Pages

Monday, February 28, 2011

வரலாறு படைத்த எம்மின தலைவன் பிரபாகரன்.

 மறப்பேனோவேலுப்பிள்ளை பிரபாகரன் தந்த பதிலை? 2002-ம் ஆண்டு நேர்காணலில் நான் கேட்ட 62-வது கேள்வி அது. ""உங்களுக்கு கடும் கோபம் வர வேண்டுமென்றால் நான் என்ன செய்ய வேண்டும்?'' அதற்கு அனிச்சை செயல் வேகத்தோடு அவரிடமிருந்து வந்த பதில்: ""என் தமிழ் இனத்தின் எதிரியாக இருந்து பாருங்கள். அப்ப தெரியும் என்ட கோபம்!''

வலியது வாழும். நியாயம், நீதி, உணர்வுகள், ஒழுக்கம், விழுமியங்கள் எவை பற்றியும் அதிகம் அலட்டிக் கொள்ளாத இயற்கையின் நியதி இது. ஆம், வலியது வாழும். போரின் கொடுமையோ அதனிலும் பெரிது. வெற்றி பெற்றவன் அனைத்தையும் எடுத்துக் கொள்வான், வரலாறு உட்பட. தோற்றுப் போனவன் தலைகுனிந்து குறுகி நிற்க வேண்டும். வேலுப்பிள்ளை பிரபாகரனும், தமிழீழ விடுதலைப்புலிகளும் விட்ட பிழைகளையும், செய்த தவறுகளையும்தான் இனி பலரும் அதிகமாகப் பேசப்புறப்படுவார்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகள் தவறிழைக்காத தேவ தூதர்கள் இல்லைதான். அவர்கள் செய்த குற்றங்களை, குற்றமென்று உரைக்கும் ஒழுக்க நிலை நமக்கு இருந்தால் மட்டுமே அவர்கள் முன்னெடுத்த விடுதலைப் போராட்டத்தை போற்றி, தொடர்ந்து அப்போராட்டத்தின் அரசியல் இலக்குகளை அம்மக்களுக்கு உறுதி செய்யும் செயற்பாடுகளை நாம் மேற்கொள்ள முடியும்.

மாற்றுக் கருத்துடைய பலரை அரசியல் களத்திலிருந்து அகற்றியது, உலக அளவிலான அரசியல் தலைமைத் துவங்களை உருவாக்காதது, "போர் வெற்றி' தொடர்பான மிகைப்படுத்தப்பட்ட நம்பிக்கைகளை மக்களிடையே உருவாக்கி தங்களை மக்களின் "பந்தயக் குதிரைகளாக' நிறுத்தி -மக்களை அரசியல்மயப்படுத்த தவறியது, ராஜீவ்காந்தி படுகொலையில் சம்பந்தப்பட்டது -அல்லது சம்பந்தப்படவில்லை யென்றால் அதனை சரிவர விளக்காதது... என தமிழீழ விடுதலைப்புலிகள் விட்ட பிழைகள் பல உண்டு.

எனினும் தமிழீழ விடுதலைப்புலிகள் இல்லாத தமிழ் வரலாறும், அவர்தம் வரலாற்றோடு தொடர்பற்ற தமிழர் எதிர்கால எழுச்சியும் இல்லை என்பதே நிதர்சனம். தமிழர் வரலாற்றின் அகற்றமுடியா ஆதர்சமாகவும் வரலாற்றுப் பிரமாண்டமாகவும் வேலுப்பிள்ளை பிரபாகரன் நிலைபெற்று விட்டார் என்பதுதான் உண்மை. எனவேதான் அவரைப் பற்றின சரியான புரிதல் தமிழ் நாட்டுத் தமிழர்களாகிய நமக்கும் முக்கியமானதாகிறது. தமிழர்களாகிய நமது எதிர்கால எழுச்சிக்கும் அது முக்கியம்.

உலகின் ஒரு மூலையில் மிகச்சிறியதோர் தமிழ்க் கூட்டத்திலிருந்து முன்னுதாரணமான தோர் விடுதலைப் போராட்டத்தை கட்டி யெழுப்பியவர் வேலுப்பிள்ளை பிரபாகரன். அந்தப் போராட்டம் நமது இனத்தில் பிறந்த தென்பது, உணர்வுகளைத் தவிர வேறெதுவும் பெரிதாகப் பங்களிக்காத நமக்கும் பெருமையே.

நாற்புறமும் நீர்சூழ்ந்த சிறியதோர் நிலப்பரப்பில், இலங்கையோடு சுற்றியிருக்கும் பெரிய நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், சீனா நாடுகளினது நெருக்குவாரங்களுக்கு ஈடுகொடுத்து, மரபுவழித் தாக்குதல் படை யணிகள், சிறப்புப் படை பிரிவுகள், பீரங்கிப் பிரிவு, கடற்படை, உலக உளவு அமைப்புகள் மெச்சும் மிகத்திறன் கொண்ட புலனாய்வுத் துறை, 70-க்கும் மேலான கப்பல்களை கொண்ட அனைத்துலக ஆயுத கொள்வனவுப் பிரிவு, அரை உரிமை கொண்ட ஒரு செயற்கைக்கோள் -இவற்றிற்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல் 2002-முதல் ஓர் அரசுக்கு இருக்க வேண்டிய துறைசார் அலகுகளுடன் கூடியதோர் நடை முறை அரசை உருவாக்கி பல உலக நாடுகளை விடவும் நேர்த்தியான முறையில் அதனை நிர்வகிக்கும் திறனும், கண்ணியமும், ஒழுக்கமும் கொண்ட நிர்வாக ஏற்பாட்டையும் உருவாக்கி சாதனை செய்தவர் வேலுப்பிள்ளை பிரபாகரன். உலகெங்கும் யூதர்கள் இருந்தாலும் இஸ்ரேல் அவர்களது உரிமை பூமியாய் இருப்பதுபோல் உலகெங்குமுள்ள எட்டு கோடித் தமிழர்கள் தம் இனத்திற்கும் ஒரு நாடு இருக்கிறது என்று பெருமையுடன் பேசும் நிலைக்கு வெகு அருகில் தமிழினத்தை கொண்டு வந்தவர் அவர்.



அவற்றிற்கெல்லாம் மேலாய் இயல்பாகவே தாழ்வு மனப்பான்மை, இலக்கு நோக்கிய விடாப் பிடியான உறுதியின்மை, அதிகாரவர்க்கத்தை கண்டு அஞ்சுதல் போன்ற குணாதியங்களைக் கொண்ட தமிழ் இனத்தினது மனவெளியில் கண்ணுக்குப் புலப்படாத போராட்டமொன்று நடத்தி, நம்பிக்கை ஊட்டி, துணிவுடன் நிமிர வைத்து, பிறர் வாழ தம் உயிரை மனமுவந்து ஈகம் செய்யும் தலைமுறை ஒன்றினை புடமிட்டு, நானும் பிறந்து பாக்கியம் பெற்ற இத்தமிழினத்தின் சிந்தனை இயக்கத்தையும் போக்கையும் மாற்றியமைத்ததுதான் வேலுப்பிள்ளை பிரபாகரன் படைத்த உண்மையான வரலாறு.

முல்லைத்தீவில் பல்லாயிரம் போராளிகளையும், பலநூறு கோடி ரூபாய் பெறுமதியுடைய ஆயுதங்களை யும் முற்றாக இழந்து ராணுவரீதியாய் நிர்மூலமாகி விட்டாலும்கூட -வேலுப்பிள்ளை பிரபாகரன் படைத்த இந்த மகத்தான வரலாற்றையும், கால் நூற்றாண்டிற்கு முன் தமிழர்கள் கற்பனைகூட செய்து பார்த்திராத அரசியல் உச்சநிலைக்கு தமிழினத்தை அவர் அழைத்து வந்துவிட்டதையும் தமிழர்களாகிய நாம் ஒவ்வொருவரும் உணர வேண்டும். ராஜீவ்காந்தி படுகொலையில் அவர் குற்றவாளியென்றால் அவ்வாறே இருக்கட்டும். தீர்ப்பு எழுதப்படட்டும், தண்டனையும் தரப்படட்டும். அதேவேளை சில குற்றங்களையும், சில தவறுகளையும் கடந்து அவர் படைத்த இவ்வரலாற்றினை பெருமையுடன் சுவீகரித்துக் கொள்ளும் உரிமை தமிழராகிய நமக்கு இல்லையென்று சொல்ல எந்த அரசுக்கும், அதிகார அமைப்புக்கும் உரிமையில்லை.

தனிப்பட்ட மனிதனாகவும், தன் வாழ்விலும் ஒரு இனத்தின் மாபெரும் நாயகனாகப் போற்றப்படும் இயல்புகள், ஒழுக்கங்கள் கொண்டிருந்தார் அவர் என்பதும் முக்கியமானது. ""தலையை குனியும் நிலையில் இங்கே புலிகள் இல்லையடா, எவனும் விலைகள் பேசும் நிலையில் எங்கள் தலைவன் இல்லையடா'' என அவர்கள் பாடும் பாடல் மிகவும் தகுதி யானதே. ""உலகத் தமிழ் மக்கள் உங்களை தேசியத் தலைவர் எனப் போற்றுகிறார்கள். இத்தகுதியை நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?'' என்று 2002-ல் நான் கேட்ட கேள்விக்கு அவர் தந்த பதில் இவரைப் போலொரு நேர்மையான தலைவரை நாமறிந்த தமிழர் வரலாறு பெற்றிருக்கவில்லை என்ற உணர்வினை அன்றே என்னுள் உருவாக்கியது. 


இதோ அவர் சொன்ன அதே வார்த்தைகள்: ""என்னை நானே மிகைப்படுத்திக்கொள்ளும் எண்ணம் எனக்குக் குறைவு. இப்படி தகுதியையெல்லாம் அடைய வேண்டு மென நான் உழைத்ததை விட என் இனத்திற்கான கடமையை செய்ய வேண்டும், எனது மக்களின் விடுதலைக்காக நான் அர்ப்பணிப்போடு போராட வேண்டும் என்ற எண்ணம்தான் மேலோங்கியிருந்தது. கடமை உணர்வுதான் எனக்கு அதிகம். அதற்கு அப்பால் என்னை நானே பெரிதாக சிந்திக்கிற பழக்கம் எனக்கு இல்லை. என்னோடு கூட நிற்கும் தளபதியர், போராளிகள், அவர்களோடு போராட்ட சவால்களுக்கெல்லாம் ஈடுகொடுக்கும் எமது மக்கள் -எல்லோராலும்தான் போராட்ட சாதனைகள் உருவாக்கப்படுகின்றன''.

தொடர்ந்து நான் கேட்டேன், ""தமிழ் மக்கள் உங்களை அசாதாரணமான ஆற்றல்கள் கொண்ட ஒருவராகப் பார்க்கிறார்களே?'' -இக்கேள்விக்கு அவர் தந்த பதில் எனது வாழ்வில் பெற்ற நேர்காணல் பதில்களிலெல்லாம் அற்புதமானது. ""எல்லோரையும்போல் நானும் ஒரு சாதாரண மனிதன்தான். ஆனால் தமிழ் மக்களுக்கு ஒரு பலவீனம் உண்டு. ஒருவருக்கு பெரிய உருவம் கொடுத்து, தெய்வம் போன்ற மாயையை அவரைச் சுற்றி உருவாக்கி, எல்லா பொறுப்பையும் அவர் மீது போட்டு, தங்கள் கடமை முடிந்ததென்று ஒதுங்கிக் கொள்வார்கள். தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய கடமைகளை நானும் செய்திருக்கிறேன். ஒவ்வொரு தமிழரும் தமிழரென்ற வகையில் தாம் செய்யவேண்டிய கடமைகளை செய்தார்களென்றால் என்னை சுற்றின இந்த பிரம்மாண்டம் இருக்காது. நான் தலைவராகவே உங்களுக்குத் தெரியமாட்டேன்''. என்னே தெளிவு. என்னே நேர்மை! என்னே தன்னம்பிக்கை!

முல்லைத்தீவு பேரழிவிலிருந்து தங்களையும் விடுதலைப் போராட்டத்தையும் தற்காத்துக்கொள்ள ஒரே ஒரு வாய்ப்பு தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு இருந்தது. கடந்த ஜனவரி 24 அன்று வன்னிப்பரப்பிலுள்ள கல்மடு குளத்தை புலிகள் உடைத்துவிட நூற்றுக்கணக்கான ராணுவத்தினர் பலியான செய்தியை நக்கீரன் வாசகர்கள் அறிந்திருப்பீர்கள். கல்மடு குளத்தைவிட பன்மடங்கு பெரியது இரனைமடு ஏரி. இரனைமடு ஏரியை உடைத்திருந்தால் ஊழிப்பெருக்குபோல் பெருவெள்ளம் புறப்பட்டு வன்னிப் பரப்பு முழுதையும் விழுங்கி பூநகரி வரையுள்ள மரம், செடி, உயிர் அனைத் தையும் அழித்துத் தீர்த்திருக்கும். மிகக் குறைந்தபட்சம் 40,000 சிங்கள ராணுவத் தினர் செத்து மிதந்திருப்பர். அவர்தம் பல்லாயிரம் கோடி பெறுமதியுடைய ஆயுதங்கள், ராணுவ கட்டுமானங்களும் புதையுண்டு போயிருக்கும். இந்த மரண அடியிலிருந்து அடுத்த பத்து ஆண்டு களுக்கு சிங்கள ராணுவம் எழும்பியிருக் காது.


