளத்தை நாம் வெற்றிகரமாக பாதுகாத்து வந்துள்ளோம்’ என இராணுவத் தளபதி ஜாடை மாடையாகத் தெரிவித்துள்ளார். அவரே கசிந்த இச் செய்திகளை உறுதிப்படுத்துவது போலப் பேசியுள்ளார் என்பதே வேடிக்கையான விடையமாகும்.

No comments:

Post a Comment