ராஜபக்சே சகோதரர்களின் அரசியலும் முடிந்திருக்கும். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க தளபதிகள் இறுதி அஸ்திரமாக இரனைமடு ஏரியை உடைக்கும் ஆலோசனையை முன்வைத்தபோது யோசனைகளுக்கு இடம் கொடுக்காமலேயே பிரபாகரன் சொன்னாராம், ""நீங்க சொல்றது சரிதான். இரனை மடுவெ உடைச்சா சிங்கள ஆர்மிகாரனுக்கு மரண அடி கொடுக்கலாம். ஆனால் வன்னியின்றெ பொருளாதாரமும் அதோட போகும். அடுத்த நூறு ஆண்டுக்கு அந்த மண்வளத்தையும் விவசாய பொருளாதாரத்தையும் ஒருத்தராலயும் மீட்டெடுக்க முடியாது.

நம் வன்னி சனம் எத்தனையோ கஷ்டங்கள்பட்டு விடுதலைப்போராட்டத் தோடு நிக்கிறாங்கள். அந்த சனத்துக்கு நாம் இப்படியொரு துரோகம் செய்ய ஏலாது.'' பேரழிவு நெருங்கிவந்த பொழுதில்கூட தனது மக்களின் வாழ்வுக்கான ஆதார வளங்களை அழித்து தன்னையும் இயக்கத்தையும் பாதுகாக்க மறுத்த இந்த மாமனிதனா பயங்கரவாதி? ஐயப்படும் அன்பர்களுக்கும், ஆங்கில ஊடகத்து அந்நியர்களுக்கும் இவற்றையெல் லாம் எடுத்துரையுங்கள். அவர்கள் வனைவு செய்த பயங்கரவாத வர்ணஜாலங்களுக்கு அப்பால் இதயம் கொண்டதொரு மனி தன் பிரபாகரன் என்பதை உரத்துச் சொல்லுங்கள்.


Image Hosted by ImageShack.us
நன்றி: தமிழீழ வேங்கை
                                          

நீங்கள் அனுப்பிய மெயிலை படித்துவிட்டாரா என்பதை அறிய.......

நீங்கள் ஒரு முக்கியமான நபருக்கு அல்லது நண்பர்களுக்குப் மெயில் அனுப்பி விட்டு அவருடைய பதிலுக்காகக் காத்துக்கொண்டு இருப்பீர்கள்.
குறைந்த பட்சம் அவர் உங்கள் மெயில் படித்து விட்டாரா? இல்லையா? என்பதை அறிந்து கொண்டால் நன்றாக இருக்கும் அல்லவா. இதை அறிந்து கொள்ள spypig என்ற நிறுவனம் இந்த சேவையை அளிக்கிறது.இதற்கு 1. முதலில் எப்போதும் போல மெயில் டைப் அடித்து தயாராக வைத்துக் கொள்ளுங்கள்
2. இப்போது http://www.spypig.com/ இணைய தளத்திற்குச் செல்லுங்கள். அங்கு உங்கள் முகவரி மற்றும் உங்கள் நண்பர் முகவரி கொடுங்கள்.

3. முதல் படத்தைத்(வெற்றுப் படம்) தேர்ந்து எடுத்து, ”Click to Activate my Spypig" என்பதைச் சொடுக்குங்கள்.
4. இப்போது ஒரு பெட்டியில் நீங்கள் தேர்ந்து எடுத்த படம் காட்டப்படும். அதன் மீது சுட்டியை வைத்து வலது பொத்தானை சொடுக்கி, “Copy Image (Firefox) & Copy(IE)" சொடுக்கி copy செய்யவும்.
5. இப்போது நீங்கள் டைப் செய்து வைத்த மெயிலை திறந்து அந்த பக்கத்தின் அடியில் இந்த படத்தை ஒட்டி உடனே மெயிலை அனுப்பி விடுங்கள்.
நீங்கள் அனுப்பிய மெயிலை அவர் திறந்த உடன் எந்த ஊரிலிருந்து படித்தார், எப்போது படித்தார் போன்ற தகவல்கள் உங்கள் மெயிலுக்கு வந்துவிடும்.

ராஜபக்சே கொடும்பாவி எரிப்பு: வைகோ - பழ நெடுமாறன் கைது

பிரபாகரன் தாயார் மறைந்த பார்வதி அம்மாளின் அஸ்தியை நாசமாக்கி அவமதித்த சிங்களர்களைக் கண்டிக்கும் வகையில் சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிட்டு, ராஜபக்சே கொடும்பாவியை எரித்த வைகோ, பழ நெடுமாறன் ஆகியோர் இன்று கைது செய்யப்பட்டனர்.

பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் இறுதி சடங்கில் அஸ்தியை நாசமாக்கியும், அவர் எரியூட்டப்பட்ட இடத்தில் நாய்களைக் கொன்று வீசியும் அவமதிப்பு செய்த இலங்கை அதிபர் ராஜபக்சே அரசை கண்டித்தும் சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை அகற்றக் கோரியும் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் பழநெடுமாறன் தலைமையில் மயிலாப்பூர் நாகேஸ்வரா பூங்கா அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டார். அவர் பேசுகையில், "அன்னை பார்வதி அம்மாள் சடலத்தை அவ மதிப்பு செய்த இலங்கை அரசை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த கொடூரமான செயலுக்கு காங்கிரஸ் ஆட்சிதான் காரணம். முத்துக்குமார் ஏற்றி வைத்த தீயை அணைக்க கூடாது. தொடர்ந்து அதே வேகத்தில் செயல்பட வேண்டும்.

பார்வதி அம்மாள் சிதையை அவமதிப்பு செய்ததை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்...", என்றார்.

Sunday, February 27, 2011

ஜெனீவா மனித உரிமைக்கவுன்சிலில் தமிழரொருவருக்கு உரையாற்றும் வாய்ப்பு:

இலங்கைக்கெதிரான ஆதாரங்கள் முன் வைக்கப்படும்
[ ஞாயிற்றுக்கிழமை, 27 பெப்ரவரி 2011, 12:18.39 AM GMT ]
ஜெனீவாவில் இன்று (28) ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் பேரவையின் மனித உரிமைக் கவுன்சில் தொடர்பான அமர்வின் போது இலங்கைக்கெதிரான குற்றச்சாட்டுகளை முன் வைக்கும் சந்தர்ப்பம் தமிழர் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இன்டர் பெய்த் இன்டர்நெஷனல் மற்றும் தமிழர் மனித உரிமைக் கவுன்சில் என்பவற்றின் தலைவரான விஸ்வலிங்கம் கிருபாகரனுக்கே அந்த வாய்ப்புக் கிட்டியுள்ளது. மனித உரிமைக்கவுன்சில் அமர்வின் போது அவர் இலங்கைக்கு எதிரான ஆதாரங்களை முன் வைக்கவுள்ளார்.
இச்செய்தி கேள்விப்பட்டவுடன் அவர் விடுதலைப் புலிகளின் அபிமானி என்று குற்றம் சாட்டி அரசாங்கம் அவரது குற்றச்சாட்டுகளை மழுங்கடிக்கும் முயற்சிகளை முன்னெடுத்துள்ளது.
கனேடிய உளவுத்துறையும் அவர் விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் என்று பட்டியலிட்டுள்ளது. அவ்வளவையும் மீறி இன்று அவர் மனித உரிமைக் கவுன்சில் பேரமர்வில் உரையாற்ற உள்ளார்.

ஒரு நோயாளிக்கு இரு இதயங்கள்! : மருத்துவ உலகின் புதிய சாதனை!

மருத்துவ வரலாற்றில் மிக அரிதான சத்திரசிகிச்சை ஒன்றை அமெரிக்க வைத்தியர்கள் அண்மையில் வெற்றிகரமாக முடித்தனர்.

நோயாளி ஒருவருக்கு மேலதிகமாக இன்னொரு இதயத்தினைப் பொருத்தியே அவர்கள் இச்சாதனையைப் புரிந்தனர்.

சென் டியாகோ தோர்டன் வைத்தியசாலையிலேயே இச்சத்திரசிகிச்சை இடம்பெற்றது.

டைசன் ஸ்மித் என்ற 36 வயதான நபருக்குச் சாதாரண இதயத்தின் அருகில் வலது பக்கத்தில் இன்னொரு இதயம் இவ்வாறு பொருத்தப்பட்டுள்ளது.

இதயத்தின் இடது இதயவறை, புது இதயத்துடன் சத்திரசிகிச்சையின் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒக்சிஜன் ஏற்றம் பெற்ற குருதி, பழைய இதயத்திலிருந்து புதிய இதயத்திற்குப் பாய்ச்சப்படும்.

இதன்பிறகு புதிய இடது இதயக்கீழறையிலிருந்து குருதியானது பெருநாடியின் மூலம் உடலின் பாகங்களுக்கும் பாய்ச்சப்படும். ஓர் இதயம் செய்யும் வேலையை இரு இதயங்களும் பகிர்ந்துகொள்ளும்.

குறித்த நபரின் இதயம் பலவீனமடைந்திருந்தமையினாலேயே அவருக்கு இன்னுமொரு இதயம் பொருந்தப்பட்டது. இச்சத்திர சிகிச்சையானது 'ஹெடரோடொபிக் ஹார்ட் டிரான்ஸ்பிளான்டேசன்' என அழைக்கப்படுகின்றது. மிகவும் அரியதொரு சத்திரசிகிச்சையாக இது கருதப்படுகின்றது.

இது நோயாளின் வாழ்நாளை 10 வருடங்களால் அதிகரிக்கும் என சத்திரசிகிச்சையை மேற்கொண்ட வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
நன்றி: பதிவு

Saturday, February 26, 2011

‘‘துரை... எங்கப்பா இருக்கே..?’’ பார்வதி அம்மா நினைவுகளில் கலங்கும் வல்வெட்டித்துறை!






‘‘எம்முடைய புனித விடுதலைப் போராட்டத்தில் வரலாற்றுக் காவியமாகி-விட்ட தியாகிகளில் அன்னை ஓர் உன்னத இடத்தைப் பெறுகிறார். ஒரு பெண்ணாக, ஒரு தாயாக, ஒரு குடும்பத்தின் தலைவியாக வாழ்ந்து வந்த சாதாரண வாழ்க்கையைத் துறந்து, பற்று உறவுகளைத் துறந்து, தன்னுடைய இனத்தின் விடுதலைக்காக அவர் தன்னுடைய உயிரை அர்ப்பணித்தார்.

இந்திய ராணுவ அடக்குமுறைக்கு எதிராக அவர் தொடுத்த அறப்போர் காந்திய தேசத்தை தலைகுனிய வைத்தது. தனிமனித பிறவியாக அவர் சாகவில்லை. தமிழீழ தாய்க்குலத்தின் எழுச்சி வடிவமாக அவருடைய தியாகம் உன்னத வடிவம் அடைகிறது’’

-1988-ம் ஆண்டு இந்திய அடக்குமுறைக்கு எதிராக மட்டக்களப்பில் உண்ணாநோன்பிருந்து உயிர்விட்டார் ஈழத்தாய் அன்னை பூபதி. அவருக்காக விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் வெளியிட்ட இரங்கல் உரை 23 வருடங்கள் கழித்து அவருடைய அன்னையாரான பார்வதி அம்மையாருக்கே பொருந்திப் போவது காலத்தின் கண்களிலும் கண்ணீர்த் துளிகளை வரவழைக்கிறது.

‘‘துரை... எங்கப்பா இருக்கே? உன்னைத்தேடி வாசல்ல சிங்களக் காடையர்கள் வந்து நிக்கிறாங்கள்..?’’ ஓர் அதிகாலையில் பார்வதியம்மா குரல் கொடுத்தபோது, வல்வெட்டித்துறையில் உள்ள வீட்டிலிருந்து தப்பியோடினார் பதினைந்து வயது சிறுவன் பிரபாகரன். அப்போது முதல் தாய்மண்ணுக்கான போராட்டத்தில் தன்னை அர்ப்பணித்துவிட்ட பிரபாகரனால், இன்று தன்னுடைய தாயின் கடைசி முகத்தைக்கூடப் பார்க்க முடியவில்லை.

‘இனி பிரபாகரனை ‘துரை...’ என வாஞ்சையோடு கூப்பிட அவருடைய அன்னை இல்லை’ என்று கறுப்புக்கொடி கட்டி கலங்கிக் கொண்டிருக்கிறது வல்வெட்டித்துறை.

பத்து வருடங்கள் முன்பு வலது பாகம் முழுவதும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட பார்வதி அம்மா, இந்தியாவுக்கு வந்து திருச்சி அருகே உள்ள முசிறியில் தங்கி சிகிச்சை எடுத்துக் கொண்டார். அப்போது முசிறியிலிருந்து திருச்சி செல்வதாக இருந்தால்கூட கே.கே.நகர் டி.எஸ்.பி.யிடம் சொல்லிவிட்டுத்தான் செல்லவேண்டும் என்பது உட்பட பல கடும் கட்டுப்பாடுகளில்தான் சிகிச்சை எடுத்தார் பார்வதி. ஒருவேளை, சிகிச்சை பெறும் பார்வதி அம்மாவை பார்க்க அவருடைய மகன் பிரபாகரன் வரக்கூடும் என்று சந்தேகப்பட்டு மருத்துவமனை வாசலிலேயே எப்போதும் போலீஸை நிறுத்தியிருந்தது அன்றைய அரசு.

அதன்பின் இலங்கை சென்றுவிட்ட பார்வதி அம்மா... சில வருடங்களுக்கு முன் சிகிச்சைக்காக மலேசியா சென்றார். அங்கிருந்து கடந்த வருடம் ஜூலை மாதம் சிகிச்சைக்காக சென்னை வந்த பார்வதி அம்மாவை... தமிழ்நாட்டில் காலடிகள் படவிடாமல் அதே விமானத்திலேயே மீண்டும் மலேசியாவுக்கே திருப்பி அனுப்பியது இன்றைய தி.மு.க. அரசு.

அதன்பின், மலேசியாவில் இருந்து பார்வதி அம்மா எழுதுவதுபோல் தமிழக முதல்வருக்கு கடிதமும் வந்தது. அதில் சென்னையில் சிகிச்சை பெற கலைஞரிடம் பார்வதி அம்மையார் கெஞ்சுவதுபோல எழுதப்பட்டு, முடிவில் நன்றியுடன் உங்கள் உடன்பிறப்பு என எழுதி, பார்வதி அம்மாவின் கைரேகையும் வைக்கப்பட்டிருந்தது.

இந்தக் கடிதத்தை அடுத்து, ‘மருத்துவமனையை விட்டு வெளியே வரக்கூடாது. யாரிடமும் பேசக்கூடாது, எந்த அரசியல் நண்பர்களையும் பார்க்கக் கூடாது’ என்று கடும் நிபந்தனைகளுடன் பார்வதி அம்மையாருக்கு சிகிச்சை அளிக்க கலைஞர் முன்வந்தும்... இப்படியொரு ‘சிறை’ சிகிச்சை தேவையில்லை’ என்று கருதி மறுத்துவிட்டார் பார்வதி அம்மையார்.

இந்த கடிதம் பற்றி அன்றே சர்ச்சையைக் கிளப்பிய வைகோ, தி.நகர் முத்துரங்கன் சாலை பொதுக்-கூட்டத்தில்... ‘‘நினைவு இல்லாமல் படுத்திருக்கும் பார்வதி அம்மையாரின் கைரேகையைப் பெற்று இதுபோன்ற ஒரு கடிதத்தை அவருக்குத் தெரியாமலேயே இவர்களாகவே எழுதியுள்ளனர். நான் கேட்கிறேன் கருணாநிதி அவர்களே... உங்களின் உடன்பிறப்பு என சொல்லிக் கொள்வதற்கு பார்வதி அம்மா என்ன தியாகராய நகர் தி.மு.க.வின் வட்டச் செயலாளரா?’’ என்று கேட்டார் ‘‘பாகிஸ்தானிய சிறுவனுக்கு கூட இதய மாற்று சிகிச்சை கொடுக்கும் சென்னையில்... தமிழச்சியான பார்வதி அம்மையாருக்கு சிகிச்சை அளிக்க மறுத்துவிட்டீர்கள். என்ன காந்தி தேசம் அது?’’ என்று இப்போதும் கேட்கிறார்கள் கொழும்பில் உள்ள தமிழ் பத்திரிகையாளர்கள்.

பார்வதி அம்மையாரின் இறப்பு செய்தியை அறிவிக்கும்போது எந்த வகையிலும் பிரபாகரனின் பெயரை பயன்படுத்தக் கூடாது என்று... எழவு வீட்டுக்கே சென்று எச்சரித்துவிட்டு வந்திருக்கிறது சிங்கள ராணுவம். இதைவிடக் கொடுமையாக... இறந்தபிறகு வாரிசுகளால் செய்யப்படும் ஈமச் சடங்குகள் செய்யக்கூட பார்வதி அம்மையாரின் வாரிசுகளை இலங்கைக்கு அனுமதிக்க மறுத்து வருகிறதாம் சிங்கள அரசு. இதனால் கனடாவில் உள்ள பார்வதி அம்மையாரின் மகள்களும், டென்மார்க்கில் வசிக்கும் பிரபாகரனின் அண்ணன் மனோகரனும்கூட வல்வெட்டித்துறைக்கு வந்து அஞ்சலி செலுத்துவது கேள்விக்குறியாகியுள்ளது.

இதற்கிடையில், தமிழகத்திலிருந்து பார்வதி அம்மையாருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சென்ற விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனை... கொழும்பு விமான நிலையத்தில் வைத்தே திருப்பி அனுப்பியிருக்கிறது சிங்கள அரசு. மகன் தாய் நாட்டுக்காக போராடுகிற ஒரே காரணத்-துக்காக, அஞ்சலியில்கூட வன்மம் காட்டிய ராஜபக்ஷே... ஈழ தேசத்தின் தாய் இறந்த அன்றுதான் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை ரசித்துக் கொண்டிருந்தார்.

பிரபாகரன் என்னும் வீரன் தவழ்ந்து விளையாடிய அந்த மடி, வல்வெட்டித்துறை மயானத்தில் எரியூட்டப்பட்டிருக்கிறது. அந்த சாம்பலில் இருந்து மீண்டும் விடுதலைப்பூக்கள் மலராதா என்ற எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள் ஈழத் தமிழர்கள்!
நன்றி: தமிழக அரசியல்



பிரபஞ்சப் பிறப்பை விளக்கிய ஜார்ஜ் காமாவ் (George Gamow) 1904-1968

பிரபஞ்சப் பிறப்பை விளக்கிய ஜார்ஜ் காமாவ் (George Gamow) 1904-1968

சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா


"நமது பிரபஞ்சம் பெரும் பாய்ச்சலில் (Big Bounce) உதித்ததே தவிரப் பெரு வெடிப்பில் (Big Bang) தோன்றவில்லை ! அதாவது முதலில் குவாண்டம் ஈர்ப்பாற்றல் நிகழ்த்திய விந்தை விளைவுகளால் உள்வெடிப்பு தூண்டிப் புற வெடிப்பில் (An Implosion Triggering an Explosion) உண்டானது."

மார்டின் போஜோவால்டு, (Martin Bojowald, Asst Professor of Physics, Penn. State, USA) (Authour of Big Bounce Theory) (July 2007)

"எனது வெளியீட்டுத் தாள் ஓர் புதிய கணித மாடலை அறிமுகப்படுத்துகிறது. துகளியல் நிலையில் (Quantum State) "பெரும் பாய்ச்சல்" மூலம் (Big Bounce) பயணம் செய்யும் பண்பாடுகளின் புதிய விளக்கங்களை அதிலிருந்து பெற்றுக் கொள்ளலாம், அந்தக் கோட்பாடு ஆரம்ப காலத்துப் பெரு வெடிப்பில் உண்டானதாக ஏற்றுக் கொள்ளப்பட்ட நமது பிரபஞ்சத்தின் மரபுக் கருத்தை நீக்கி அமர்ந்து கொள்ளும். ஆயினும் அந்தப் பண்பாடுகள் சிலவற்றில் உறுதியில்லாமை எப்போதும் இருக்கும். காரணம் எனது கணிப்புகளில் பெரும் பாய்ச்சல் பயணம் நிகழும் போது எல்லை மீறிய துகளியல் விசைகள் (Extreme Quantum Forces) விளைவிக்கும் ஒருவித "அகிலவியல் மறதி" (Cosmic Forgetfulness) எழுகிறது !

மார்டின் போஜோவால்டு








அணுவியல், அகிலவியல், உயிரியல் பெளதிக விஞ்ஞானி

விண்வெளியை வில்லாய் வளைக்க முடியுமா ? பிரபஞ்சத்தின் முடிவுக்கும் ஒழுங்கீனக் கோட்பாடு எனப்படும் 'என்ட்ராப்பி நியதிக்கும் ' [Theory of Entropy] என்ன தொடர்பு ? அண்ட வெளியில் ஊடுறுவிச் செல்லும் ராக்கெட் ஏன் சுருங்குகிறது ? விண்மீன்கள் வெடிப்பதற்கு ஆதி அடிப்படையும், அவற்றுக்குக் காரணமும் யாவை என்று நாம் அறிந்து கொண்டவை என்ன ? சந்ததியின் மூலவிகள் [Genes] புரியும் விந்தைப் புதிர்களைப் பற்றி நவீன விஞ்ஞானம் கண்டு பிடித்தவை என்ன ? உலகத்தைப் பற்றி நாம் அறிந்ததை, 'இலக்கங்களின் விதிப் பிரச்சனைகள் ' [Problems in Laws of Numbers] எவ்விதத்தில்

பாதிக்கின்றன ? இத்தனை வினாக்களையும் தான் எழுதிய 'ஒன்று, இரண்டு, மூன்று...முடிவின்மை ' [One, Two, Three...Infinity] என்னும் நூலில் எழுப்பியவர், ரஷ்ய அமெரிக்க விஞ்ஞானி ஜார்ஜ் காமாவ் [George Gamow]! ரஷ்யாவிலே பிறந்து அமெரிக்கக் குடியினராகிய ஜார்ஜ் காமாவ் அணுக்கரு பெளதிகம் [Nuclear Physics], பிரபஞ்சவியல் [Cosmology] பெளதிகம், மூலக்கூறு உயிரியல் ரசாயனம் [Molecular Biochemistry] ஆகிய முப்பெரும் விஞ்ஞானத் துறைகளில் மேன்மை மிக்க மேதை!








பிரபஞ்சத்தின் முழுத் தோற்றத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் அதன் மூலமான நுண்ணிய பரமாணுக்களையும் [Microscopic], விரிந்து குமிழிபோல் உப்பும் அதன் பிரமாண்ட வடிவத்தையும் பற்றிய [Macroscopic] எல்லாக் கருத்துக்களைத் தனித்தனியாக அறிய வேண்டும்! பிரபஞ்சத்தின் முதல் தோற்றம் ஒரு மாபெரும் வெடிப்பில் [Big Bang Theory] உண்டானது என்பதற்கு முதன் முதல் நிரூபணத்தைக் காட்டியவர் ஜார்க் காமாவ்! அதாவது பல பில்லியன் ஆண்டு களுக்கு முன்பு ஓர் பேரளவு வெடிப்பு நிகழ்ச்சியில் [Colossal Explosion] பிரபஞ்சம் தோன்றி விரிவடைந்து வந்துள்ளது என்ற ஒரு கருத்தை ஆதரித்து, அதற்கு விளக்கம் அளித்து மெய்ப்பித்தவர்களில் முதல்வர், ஜார்ஜ் காமாவ்! பெரு வெடிப்புக்குப் பின்பு பிரபஞ்சம், பின்புல நுண்ணலைக் கதிர்வீச்சை [Background Microwave Radiation] உண்டாக்கி யிருக்க வேண்டும் என்று உறுதியாகக் கூறி, அதையும் நிரூபித்தும் காட்டினார்! அடுத்து அணுக்கருப் பெளதிகத்தின் [Nuclear Physics] ஆரம்ப கால அடிப்படை வளர்ச்சியில், காமாவ் மிகவும் ஈடுபட்டவர். அவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்ட உயிரியல் விஞ்ஞானத்தில் [Biology] ஆர்வம் கொண்டு, இனவிருத்தியில் டிஎன்ஏ [DNA] பற்றி ஆராய்ந்து, நவீன மூலவி நியதியில் [Modern Genetic Theory] ஓர் அடிப்படைத் தத்துவத்தை ஜார்ஜ் காமாவ் இயற்றி யுள்ளார். மேலும் புரோடான் சேர்க்கை [Protein Synthesis] விளக்கத்தில் ஒரு முக்கியமான பகுதியை ஆக்கியுள்ளார் காமாவ்.








ஜார்ஜ் காமாவ் புரிந்த அரும்பெரும் விஞ்ஞானச் சாதனைகள்

1936 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஜார்ஜ் காமாவின் மிக்க விஞ்ஞானச் சாதனைகள் பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றியும், விண்மீன்களின் பிறப்பு, வளர்ச்சியைப் பற்றியும் சார்ந்திருந்தன. 1938 இல் ஹெர்ட்ஸ்பிரங்-ரஸ்ஸல் [Hertzsprung-Russel (H-R Diagram)] வரைபடத்துக்கு ஒரு சிறந்த விளக்கத்தைக் கொடுத்தார். H-R வரைபடத்தில் விண்மீன்களின் ஒளித்திறம் [Brightness] நேரச்சிலும், அவற்றின் உஷ்ணம் மட்ட அச்சிலும் குறிக்கப் பட்டுப் பல விண்மீன்களின் நிலைப்பாடு காட்டப் பட்டுள்ளது. 1939 இல் விரியும் பிரபஞ்சத்தின் மாதிரிக் [Model of the Expanding Universe] கோட்பாட்டை ஆதரித்து அதை அபிவிருத்தி செய்தார். அத்துடன் நிபுளாக்களின் பிறப்பு [Origin of Nebulae], ராட்சதச் செம்மீன்கள் [Red Giant Stars] சக்தியை உற்பத்தி செய்யும் முறைகள் ஆகியவற்றை ஆராய்ந்தார். விண்மீன்கள் வெடிக்கும் போது, அவற்றிலிருந்து நியூட்ரினோ துகள்கள் [Neutrino Particles] வெளியேறுவதை 1940 இல் ஆய்வு செய்து, தான் ஆக்கிய பூதநோவாவின் நியூட்ரினோ நியதியை [Neutrino Theory of Supernova] வெளியீடு செய்தார்.









1948 இல் விஞ்ஞானி ரால்ஃப் ஆல்ஃபருடன் [Ralph Alpher] காமாவும் சேர்ந்து, யூகிப்பட்ட பெரு வெடிப்புக்கு [Postulated Big Bang] நிகழ்ச்சிக்கு முன்பு, பிரபஞ்சத்தின் நிலைமை என்ன என்று ஆராய்ந்ததில் எஞ்சிய நுண்ணலை வெப்பவீச்சு [Residual Microwave Radiation] இருப்பதைக் கண்டார்கள்! அவர்களது அவ்வரிய கண்டுபிடிப்பு மெய்யானது என்று 1965 இல் பிரின்ஸ்டன் பல்கலைக் கழக விஞ்ஞானிகள், தாமும் கண்டு உறுதிப்படுத்தினர்!

பிரபஞ்சத்தின் பிறப்புக் கோட்பாடுகளில் ஒன்றான 'பெரு வெடிப்பு நியதியை ' [Big Bang Theory] உறுதியாக நம்பி அதை விருத்தி செய்த முன்னோடிகளான, ரஷ்ய விஞ்ஞானி அலெக்ஸாண்டர் பிரைடுமான் [Alexander Friedmann], அமெரிக்க விஞ்ஞானி எட்வின் ஹப்பிள் [Edwin Hubble], பிரிட்டிஷ் விஞ்ஞானி பிரெட் ஹாயில் [Fred Hoyle] ஆகியோருள் முக்கியமானவர் ரஷ்ய விஞ்ஞானி, ஜார்ஜ் காமாவ்.









ரஷ்ய மேதை ஜார்ஜ் காமாவின் வாழ்க்கை வரலாறு

ரஷ்யாவில் ஜார்ஜ் காமாவ் ஒடிஸ்ஸா என்னும் நகரில் [Odessa now in Ukraine] 1904 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 4 ஆம் தேதி பிறந்தார். ஒடிஸ்ஸாப் பள்ளியில் படிக்கும் போது, 13 ஆம் வயதுப் பிறந்த நாள் பரிசாக அவரது தந்தையார் தந்த ஒரு தொலைநோக்கி, காமாவ் வானியல் விஞ்ஞானத்தில் ஈடுபட ஆர்வத்தை தூண்டியது! 1922 இல் லெனின்கிரார்டு பல்கலைக் கழகத்தில் [Now St. Petersburg] சேர்ந்து, புகழ் பெற்ற பேராசிரியர் அலெக்ஸாண்டர் பிரைடுமான் [Alexander Friedmann] அவரிடம் ஒளியியல் [Optics], பிரபஞ்சவியல் விஞ்ஞானம் [Cosmology] இரண்டையும் முதலில் பயின்றார். பேராசிரியர் பிரைடுமான், ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் படைத்த ஒப்பியல் நியதிச் [Theory of Relativity] சமன்பாடுகளின் பிரச்சனைகளைத் தவிர்க்க ஒரு கட்டுத் தீர்வு முறைகளை [A Set of Solutions] ஆக்கியவர்! அகிலவெளி விரிந்து கொண்டுதான் போகிறது என்ற கருத்தைக் காமாவுக்கு முதலில் ஊட்டியவர், பிரைடுமான்! ஆனால் அப்போது காமாவ் பிரைடுமான் கூறிய அகிலவெளித் தத்துவத்தைத் தொடராது, கதிர்த்துகள் நியதி [Quantum Theory] மீது வேட்கை மிகுந்து தன் திறமையை விருத்தி செய்ய முயன்றார். 1928 இல் Ph.D. பட்டம் பெற்றபின், ஜெர்மனிக்குச் சென்று காட்டிங்கன் பல்கலைக் கழகத்தில் [University of Gottingen] சேர்ந்து, பேராசிரியர் வெர்னர் ஹைஸன்பர்க் [Werner Heisenberg (1901-1976)] விஞ்ஞான மேதையிடம் ஆராய்ச்சி செய்தார். அதே சமயத்தில் அங்கு பயில வந்த ஹங்கேரியின் விஞ்ஞானி எட்வெர்டு டெல்லருன் [Edward Teller] பழகி இருவரும் கூட்டாக அணுக்கரு பெளதிகத்தில் [Nuclear Physics] பல விஞ்ஞான ஆராய்ச்சிகள் செய்தனர்.







காமாவின் அரிய திறமையை வியந்து, அணுவியல் துறை மேதை நீல்ஸ் போஹ்ர் [Neils Bohr (1871-1962)] அவரைக் கோபன்ஹேகன் கோட்பாடு பெளதிக ஆய்வுக்கூடத்தில் [Copenhegan, Institute of Theoretical Physics] ஆராய்ச்சி செய்ய டென்மார்க் வரும்படி அழைத்தார். அப்போதுதான் ஜார்ஜ் காமாவ் முதன் முதல் அணுக்கரு அமைப்பைத் 'திரவச் சொட்டு மாதிரி ' [Liquid Drop Model] போன்றது என்று எடுத்துக் காட்டினார்! அம்முறையே பின்னால் அணுப்பிளவு [Nuclear Fission], அணுப்பிணைவு [Nuclear Fusion] இயக்க நியதிகளுக்கு அடிப்படை யாக அமைந்தது! அடுத்து ஹெளடர்மன்ஸ் [F. Houtermans], அட்கின்ஸன் [R. Atkinson] ஆகியோருடன் கூட்டுழைத்து, விண்மீன்களின் உள்ளே நிகழும் அணுக்கரு இயக்கங்கள் பற்றி ஆய்வுகள் செய்தார். அதன்பின் 1929 இல் இங்கிலாந்து சென்று, கேம்பிரிட்ஜ் காவென்டிஷ் ஆய்வுக் கூடத்தில் அணுவியல் மேதை ஏர்னஸ்ட் ரூதர்ஃபோர்டுடன் [Ernest Rutherford (1871-1937)] ஆராய்ச்சிகள் செய்தார். அப்பணியில் விரைவாக்கிய புரோட்டான் கணைகளைப் [Accelerated Protons] பயன்படுத்தி அணுவைப் பிளக்க எவ்வளவு சக்தி தேவைப்படும் என்று கணித்தார். அப்போதுதான் முதன் முதலாக காமாவ் மூலகங்களின் செயற்கை ரசவாத முறைகளுக்கு [Artificial Transmutation of Elements] அடிப்படைக் கோட்பாடுகளை அமைத்தார். 1932 இல் அவற்றைப் பின்னால் ஜான் காக்கிராஃப்ட் [John Cockcroft (1897-1967)] தனது நேரடி விரைவாக்கியில் [Linear Accelerator], போரான், லிதியம் [Boron & Lithium] ஆகிய இரண்டையும் புரோட்டான் கணைகளால் தாக்கி ஹீலியத்தை வெற்றிகரமாய் உண்டாக்கினார்! அதுவே முதன் முதல் செய்யப் பட்ட மூலக மாற்றம் அல்லது ரசவாதம் [Artificial Transmutation].









அமெரிக்கா நோக்கி ஜார்ஜ் காமாவ் புறப்பாடு

1931 இல் சோவியத் யூனியன் ரோமில் நடந்த அணுக்கரு பெளதிகக் கூட்டரங்குக்குச் [Nuclear Physics Conference] செல்ல அனுமதி தராமல், ஜார்ஜ் காமாவைத் தடை செய்து அவரை அடைத்துப் போட்டது! மறுபடியும் 1933 இல் பிரஸ்ஸல்ஸ் [Brussels] பெல்ஜியத்தில் நடந்த கூட்டரங்குக்கு அனுமதி கிடைக்கவே, அதைப் பயன்படுத்தி ஜார்ஜ் காமாவ் விடுதலைப் பறவையாய், அமெரிக்காவுக்குப் புலம் பெயர்ந்து 1940 இல் அமெரிக்கக் குடியினரானார்!

அமெரிக்காவில் ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக் கழகத்தில் [Washington D.C.] காமாவ் ஆசிரியராகப் பணி ஏற்றார். அங்கே ஆசிரியராக இருந்த விஞ்ஞான மேதை எட்வெர்டு டெல்லரை மறுபடியும் சந்தித்தார்! அவருடன் கூட்டாளியாகச் சேர்ந்து, காமாவ் அணுக்கரு பெளதிகத்தில் தொடர்ந்து ஆய்வுகள் செய்தார்! 1936 இல் கன உலோகங்கள் கதிரியக்கத் தேய்வின் போது [Radiactive Decay of Heavier Elements] பீட்டா பரமாணுக்கள் [Beta Particles] வெளியேறும் முறைகளைச் சீராக வகுத்து இருவரும் புதியக் கோட்பாடுகளை எழுதினார்கள். அவற்றில் ஒன்றான காமா-டெல்லர் பீட்டா தேய்வு நியதி [Gamow-Teller Theory of Beta Decay] கதிரியக்க விளைவின் போது, எலக்டிரான் எழுச்சியைப் பற்றிக் கூறுகிறது. அடுத்து விண்மீன்களின் தோற்ற ஆரம்பத்தில் எழும் வெப்ப அணுக்கரு இயக்கங்களைப் [Thermo Nuclear Reactions] பற்றி இருவரும் ஆராய்ச்சிகள் செய்தனர்.









1942 இல் அந்த ஆய்வுகளைப் பயன்படுத்திப், பிரபஞ்சவியல் நிகழ்ச்சிகளுக்கும், அணுக்கரு இயக்கங்களுக்கும் இடையே உள்ள தொடர்புகளை ஆராய்ந்தார். அதே ஆண்டில் காமாவ் டெல்லருடன் கூட்டுழைத்து 'ராட்சதச் செம்மீன்களின் ' [Red Giant Stars] உள்ளமைப்பை விளக்கி ஒரு புதிய கோட்பாடை இயற்றினார். விண்மீன்களின் மூலப் பிறப்பைப் [Stellar Evolution] பற்றி டெல்லர் எழுதிய கருத்துக்களைப் பயன்படுத்தி, ஜார்ஜ் காமாவ் பரிதியின் பிரமாண்டமான சக்தி [Sun 's Energy] வெப்ப அணுக்கரு இயக்கங்களினால் [Thermo Nuclear Processes] வெளியாகிறது என்று உறுதியாகக் கூறினார்!

இரண்டாம் உலகப் போர் முடிந்த பிறகு, 1948 இல் அமெரிக்க அணுசக்திப் பேரவை [Atomic Energy Commission] ரஷ்ய அமெரிக்க விஞ்ஞானி ஜார்ஜ் காமாவுக்கு உச்சப் பாதுகாப்பு நம்பிக்கை உறுதி [Top Security Clearance] அளித்து, நியூ மெக்ஸிகோ லாஸ் அலமாஸ் மறைமுகத் தளத்தில் முதல் ஹைடிரஜன் குண்டு தயாரிக்க நியமனம் செய்யப் பட்டார்! 1949 ஆகஸ்டில் சோவியத் ரஷ்யா தனது முதல் புளுடோனிய அணுகுண்டை வெடித்ததும், எட்வெர்டு டெல்லர் அந்த நிகழ்ச்சியைப் பயன்படுத்தி அவரது ஒரே குறி ஆயுதமான வெப்ப அணுக்கருக் குண்டை அதி விரைவில் தயாரித்து,






அமெரிக்காவைப் பாதுகாக்க வேண்டு மென்று வாதித்தார்! ஊமைப் போர் ஊழலில் [Cold War Politics], ரஷ்யா அமெரிக்காவுக்கு முன்பே ராட்சத குண்டை ஆக்கி விட்டால், அமெரிக்காவின் கதி என்ன ஆவது என்று டெல்லர் கவலை அடைந்தார்! அவரது எச்சரிக்கைக்கு அடி பணிந்து, அமெரிக்க ஜனாதிபதி ட்ரூமன் 1950 ஜனவரி இறுதியில் ஹைடிரஜன் குண்டு திட்டத்திற்கு ஒப்புதல் தந்து அங்கீகார மளித்தார்! லாஸ் அலமாஸ் மறைமுகத் தளத்திற்கு மாற்றாக, புதிய லாரென்ஸ் லிவர்மோர் ஆய்வுக் கூடம் [Lawrence Livermore Laboratory] கலிஃபோர்னியாவில் அமைக்கப் பட்டது. அதற்கு எட்வெர்டு டெல்லர் அதிபதியாக ஆக்கப் பட்டார்! டெல்லருக்கு வெப்ப அணுக்கரு ஆய்தப் பணியில் உதவியவர் முக்கியமாக இருவர்: விஞ்ஞான மேதைகள், டாக்டர் ரிச்சர்டு கர்வின் [Richard Garwin], டாக்டர் ஸ்டனிசியா உலாம் [Stanisiaw Ulam].

காமாவ் வாஷிங்டன் பல்கலைக் கழகத்தில் 1934 முதல் 1956 வரை பெளதிகப் பேராசிரியராகவும், அதன் பின் கொலராடோ பல்கலைக் கழகத்தில் 1956 முதல் அவரது மரணம் வரை [1968] பெளதிகப் பேராசிரியராகவும் பணி யாற்றினார்.








பிரபஞ்சப் பிறப்பைக் கூறும் பெரு வெடிப்பு நியதி

பிரபஞ்சத்தின் பிறப்பைப் பற்றி யூகிக்கும் பல கோட்பாடுகளில் ஒன்றான, 'பெரு வெடிப்பு நியதியைத் ' தற்போது பெரும்பான்மையான விஞ்ஞானிகள் ஒப்புக் கொண்டுள்ளனர். அக்கருத்துப்படி ஆதியில் பிரபஞ்சம் பேரளவுத் திணிவுள்ள, மிகத் திட்பமான, வெட்பக் கட்டியாக [Extremely Dense, Compact & Hot] இருந்தது! 10-20 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, ஏதோ ஓர் அகிலப் பெரு வெடிப்பு நிகழ்ந்து [Cosmic Explosion], அதன்பின் பிரபஞ்சம் பெருகி, விரிந்து, குளிர்ந்து போய் வருகிறது!

பெரு வெடிப்புக் கோட்பாடு 1917 இல் ஐன்ஸ்டைன் பொது ஒப்பியல் நியதி விளைவித்த ஒரு கருத்து! அதை விருத்தி செய்தவர், பெல்ஜிய விஞ்ஞானி ஜார்ஜ் லெமைட்டர் [George Lemaitre], ஹாலந்து விஞ்ஞானி வில்லம் சித்தர் [Willem de Sitter], ரஷ்ய விஞ்ஞானி அலெக்ஸாண்டர் பிரைடுமான் [Alexander Friedmann]. அம்மூவரது கருத்துக்களும் பிரபஞ்சம் தோற்றத்திற்குப் பின்பு, எவ்வாறு ஒழுங்கானது என்றுதான் கூறினவே தவிர, அகிலத்தின் ஆதித் துவக்கத்தைப் பற்றி எதுவும் ஆராயவில்லை! 1940 இல் ஜார்ஜ காமாவ் அப்பணியைச் செய்ய தனது மாணவர் ரால்ஃப் ஆல்ஃபர் [Ralph Alpher], ராபர்ட் ஹெர்மன் [Robert Herman] இருவருடன் கூட்டுழைத்து, ஐன்ஸ்டைன் பொது ஒப்பியல் நியதிக்காக எழுதிய பிரைடுமான் தீர்வுகளை எடுத்துக் கொண்டு, அவற்றைப் பின்னும் அபிவிருத்தி செய்தார்.







அடுத்து ஆல்ஃபர், ஹெர்மன் இருவரும் தனியாகக் காமாவின் கருத்துகளை விரிவு செய்தனர். அதன்படி கதிர்வீச்சுக் கடலில் [Sea of Radiation] கொந்தளிக்கும் புரோட்டான், நியூட்ரான், எலக்ட்ரான் [Proton, Neutron, Electron] ஆகிய பரமாணுக்களைக் [Subatomic Particles] கொண்ட இலெம் [Ylem] என்னும் ஆதி அண்ட நிலையிலிருந்து [Primordial State of Matter] பிரபஞ்சம் விரிந்தது! பிரபஞ்சம் பெரு வெடிப்பின் போது மிக மிகச் சூடான நிலையில் இருந்து, பரமாணுக்கள் இணைந்து ஹைடிரஜன் மூலகத்தை விட கனமான மூலகங்கள் [Heavier Elements] முதலில் உண்டாயின! காமாவ், ஆல்ஃபர், ஹெர்மன் குழுவினர் பெரு வெடிப்பில் விளைந்த வெப்பவீச்சுக் கடல் [Sea of Radiation] இன்னும் அகிலத்தில் தங்கி இருக்க வேண்டும் என்று முன்னறிவித்தார்கள்! அவர்கள் கணக்கிட்ட அகிலப் பின்புலக் வெப்பவீச்சுக்கு [Cosmic Background Radiation] இணையான உஷ்ணம் [3 டிகிரி K (கெல்வின்)], 1960 இல் பின்வந்த விஞ்ஞானிகளால் மெய்ப்பிக்கப் பட்டு, பிரபஞ்சத்தின் பெரு வெடிப்பு நியதி மேலும் உறுதியாக்கப் பட்டுள்ளது!










பெரு வெடிப்பு நியதியின்படி, பிரபஞ்சம் முதற் சில இம்மி வினாடிகளில் [microseconds] அதி விரைவாக விரிந்து விட்டது! ஒரே ஓர் உச்சவிசை [Force] மட்டும் முதலில் இருந்து, பிரபஞ்சம் விரிந்து போய்க் குளிர்ந்ததும் அந்த ஒற்றை விசையே, பின்னால் நாமறிந்த ஈர்ப்பியல் விசை [Gravitational Fprce], மின் காந்த விசை [Electromagnetic Force], அணுக்கரு வலுத்த விசை [Strong Nuclear Force], அணுக்கரு நலிந்த விசை [Weak Nuclear Force] ஆகிய நான்கு பிரிவுகளாய் மாறியது! விஞ்ஞானிகள் ஒளித்துகள் யந்திரவியலையும் [Quantum Mechanics], ஈர்ப்பியலையும் ஒருங்கே பிணைக்கும் ஒரு நியதியைத் தேடி வருகிறார்கள்! இதுவரை யாரும் அதைக் கண்டு பிடிக்க முடிய வில்லை! புதிதான 'தொடர் நியதி ' [String Theory] அவ்விரண்டையும் பிணைக்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். ஈர்ப்பியல் விசையை மற்ற மூன்று வித விசைகளுடன் பிணைத்துக் கொள்ளத் 'தொடர் நியதி ' முயல்கிறது! ஆனால் பெளதிக விஞ்ஞானிகள் இப்போது இந்த நான்கு வித விசைகளையும் ஒருங்கே பிணைத்து விளக்கும் 'மகா ஐக்கிய நியதி ' [Grand Unified Theory, GUT] ஒன்றைத் துருவிக் கண்டு பிடிக்க முற்பட்டு வருகிறார்கள்!









சோப்புக் குமிழிபோல் உப்பிடும் [Inflationary Model] பிரபஞ்சம், அந்நிலை முடிந்ததும் மெதுவாகவே விரிகிறது! கோளமாய் விரியும் பிரபஞ்சத்தின் விளிம்பு திறந்த வெளிக்கும், மூடிய வெளிக்கும் இடையே அமைகிறது! பிரபஞ்சம் திறந்த வெளியாக இருந்தால், எப்போதும் அது விரிந்து, விரிந்து, விரிந்து போய்க் கொண்டே யிருக்கும்! மூடிய விளிம்பாகப் பிரபஞ்சம் இருந்தால், அதன் விரிவு நிலை ஒரு காலத்தில் நின்று விடும்! பிறகு அது சுருங்க ஆரம்பித்து, திணிவு அடர்த்தி மிகுந்து, இறுதியில் வெடித்துச் சிதறிவிடும்! பிரபஞ்சம் மூடிய கோளமா அல்லது திறந்த வெளியா என்பது அதன் திணிவு [Density], அன்றி பளு அடர்த்தியைச் [Concentration of Mass] சார்ந்தது! பிரபஞ்சம் அடர்த்தி மிகுந்த பளுவைக் கொண்டிருந்தால், அதனை மூடிய கோளம் என்று கூறலாம்!

பிரபஞ்சத்தின் பெரு வெடிப்பு நிகழ்ச்சிக்கு முன்பு எந்த நிலை இருந்தது என்று, ஸ்டாஃபன் ஹாக்கிங் [Stephen Hawking] போன்ற விஞ்ஞான மேதைகள் கேள்வி எழுப்பி யிருக்கிறார்கள்! பெரு வெடிப்பு நியதியில் பிரபஞ்சத்தின் முற்கால நிலை பற்றி எந்த விளக்கமும் இல்லை! காலக் கடிகாரமே பெரு வெடிப்பிற்கு பின்பு ஓட ஆரம்பித்திருக்கலாம்! ஆகவே பெரு வெடிப்புக்கு முன்பு என்ன இருந்திருக்கும் என்று மூளையைக் குழப்புவதில் அர்த்த மில்லை!










பெரு வெடிப்பு நியதியை மெய்ப்படுத்தும் நிகழ்ச்சிகள்

பிரபஞ்சம் பெரு வெடிப்பிற்குப் பிறகு விரிந்து கொண்டே குளிர்ந்து போகிறது. பெரு வெடிப்பிற்கு ஓரு வினாடி கழித்துப் புரோட்டான்கள் உண்டாயின. முதல் மூன்று நிமிடங்களில் புரோட்டான், நியூட்ரான்களும் பிணைந்து, ஹைடிரஜனுடைய ஏகமூலமான [Isotope] டியூடிரியம் [Deuterium], அடுத்து எளிய மூலகங்களான ஹீலியம், லிதியம், பெரிலியம், போரான் [Helium, Lithium, Beryllium, Boron] ஆகியவை உண்டாயின! விண்வெளியில் மித மிஞ்சிய அளவு ஹீலியம் இருப்பது, பெரு வெடிப்பு நியதியை மெய்ப்படுத்தி உறுதிப் படுத்துகிறது. டியூடிரியம் பிரபஞ்சத்தில் பேரளவில் பரவி யிருப்பது, அகிலத்தின் அண்டத் திணிவைக் [Density of Matter] கணிக்க அனுகூலமாய் இருக்கிறது!

பெரு வெடிப்பு ஏற்பட்டு ஒரு மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு, பிரபஞ்சத்தின் உஷ்ணம் 3000 டிகிரி C அளவுக்குக் குறைந்தது! அப்போது புரோட்டான்களும் எலக்டிரான்களும் சேர்ந்து ஹைடிரஜன் அணுக்கள் உண்டாயின. ஹைடிரஜன் அணுக்கள் ஒளியின் குறிப்பிட்ட சில அலை நீளங்கள், நிறங்கள் ஆகியவற்றை எழுப்பவோ அன்றி விழுங்கவோ செய்யும்! அவ்வாறு உண்டான அணுக்கள், தனித்த எலக்டிரான்ளுக்கு இடையூறு செய்யும், ஒளியின் மற்ற அலை நீளங்களை வெகு தூரத்திற்கு அப்பால் தள்ளி விடுகின்றன.








இந்த மாறுதல் வெப்பவீச்சை விடுவித்து இன்று நாம் காணும்படிச் செய்கிறது! பல பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு குளிர்ந்த அந்த 'அகிலவியல் பின்புல வெப்பவீச்சு ' [Cosmic Background Radiation] சுமார் 3 டிகிரி Kelvin [3 K (-273 C/-454 F)]. 1964 இல் முதன் முதல் அகிலவியல் பின்புல வெப்பவீச்சைத் தேடிக் கண்டு பிடித்த அமெரிக்க வானியல் மேதைகள் இருவர்: ஆர்னோ பென்ஸையாஸ், ராபர்ட் வில்ஸன் [Arno Penzias & Robert Wilson].

1989-1993 ஆண்டுகளில் தேசிய வானியல் விண்வெளி ஆணையகம், நாசா [NASA, National Aeronautics & Space Administration] 'அகிலப் பின்புல உளவி ' [Cosmic Background Explorer, COBE] என்னும் விண்வெளிச் சிமிழை [Spacecraft] ஏவி, அண்ட வெளியில் அகிலப் பின்புல வெப்பவீச்சைத் தளப்பதிவு [Mapping] செய்தது. அந்த தளப்பதிவு 'பெரு வெடிப்பு நியதி ' முன்னறிவித்தபடி மிகத் துள்ளியமாக பின்புல வெப்பவீச்சு அடர்த்தியை [Intensity of the Background Radiation] உறுதிப் படுத்தியது! அத்துடன் அகிலவியல் பின்புல வெப்பவீச்சு சீராக நிலவாது [Not Uniform], சிறிது மாறுபட்டுக் காணப் பட்டது! அந்த மாறுதல்கள் பிரபஞ்சத்தில் காலக்ஸிகள் [Galaxies], மற்ற அமைப்பாடுகளின் வளர்ச்சிக்கு அடிப்படையாய்க் கருதப் படுகின்றன!









பின்புல வெப்பவீச்சு பிரபஞ்சப் பெரு வெடிப்பிற்குப் பிறகு எஞ்சிய நீண்ட கால விளைவு! ஜெர்மன் விஞ்ஞானி மாக்ஸ் பிளான்க் [Max Planck (1858-1947)] கருங்கோளக் கதிர்வீச்சை [Black Body Radiation] ஆராய்ந்து எழுதிய, 'பிளான்க் கதிர்வீச்சுக் கணிப்பாடு [Planck 's Radiation Formula] மூலம் உட்சிவப்பு, நுண்ணலை, வானலை [Infrared, Microwave, Radio Waves] ஆகியவற்றின் அலை நீளங்களைத் தனியே கணக்கிட்டு விடலாம்! அவற்றின் கூட்டமைப்பே பின்புலக் கதிர்வீச்சுகளின் அடர்த்தியாகக் [Intensity of Background Radiation] காணப் படுகிறது. 'ஓர் குறித்த உஷ்ண நிலையில் கதிர்வீச்சு அடர்த்திக்கும், அதன் அலை நீளத்திற்கும் உள்ள ஓர் ஒப்பான உறவை ' மாக்ஸ் பிளான்க் வளைகோடு முன்னறிவிக்கிறது. பெரு வெடிப்பின் பின் தங்கிய பின்புலக் கதிர்வீச்சு 3 டிகிரி K [-270 C/- 450 F] உஷ்ண நிலையில், மாக்ஸ் பிளான்க் முன்னறிவித்த வளைகோட்டை வியக்கத் தக்கவாறு ஒத்துள்ளது! ஏறக்குறைய பின்புலக் கதிர்வீச்சு பிரபஞ்சத்தில் எத்திசையிலும் 'சம வெப்பநிலை ' [Isotropic State] கொண்டுள்ளதாக அறியப் படுகிறது.







ஜார்ஜ் காமாவ் எழுதிய நூல்கள், பெற்ற மதிப்புகள்

கடினமான ஐன்ஸ்டைனின் ஒப்பியல் நியதி [Relativity Theory], சிக்கலான அகிலவியல் கோட்பாடு [Cosmology] ஆகியவற்றை எளிய முறையில் பொது நபர்கள் புரிந்து சுவைக்கும் வண்ணம் காமாவ் எழுதிய விஞ்ஞான நூல்கள்: விந்தைபுரியில் திரு. டாம்கின்ஸ் [Mr. Tomkins in Worderland (1936)], பிறகு பல்லடுக்குப் பதிவுகளில் திரு. டாம்கின்ஸ் [Multi Volumes Mr. Tomkins (1939-1967)], பரிதியின் பிறப்பும், இறப்பும் [The Birth & Death of the Sun (1940)], ஒன்று, இரண்டு, மூன்று...முடிவின்மை [One, Two, Three ...Infinity (1947)], பிரபஞ்சத்தின் படைப்பு [The Creation of the Universe (1952,1961)], பூமி என்னும் ஓர் அண்டம் [A Planet Called Earth (1963)], பரிதி என்னும் ஓர் விண்மீன் [A Star Called the Sun (1964)].

1950 இல் காமாவ் டென்மார்க் ராஜிய விஞ்ஞானக் கழகம் [Royal Danish Academy of Siences (1950)], அடுத்து அமெரிக்க தேசீய விஞ்ஞானக் கழகம் [U.S. National Academy of Sciences (1953)] ஆகியவற்றின் உறுப்பினர் ஆனார். விஞ்ஞான அறிவை எளிய முறையில் பரப்பி ஒப்பிலாப் பெயர் பெற்ற ஜார்ஜ் காமாவுக்கு, 1956 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் கல்வி, விஞ்ஞானக், கலாச்சாரப் பேரவை [UNESCO, United Nations Educational, Scientific & Cultural Organization] காலிங்கப் பரிசை [Kalinga Prize] அளித்துக் கெளரவித்தது. 1965 இல் காமாவ் பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் சர்ச்சில் கல்லூரியின் சிறப்புநர் [Fellow Churchil College, Cambridge] மதிப்பைப் பெற்றார்!








பிரபஞ்ச விஞ்ஞானத்திலும், அணுக்கரு பெளதிகத்திலும் திறமை பெற்ற ரஷ்ய அமெரிக்க விஞ்ஞானி ஜார்ஜ் காமாவ் 1968 ஆகஸ்டு 20 ஆம் தேதி போல்டர் கொலராடோவில் தனது 64 ஆவது வயதில் காலமானார்.


++++++++++++++

Images : NASA, Wikipedea

Information :

1. Wikipedea - Geoge Gamow (February 13, 2011)
2. George Gamow - Answers.com
நன்றி: திண்ணை 

Friday, February 25, 2011

இஞ்சி இடுப்பழகியாக ஆசையா?


Pongal Special: Health benefits of Ginger - Food Habits and Nutrition Guide in Tamil இஞ்சி என்பது மதில் எனப் புரிகிறது. நம் உடம்பையும் அனைத்து வகை பிணியில் இருந்து அரணாக கோட்டை மதில் போல் இருந்து காப்பதால் இதற்கு இஞ்சி என பெயர் வந்தது. சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமும் இல்லை, சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை என்பது ஒரு பழைய பழமொழி! இஞ்சி காய்ந்தால் சுக்கு ஆகும். இது பல மருத்துவப்பயன்களைக் கொண்டிருக்கிறது. இதன் பயன்களைப் பற்றி கீழே காண்போம்.
சுக்கு, மிளகு, திப்பிலி என்பது திரிகடுகம் எனும் கூட்டு மருந்தாகும். அதே போல் திரிகடுகம் எனும் நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும். சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை செய்வது போல் இந்நூலில் ஒவ்வொரு பாட்டிலும் உள்ள மூன்று கருத்துக்கள் வாழ்விற்கு நன்மை செய்யும் ஆதலால் இந்நூல் இவ்வாறு அழைக்கப்படுகிறது.
இது மஞ்சள் போலவே இருக்கும் ஒரு விவசாய பயிராகும். வேரில் மஞ்சள் போலவே இருக்கும். பொங்கலின் போது இஞ்சி கொத்தும், மஞ்சள் கொத்தையுமே புது பொங்கல் பானையில் கட்டுவார்கள். இது பல நோய்களுக்கு அருமருந்தாக உள்ளது. ஜலதோஷம் நோய்க்காரணியான வைரஸைத் தாக்கி அழிக்கிறது; தலைவலியைப் போக்குகிறது.
இரத்த ஓட்டம் சீராக இருக்க உதவுகிறது; கொழுப்புச்சத்தைக் குறைக்கிறது; மத்திய நரம்பு மண்டலத்தைத் தூண்டி இருதய, சுவாசத் தசைகள் சீராக இயங்க உதவுகிறது. மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுக்கிறது. செரித்தலைச் சீராக்கி வயிற்றுவலி ஏற்படுவதைத் தடுக்கிறது. மகளிரின் கருப்பைவலிக்கும், மாதவிலக்கு நேரங்களில் அடிவயிற்றில் உண்டாகும் வலிகளுக்கும் நன்மருந்தாக உள்ளது.
தோலில் உண்டாகும் உலர்சருமம், காயங்கள், சிரங்குகள் போன்றவற்றிக்கும் இது நல்ல மருந்தாகும். இஞ்சியானது பசியைத் தூண்டுவதுடன், தேவையற்ற கழிவுகளை வெளிக்கொணர பேருதவி புரிகிறது. உடலின் ஜீரண உறுப்புகள், சிறுகுடல், பெருங்குடல் உள்ளிட்டவை இஞ்சி சாறு மூலம் சுத்தப்படுத்தப்படுகிறது. பெரும்பாலான நோய்களுக்கு காரணமாக இருக்கும் மலச்சிக்கலை அறவே அகற்றி உடலுக்கு புத்துணர்ச்சியை தருகிறது.
பொதுவாக அசைவ உணவு வகைகளை சமைக்கும்போது, வெள்ளைப்பூண்டும், இஞ்சியும் அதிக அளவில் சேர்த்து சமைப்பார்கள். இஞ்சியின் மருத்துவக் குணங்களில் முக்கியமான ஒன்று உடலின் செரித்தலை துரிதப்படுத்துதல் ஆகும். இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும். இஞ்சியை நன்றாக சுட்டு, அதை நசுக்கி உடம்பில் தேய்க்க பித்த, கப நோய்கள் தீரும்.

இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும். ஆக மூன்று தோஷத்தையும் நீக்கும் ஆற்றல் இஞ்சிக்கு உண்டு. காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்.
இஞ்சி சாறோடு, தேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு வெந்நீர் குடித்துவர தொப்பை எனும் பெருவயிறு கரைந்து விடும். இஞ்சி சாறில், தேன் கலந்து தினசரி காலை ஒரு கரண்டி சாப்பிட்டு வர நோய் எதிர்ப்பு சக்தி கூடும். உற்சாகம் ஏற்படும். இளமை பெருகும். இஞ்சி சாறுடன், வெங்காய சாறு கலந்து ஒரு வாரம், காலையில் ஒரு கரண்டி வீதம் குடித்துவர நீரிழிவு குறையும்.
இதய நோயாளிகளுக்காக இந்திய மருத்துவக் கழகம் சமீபத்தில் ஒரு ஆய்வுச் செய்தியை வெளியிட்டுள்ளது.
ஒவ்வொருநாளும் உணவில் ஐந்து கிராம் இஞ்சியைச் சேர்த்துக் கொள்வது, இதய நோயாளிகளுக்கு மாரடைப்பை வராமல் காக்கும் என்கிறது அந்தச் செய்தி. பொதுவாக நாம் அரிசியையே பிரதான உணவாகத் தினமும் உண்டு வருகிறோம். இப்படிப் பல ஆண்டு காலம் அரிசியை தினசரி உணவாகக் கொள்பவர்களுக்கு, 'பைப்ரினோலிடிக்' செயற்பாடு குன்றி, ரத்தக் குழாய் அடைப்பைக் கரைக்கும் நடவடிக்கையில் சுணக்கம் ஏற்படுவதாகவும், இதனை இஞ்சி சரி செய்வதாகவும் இந்த ஆய்வுச் செய்தி தெரிவிக்கிறது.
இஞ்சியானது இதய ரத்தக்குழாய்கள் எதிலும் அடைப்பு உண்டாகாமல் தடுத்தும், மேலும் உண்டாவதைக் கரைத்தும் உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
இஞ்சியையும், சுக்கையும் உபயோகிக்கும் போது, அதன் தோலை நீக்குவது மிக முக்கியமானது. இல்லை எனில் மாறாக வயற்றுக் கடுப்பு முதலியவை ஏற்படும்.
இஞ்சியை சுத்தம் செய்யும்போது அதன் மேல் தோலை நன்றாக நீக்க வேண்டும் அதன் மேல் தோல் நஞ்சாகும். அதே போல் சுக்கை சுத்தம் செய்யும்போது அதன் மேல் சுண்ணாம்பை தடவி காயவைத்து, பின் அதை நெருப்பில் சுட்டு பின் அதன் தோலை நன்கு சீவி எடுக்கவேண்டும். இது மிக முக்கியமானது; சுத்தம் செய்யாமல் உபயோகிக்க வேண்டாம்.
இஞ்சியை சுத்தம் செய்து மேல்தோலை நீக்கிவிட்டு சிறு துண்டுகளாக நறுக்கி 150 கிராம் எடுத்து, அத்துடன் சுத்தமான தேனையும் அதே அளவிற்கு சேர்த்து நான்கு நாள் கழித்து தினமும் ஒன்றிரண்டு துண்டுகளாக ஒரு மண்டலத்திற்கு சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் அடைந்து, பித்தம் முழுவதுமாக நீக்கப்பட்டு விடும். ஆயுள் அதிகரிப்பதுடன் முகப்பொலிவும், அழகும் கூடும். வேம்பு காயகல்பம் போன்று இதுவும் ஒரு காயகல்ப முறையே.
மலபார் இஞ்சி முறபா பெயர் பெற்றது. இஞ்சியைப் பக்குவம் செய்து சர்க்கரைப் பாகுடன் பதப்படுத்தித் தயாரிப்பது. இது நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். இதனால் வயிற்று உப்புசம், புளியேப்பம், வாந்தி, குடல் கோளாறு, கப நோயால் மார்பில் சளி சேர்ந்து இரைப்பு நோய் தொல்லை வரும்போது மிக்க பயன் தரும். இஞ்சி முறபா தின்பதற்கும் ருசியாக இருக்கும்.
அது என்ன இஞ்சி இடுப்பழகி என ஒரு குரல் கேட்கிறது. தினம் ஒரு துண்டு இஞ்சியை அரைத்து ஒரு டம்ளர் மோரில் கரைத்துக் குடித்தால் இடுப்புப் பகுதியில் கொழுப்பு சேராமல் பார்த்துக்கொள்ளும். சேர்த்த கொழுப்பையும் கரைக்கும். அதன்பிறகு எந்த வயதிலும் நீங்கள் இடுப்பழகியாகவே இருக்கலாம்.
எந்த பானம் குடித்தாலும், அதில் ஒரு கரண்டி இஞ்சி சாறை கலந்து குடியுங்கள். 40 வயதுக்கு பின் மூச்சை பிடித்துக்கொண்டு அவஸ்தைப்பட வேண்டாம்.

நந்தலாலாவின் மூலக்கதை

கிகுஜிரோ - சிறுவர் சினிமா

Kikujiro

Kikujiro - Tamil Katturaikal - General Articles ஜப்பானியத் திரைப்பட இயக்குநர் தகேஷி கிடானோவினது படங்கள் எனில் நிழல் உலக தாதாக்களையும், அவர்களுக்கிடையிலான வன்முறைப் போக்குகளையும் பற்றியதாகவே இருக்கும் என்பதே உலக சினிமாப் பார்வையாளர்களின் ஒருமித்த கணிப்பு. அது உண்மையும்கூட. நிழல் உலக வாழ்வோட்டம் குறித்த யதார்த்தபூர்வமான திரைப்படங்களை உருவாக்க வல்லவர் கிடானோ. அவரது படங்களில் வன்முறைக் காட்சிகள் பெரும்பான்மையிடங்களில் தோன்றும் எனினும், பார்வையாளரது மனோநிலையில் அந்த வன்முறை மீதான இச்சையுணர்வினை தூண்டும்படி காட்சிப்புனைவுகளை பிரயோகித்து விடாமல், வெறுமனே வேடிக்கைப் பார்ப்பதுபோன்ற தொனியிலே காட்சிகளை வடிவமைக்கப்பட்டிருக்கும். திரைக்குள் நிகழும் வன்முறையுலகினை நாம் திரைக்கு வெளியிலிருந்து வெறுமனே கவனிக்கலாம். அவ்வளவே. மாறாக, தமிழ் சினிமா நம்மீது அள்ளித் தெளிப்பது போல வன்முறையின் மீதான இச்சையை நமது உள்ளம் கையிலெடுத்துக் கொள்ள கிடானோ அனுமதிப்பதில்லை. இது திரைப்பரப்பில் செய்தற்கரிய அணுகுமுறையாகும்.
தான் இயக்கும் அனைத்துப் படங்களிலும் கிடானோவே முதன்மைக் கதாபாத்திரமாக நடிக்கக்கூடியவர். அவரது அமைதியான தோற்றமும் பயத்தை உண்டுபண்ணும் பாவனைகளும் தனித்துவமான நடிப்புத்திறனை அவருக்கு வழங்கினதோடல்லாமல், படத்தில் சுவாரசியமான கதையோட்டத்திற்கு உறுதுணையாகவும் இருக்கவல்லது. அத்தகைய படைப்பாளருக்கு மென்மையான அனுபவம் சார்ந்த இன்னொரு படைப்புமுகமும் உண்டு என்பதை 1999 இல் வெளியான அவரது "கிகுஜிரோ" (kikujiro) எனும் திரைப்படம் நிரூபித்தது. கிகுஜிரோ ஒரு சிறுவர் திரைப்படம். தனது மற்றைய படங்களின் கதாபாத்திர குணத்தை ஒருசிறிது மாற்றம் செய்யாமல் கிடானோ இந்த படத்திலும் சிறுவனுக்கிணையான மையப் பாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார்.
மசெவ் எனும் சிறுவனின் பள்ளி முடிந்து கோடைவிடுமுறை தொடங்கும் சமயம் பள்ளியிலிருந்து திரும்பும் மசெவ்விடம் அவனது நண்பன் யூஜி, "உனது விடுமுறைக் காலத் திட்டம் என்ன? என்று கேட்கிறான். பதிலாக, மசெவ் "உனது திட்டம்?" என்று வினவ, "தனது தந்தையின் கடற்கரையோரமிருக்கும் சொந்தஊருக்குச் சென்று விடுமுறைக்காலத்தைக் கழிக்கப்போவதாக" மசெவ்விடம் கூறுகிறான் யூஜி. மசெவ் "நீ அதிர்ஷ்டசாலி" என்று தனது ஏக்கம் நிறைந்த மழலைக் குரலில் பதிலளித்தபடியே நடக்கிறான்.
சிறுவன் மசெவ்விற்கு தந்தை இல்லை. தாய் இருப்பது வெகு தொலைவிலுள்ள டோயோஹசி எனும் நகரில். பிறப்பிலிருந்தே தனது பாட்டியுடன் டோக்கியோ நகரில் வசிக்கிறான் மசெவ். அவனது பாட்டி டோக்கியோ நகரிலிருக்கும் இனிப்புக்கடையொன்றில் பணிபுரிவதால், மசெவ்விற்கான உணவை மேஜையில் வைத்துவிட்டுச் சென்றிருக்க, வீடு திரும்பும் மசெவ் அவ்வுணவை எடுத்து உண்ணுகிறான். இந்தக் காட்சியில் பெற்றோரது பாசமும் பரிவும் சூழாதுபோன மசெவ்வின் விதிக்கப்பட்ட வெறுமையிலான மனோகதியும் அநாதைவயப்பட்ட நாள்கடப்புக்களும் அடர்கிறது. மறுநாள் பொழுதுபோகாமல் யூஜியைத் தேடிச் செல்கிறான். யூஜி வீட்டிலிருப்பதில்லை. மற்றொரு நண்பனைக் காணச்செல்ல, அவனும் தனது குடும்பத்தாரோடு விடுமுறைக்காலப் பயணத்தின் துரிதத்திலிருக்கிறான். மனதில் துயரம் கவிய இல்லம் திரும்புகிறான் மசெவ். இந்த சமயத்தில், அவனது பாட்டிக்கு தபாலாக ஒரு பெட்டி வருகிறது. அந்தப் பெட்டியை வாங்கும்பொருட்டு, பாட்டியினது முத்திரைப் பொறியினை (Stamp) தேடுகிறான். அப்போது அவனது கண்களில் அவனது தாயினது புகைப்படம் அகப்படுகிறது. புகைப்படத்தை எடுத்து ஆவலாகப் பார்க்க, உடனடியாக விடுமுறைக்காலத் திட்டம் அவனுள் தயாராகிறது. தனது தாயைக் காண டோயோஹசி நகருக்குச் செல்வது என்பதே அந்தத் திட்டம். தடுத்துவிடுவாள் என்று மேலிடுகிற அச்சத்தின் காரணமாக பாட்டியிடம் சொல்லிக் கொள்ளாமலேயே மசெவ் புறப்பட்டுச் செல்கிறான்.
சிறிது தூரத்திலேயே சிறுவர் குழாம் ஒன்றால் மசெவ்வினது கையிலுள்ள பணம் பறிக்கப்பட, மசெவ்வினது பாட்டிக்குத் தெரிந்த பெண்ணொருத்தி தனது கணவனுடன் அங்குவந்து மசெவ்வினது பணத்தை மீட்டுத் தருகிறாள். பின்பு கணவனிடம் 50,000 யென்களைக் கொடுத்து டோயோஹசி சென்று மசெவ்வை அவனது தாயிடம் சேர்த்துவிடுமாறு துணைக்கு அனுப்புகிறாள். அவளது கணவனதும் மசெவ்வினதும் பயணம் தொடங்குகிறது.
இருவருக்குமான பயணத்தில் நேரும் இடர்பாடுகள் படம்நெடுக உடன்வருகிறது. இவையனைத்தும் மிகவும் சுவாரசியமான ஈர்ப்பில் படம்பிடிக்கப்பட்டுள்ளன. பொதுவாக, லத்தீன் அமெரிக்கத் திரைப்படங்களில்தான் நமது உள்ளத்தை கொள்ளைகொள்ளும் யௌவனம் மிக்க இயற்கைப் பிரதேசங்களையும் பயணத்தின்போதான நெடுஞ்சாலைகளையும் காணமுடியும். கிகுஜிரோ திரைப்படமும் அவற்றிற்கிணையான காட்சி அழகியலை நமது கண்களின் முன் வழிபரப்பிச் செல்கிறது. ஒளிப்பதிவாளர் கட்சுமி யநாகிஷிமா படத்தின் கதையோட்டத்திலிருந்து சிறிதும் விலகிவிடாமல், அதேசமயத்தில் தனது ஒளிப்பதிவின் அழகியல்பிலிருந்தும் விலகிவிடாமல் தனது சமன்பட்ட திறத்தினை படத்திற்கு வழங்கியிருப்பது இப்படத்தின் கூடுதல் சிறப்பாகும். கிடானோ எனும் வன்முறையைக் கதைக்களனாக்கும் படைப்பாளரிடம் இவ்வளவு மென்மையான கதைக்களனும் உண்டா என வியக்கும் அளவிற்கு "கிகுஜிரோ" திரைப்படத்தின் கதையோட்டம் பார்வையாளர்களாகிய நம்மை தனது காட்சிவலைகளுக்குள் தழுவும்விதமாக உள்ளிழுத்துக்கொள்கிறது.
பலவிதமான சிரங்களைக் கடந்து மசெவ்வினது தாய் வசிக்கும் டோயோஹசி நகரை இருவரும் சென்றடைந்துவிடுகிறார்கள். மசெவ் தயக்கத்துடன் வீட்டிற்குச் சற்று தூரத்தில் நிற்க, உடன்வந்த நபர் குறிப்பிட்ட விலாசத்தின் வீட்டைநோக்கிச் செல்கிறார். வீட்டின் முன்பலகையில் "யோஷிமுரா குடும்பம்" என எழுதப்பட்டிருக்க, அவருக்கு குழப்பம் உருவாகிறது. அந்தச் சமயத்தில் வீட்டின் கதவு திறந்து பெண்ணொருத்தி வெளியே நடந்துவருகிறாள். நடந்துவரும் தனது தாயை மசெவ் தூரத்திலிருந்தபடியே காண்கிறான். உள்ளழுத்தமும் மிக்க அமைதிகுணம் நிரம்பின அவனுள் உணர்ச்சி வெள்ளம் சன்னமாக அலைபுரள்கிறது. அவனது தாயைத் தொடர்ந்து ஒரு சிறுமியும், ஒரு ஆணும் வர, மசெவ்வின் தாய் இன்னொரு மண வாழ்வை மேற் கொண்டுவிட்டிருப்பதை அவனோடு நாமும் உள்ளுணர்கிறோம். துக்கம் மனம்கவிழ, திரும்பி ஏமாற்றத்துடன் நடக்கிறான் மசெவ். அவனுடன் வந்த நபருக்கும் தெரியும், அவள் மசெவ்வின் தாய்தான் என்பது. ஆனால் அவள் இப்போது மசெவ்வின் தாயாக மாத்திரம் இல்லை, மற்றொரு குடும்பத்தைச் சேர்ந்தவளும்கூட என்பது அதிர்ச்சியாகப் புரிபட, மசெவ்வை சமாதானம் செய்யும் பொருட்டு, விலாசம் சரிதான், ஆனால், வெளியே வந்தது அவனது தாயில்லை, வேறொரு பெண் என பொய்கூறி சமாளிக்கப் பார்க்கிறார். மசெவ் பதிலேதும் அளிக்காமல் மௌனமாக நடக்கிறான்.
இத்துடன் படம் முடிந்துவிடும் என்று நாம் எண்ணும்படி காட்சியமைப்புகள் நகர்ந்துசென்றாலும், இதற்கடுத்து தொடரும் படத்தின் கதைக்களம் படத்தின் மேன்மையை மேலும் வலிமைப்படுத்துகிறது என்பதை குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். ஏனெனில், வெறுமனே ஏமாற்றத்துடன் மசெவ்வுடன் டோக்கியோ திரும்ப உடன் வந்தவர் அனுமதியாமல், மசெவ்வினது கோடை விடுமுறைக்காலம் அவனது தாயிடம் கிட்டும் உற்சாகத்திற்கு இணையாக கழிய வேண்டும் என்றெண்ணி வழியில் சந்திக்கும் சில நபர்களோடு இணைந்து கடற்கரையோரமிருக்கும் ஒரு ஓய்விடத்தில் தங்கி மசெவ்வின் பொழுதுகளை உற்சாகப்படுத்துகிறார். மசெவ்வின் விடுமுறைக்காலம் புதிய சூழலில் புதிய மனிதர்களோடு கொண்டாட்டத்துடன் கடந்துசெல்கிறது.
இந்தச் சூழலில், இன்னொரு கிளைக்கதையும் படத்தில் வருகிறது. ஓய்வெடுக்கும் அந்தப் பிரதேசத்திற்கு சற்றுத் தொலைவிலிருக்கும் ஒரு மனநல விடுதிக்கு மசெவ்வின் உடன்வரும் நபர் செல்கிறார். அங்கு யாருடனும் பேசவிரும்பாத ஒரு வயோதிகப் பெண்மணியை தூரத்திலிருந்து பார்த்துவிட்டு மீண்டும் ஓய்வெடுக்கும் பிரதேசத்திற்குத் திரும்புகிறார். அந்தப் பெண்மணி அவரது தாய் என்பதை நாம் எளிதில் உணர்ந்துவிடுகிறோம். வாழ்வின் துர்கணம் அந்தப் பெண்மணியை அந்த மனநல விடுதியில் சேர்த்திருக்கக்கூடும். தாய் மீதான ஏக்கத்தில் மசெவ்விற்கு இணையானவர்தான் அவனது உடன்வந்த நபரும் என்பது நமக்கு இந்தக் காட்சியில் புலனாகிறது. ஒரு புள்ளியில் ஒருசேர துயரமும் ஏக்கமும் கவிய இணையும் கதாபாத்திரங்களாகவும் இருவரும் தென்படுகின்றனர். மசெவ்வின் முதிய கதாபாத்திரமாகக்கூட உடன்வரும் நபரை நாம் அவதானிக்கலாம்.
இருவரும் மீண்டும் டோக்கியோ திரும்புகிறார்கள். தற்செயலாக பிணைப்புக் கொண்டவர்கள் இப்போது வலுவாகப் பிரியவேண்டிய தருணம். அந்தத் தருணத்தில், மசெவ் மகவின் ஏக்கத்துடன் உடன்வந்தவரைப் பார்ப்பான். அதேபோல அவரும் தந்தைமையுணர்வுடன் மசெவ்வைப் பார்ப்பார். நமது உள்ளத்தில் பனிமூட்டத்தை உருவாக்கும் காட்சியிது. பிரிந்துசெல்லுமுன், மசெவ் ஆவலாக, "உங்களது பெயர் என்ன?" என்று முதன்முதலாக அவரது பெயரைக் கேட்பான். அவர் திரும்பிப் பார்த்துக் கூறுவார், "கிகுஜிரோ".
கிகுஜிரோ எனும் தந்தைமைமிக்க நபரிடமிருந்து விடைபெற்று, மசெவ் தனது பாட்டியின் இருப்பிடத்திற்கு ஓடத்துவங்குகிறான். அவன் ஓடிக்கடக்கும் பாலத்தினடியில் ஒரு படகொன்று நதியின் திசையினூடே நகர்ந்து செல்கிறது. அது மனிதர்கள்மீது விதிக்கப்பட்ட வாழ்வினோட்டமாகவும் குறியீடு செய்யும் பேரர்த்தத்துடன் விரிவடைந்து படம் முடிகிறது. பாசமும் அரவணைப்பும் உறவாய் நேரிட்ட சுற்றத்திடம் மட்டுமல்ல, மனிதராய்ப் பிறந்த எவரொருவரிடமிருந்தும் மடை திறந்த வெள்ளமாக பெருகிவழிய வல்லதாகும் என்பதும் அந்தப் பேரர்த்தத்தில் பொதிந்தலையும் ஓர் அன்புச்சொல்லாகப் பரிணமிக்கிறது.
நான் பார்வையிட்டவரை, ஜப்பானிய சினிமாவின் ஜென் இயக்குநர் என வர்ணிக்கப்படும் கோஹேய் ஒகூரியின் "சேற்று நதி" (Muddy River) திரைப்படத்திற்குப் பின்பு பார்வையாளர்களது மதிமயங்கச்செய்யும் சிறுவர் திரைப்படமாக முன்வைக்கத் தகுமானது "கிகுஜிரோ" திரைப்படம்தான். "சேற்று நதி" அளித்த அதே ஏக்கத்திலான மனவுணர்வினை வேறொரு தொனியில் "கிகுஜிரோ"வும் அளித்துவிடுகிறது. இவ்விடத்தில், சிறுவரின் வாழ்வுலகை குழந்தைமையுணர்வுடன் பிரதிசெய்த ஜப்பானியத் திரைமேதை யசுஜிரோ ஒசுவையும் குறிப்பிடவேண்டும். அவரது படங்களில் சிறுவர் வந்துசெல்லும் காட்சிகள் நமது மன ஆழத்தில் ரசிக்கும்படி யதார்த்தத்துடன் அணுகப்பட்டவை. இயக்குநர் தகேஷி கிடானோவிடம் ஒசுவின் திரைத்தன்மை உண்டு என்பதற்கு கிகுஜிரோ ஒரு வெளிப்படையான சாட்சி.
அதேபோல், மௌனப்பட்ட நடிப்பின் வழியாக சகல உணர்வுகளையும் வெளிப்படுத்தும் திறன்பெற்ற நடிகர் தகேஷி கிடானோ இந்தப் படத்திற்குத் தனது கதாபாத்திரத்தின் வழி அளித்திருக்கும் நகைச்சுவைக்களம் மிகவும் புதியது. ஒருவிதத்தில், விளிம்புநிலை மனிதர்களையும், சமூகம் நிராகரித்த மனிதர்களையும் திரையில் உலவவிடும் ஃபின்லாந்து திரைப்பட இயக்குநர் அக்கி கௌரிஷ்மேக்கியினது திரைப்பாணியிலமைந்த நகைச்சுவைக் காட்சிகளுக்கு இணையானது எனவும் கூறலாம். தகேஷி கிடானோ எனும் தனித்துவம் மிக்க படைப்பாளர் திரையுலகிற்கு வழங்கின படைப்புக் கொடைகளில் "கிகுஜிரோ" திரைப்படம் அனைத்துக்குமான மேன்மைப்பட்ட ஒன்றாகத் திகழும் என்பதை அந்தத் திரைப்படத்தைக் காணநேரும் எவரொருவரும் இதயத்தின் உயிர்த் துடிப்பாக எளிதில் கண்டுணரலாம்.
நன்றி: புதிய பார்வை

தமிழியக்கம் - வரிப்புலியே, தமிழ் காக்க எழுந்திரு! பாரதிதாசன்

ஒண்டமிழ்த்தாய் சிலம்படியின்
முன்னேற்றம் ஒவ்வொன்றும்
உன்முன் னேற்றம்!

கண்டறிவாய்! எழுந்திரு நீ!
இளந்தமிழா, கண்விழிப்பாய்!
இறந்தொ ழிந்த

பண்டைநலம் புதுப்புலமை
பழம்பெருமை அனைத்தையும் நீ
படைப்பாய்! இந்நாள்

தொண்டுசெய்வாய்! தமிழுக்குத்
துறைதோறும் துறைதோறும்
துடித்தெ ழுந்தே!

உயர்தமிழ்த்தாய் இந்நிலத்தில்
அடைகின்ற வெற்றியெலாம்
உன்றன் வெற்றி!

அயராதே! எழுந்திருநீ!
இளந்தமிழா, அறஞ்செய்வாய்!
நாம டைந்த

துயரத்தைப் பழி தன்னை
வாழ்வினிலோர் தாழ்மையினைத்
துடைப்பாய் இந்நாள்

செயல்செய்வாய் தமிழுக்குத்
துறைதோறும் துறைதோறும்
சிறி வந்தே.

வாழியநீ! தமிழ்த்தாய்க்கும்
வரும் பெருமை உன் பெருமை!
வயிற்றுக் கூற்றக்

கூழின்றி வாடுகின்றார்;
எழுந்திருநீ! இளந்தமிழா
குறைத விர்க்க

ஆழிநிகர் படைசேர்ப்பாய்!
பொருள்சேர்ப்பாய்! இன்பத்தை
ஆக்கு விப்பாய்!

ஊழியஞ்செய் தமிழக்குத்
துறைதோறும் துறைதோறும்
உணர்ச்சி கொண்டே,

உணர்ந்திடுக தமிழ்த்தாய்க்கு
வருந்தீமை உனக்குவரும்
தீமை அன்றோ!
பிணிநீக்க எழுந்திருநீ
இளந்தமிழா, வரிப்புலியே,
பிற்றை நாளுக்

கணிசெய்யும் இலக்கியம் செய்!
அறத்தைச் செய்! விடுதலைகொள்
அழகு நாட்டில்!

பணிசெய்வாய்! தமிழுக்குத்
துறைதோறும் துறைதோறும்
பழநாட்டானே,

எதுசெய்ய நாட்டுக்கே
எனத்துடித்த சிங்கமே!
இன்றே, இன்னே,
புதுநாளை உண்டாக்கித்
தமிழ்காப்பாய் புத்துணர்வைக்
கொணர்வாய் இங்கே
அதிர்ந்தெழுக! தமிழுக்குத்
துறைதோறும் துறைதோறும்
அழகு காப்பாய்!
இதுதான் நீ செய்தக்க
எப்பணிக்கும் முதற்பணியாம்
எழுக நன்றே.

நீயா தமிழனின் பிள்ளை? காசி ஆனந்தன்

டு சொரணை கொஞ்சமும் இல்லை
சொல்லடா நீயா தமிழனின் பிள்ளை?

தோட்டத்தில் தன்னை அழித்தவன் வீட்டுக்கே
தோரணம் ஆனது வாழை! - நீயும்
நாட்டினில் உன்னை அழித்தவன் காலையே
நக்கினாய் நீ ஒரு கோழை!

கூப்பிட்டுப் பதவி கொடுத்த பகைவனை
கும்பிட்டு வாய்பொத்தி நின்றாய்! - அவன்
சாப்பிட்டு மிஞ்சி எறிந்ததை அன்றோ நீ
சாக்கடை நாய்போலத் தின்றாய்!

தீயவர் தலையை திருக மறந்தாய் உன்
தேசத்தைப் பாரடா! நெருப்பு! - அட
ஆயிரம் பெருமை படைத்த உன் அன்னை மண்
அழியநீ அல்லவா பொறுப்பு?

என்றென்றும் உன்தாய் நிலத்தில் தமிழ்வானில்
இன்னொருவன் கொடி பறக்கும்! - அட
நன்றடா நன்று! இருந்துபார் உன் மண்ணில்
நாளை அவன் பிள்ளை பிறக்கும்!

இருப்பாய் தமிழா நெருப்பாய்!- காசி ஆனந்தன் கவிதை

இருப்பாய் தமிழா நெருப்பாய்!
இருந்தது போதும் இதுவரை செருப்பாய்!
இருப்பாய் தமிழா நெருப்பாய்!

குட்டக் குட்ட நீ குனிந்தால் உலகத்தில்
குட்டிக் கொண்டேதானிருப்பான் - முரசு
கொட்டி எழடா உன் பகைவன் பிடரியில்
குதிகால் பட ஓடிப் பறப்பான்!

கைவிலங்கு நீ சுமந்தாய் இதற்கோடா
கருவில் உன்னைத் தாய் சுமந்தாள்? - இனப்போர்
செய்யக் களம்வாடா கொடுமை தூள்படும்
சிறுத்தை உன் கண்கள் சிவந்தால்!

வெல்லமோடா உயிர் உனக்கு? புவிகாண
வீறுகொண்டு போர் இடடா! - தமிழர்
உள்ளம் மகிழ நீ களத்தில் நடடா
உயிரையும் தூக்கிக் கொடடா!

வஞ்சினம் முழக்கி எழடா! மானத்தின்
வல்லமை உன் பகை உடைக்கும்! - அட
நெஞ்சில் தமிழ்வீரம் பொங்க நில்லடா!
நிமிர்ந்த வரலாறு கிடைக்கும்!

அழியப் போகும் மொழிகளின் பட்டியலில் தமிழ்?!

Tamil tops the series of languages digged-in? - Tamil Literature Ilakkiyam Papers சமீபத்தில் அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் "மரியா ஸ்மித் ஜோனெஸ்" என்ற பெண்மணி இறந்து விட்டார். ஒன்பது பிள்ளைகளுக்கு தாயான இவர் இறக்கும் போது இவருடைய வயது 89. இவருடைய இறப்பு பலருக்கு துயரத்தை கொடுத்துள்ளது. அவருடைய இழப்பை யாராலுமே ஈடு செய்ய முடியாது என்று சொல்கிறார்கள். பழங்குடி இனத்தை சேர்ந்த மரியா ஸ்மித் அலாஸ்காவில் வாழும் பழங்குடி மக்களின் உரிமைக்காக பல போராட்டங்களை மேற்கொண்டவர். ஆனால் அவருடைய இறப்பு யாராலும் ஈடு செய்ய முடியாததாக பார்க்கப்படுவதற்கு காரணம் அது இல்லை. உண்மையான காரணம், மரியா ஸ்மித் போகும் போது ஒரு மொழியையும் தன்னுடனே சேர்த்துக் கொண்டு போய் விட்டார். ஆம், அலாஸ்காவின் பழங்குடி மக்களின் மொழிகளில் ஒன்றான "ஏயக்" என்கின்ற மொழியை பேசத் தெரிந்த உலகின் கடைசி மனிதராக அவர் மட்டும்தான் இருந்தார். அவர் இறந்ததன் பிறகு இன்றைக்கு உலகில் யாருக்குமே அந்த மொழியை பேசத் தெரியாது.
அவர் இறந்த தினத்தோடு உலகில் உள்ள பல மொழிகளில் ஒரு மொழி அழிந்து விட்டது. மரியா ஸ்மித்திற்கு ஒன்பது பிள்ளைகள் இருந்தும், யாருமே "ஏயக்" மொழியை கற்பதற்கு ஆர்வம் காட்டவில்லை. எல்லோரைப் போன்று அவர்களும் ஆங்கிலம் கற்பதும், பேசுவதும்தான் நாகரீகமானதும், தேவையானதும் என்ற கருத்தோடு இருந்து விட்டார்கள். "ஏயக்" மொழியைப் பேசும் கடைசி மனிதராக தான்தான் இருக்கப் போகின்றேன் என்ற விடயம் மரியா ஸ்மித்திற்கு அன்றைக்கு தெரிந்திருந்ததா என்பதும் தெரியவில்லை.
"ஏயக்" மொழி பேசத் தெரிந்த மரியா ஸ்மித்தின் ஒரு சகோதரி 1993இலேயே இறந்து விட்டார். அதன் பிறகு மரியா ஸ்மித்தோடு "ஏயக்" மொழியில் உரையாடுவதற்கு யாருமே இருக்கவில்லை. "ஏயக்" மொழி அழிந்து விடக் கூடாது என்பதற்கு மரியா ஸ்மித் சில நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஒரு மொழியியல் வல்லுனரின் உதவியோடு "ஏயக்" மொழிக்கான அகராதியையும், இலக்கண நூலையும் தயாரித்தார். இனிமேல் யாராவது இந்த நூல்களின் உதவியோடு ஏயக் மொழியை கற்றுப் பேசினால் மட்டும்தான், அந்த மொழி மீண்டும் உயிர் பெறும்.
ஏயக் மொழிக்கு மட்டும்தான் இந்த நிலைமை என்று இல்லை. உலகின் பெரும்பாலான மொழிகளின் நிலைமை இதுதான். இரண்டு வாரத்திற்கு ஒரு முறை உலகின் ஏதோ ஒரு மூலையில் ஒரு மொழி அழிவதாக மொழியியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றார்கள். மரியா ஸ்மித் வாழ்ந்த அலாஸ்காவில் பேசப்படுகின்ற மொழிகளில் மேலும் 20 மொழிகள் விரைவில் அழிந்து விடும் நிலையில் இருக்கின்றன. உலகம் எங்கும் மொழிகள் அழிந்து வரும் வேகம் அதிகரிக்கின்றதே தவிர குறையவில்லை. ஒரு மொழி அழிகின்ற பொழுது ஒரு இனத்தின் பண்பாடு அழிகிறது. இன்னும் சொல்வது என்றால் ஒரு இனமே அழிகிறது. அழிகின்ற மொழிகளில் பெரும்பாலானவை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மிகப் பழமையான மொழிகள். அந்த மொழிகளுக்குள் மனித குலத்தின் வரலாற்றின் பெரும் பகுதி புதைந்து கிடக்கின்றது. மொழிகளோடு மனித குலத்தின் வரலாற்று உண்மைகளும் அழிந்து போகின்றன. இன்றைக்கு உலகிலே வாழுகின்ற அறுநூறு கோடி மக்களும் மொத்தம் ஆறாயிரம் மொழிகளைப் பேசுகின்றார்கள். நூறு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆறாயிரம் மொழிகளிலே அறுநூறு மொழிகள் மட்டுமே மிஞ்சியிருக்கும். மிச்சம் ஐந்தாயிரத்து ஐந்நூறு மொழிகளும் அழிந்து விடும். இது மொழியியல் வல்லுனர்களின் தீவிரமான ஒரு எச்சரிக்கை. இன்றைக்கு பேசப்படுகின்ற ஆறாயிரம் மொழிகளில் மூவாயிரம் மொழிகளை ஆயிரத்திற்கும் குறைவானவர்களே பேசுகின்றார்கள். ஏறக்குறைய ஆயிரத்து ஐந்நூறு மொழிகளை நூறு பேர் வரையிலானவர்களே பேசுகிறார்கள். ஐந்நூறு மொழிகளை வெறும் பத்துப் பேர்தான் பேசுகிறார்கள்.
ஒரு மொழி நிலைத்து நிற்பதற்கு ஆகக் குறைந்தது ஒரு இலட்சம் பேராவது அந்த மொழியை பேச வேண்டும் என்பது மொழியியல் வல்லுனர்களின் கருத்து. அந்த வகையில் தமிழ் மொழி தற்போதைக்கு அழியாது என்று நம்பலாம். உலகில் மிக அதிகமானவர்களால் பேசப்படுகின்ற இருபது மொழிகளின் பட்டியலில் தமிழும் இருக்கின்றது. கல்வெட்டில் இருந்து கணினி வரை தமிழ் மொழி பரந்து நிற்கின்றது. ஆனால் ஒரு மொழி அழிவதற்கு தேவையான அனைத்துக் காரணங்களையும் தமிழ் மொழியும் கொண்டுதான் இருக்கின்றது என்பது இதிலே ஒரு அபாயகரமான செய்தி. ஒரு மொழி அழிவதற்கான முக்கிய காரணங்களாக சில விடயங்கள் சுட்டிக் காட்டப்படுகின்றன. மொழிக்குள் மற்றைய மொழிகளின் ஊடுருவலும் ஆதிக்கமும், வட்டாரப் பேச்சு வழக்குகள் தனி மொழிகளாக கிளர்வது, இளந்தலைமுறை மொழியை கற்கவும் பேசவும் ஆர்வம் அற்று இருப்பது போன்றவை ஒரு மொழி அழிவதற்கு முக்கிய காரணங்கள். வேற்று மொழிகளின் ஊடுருவல் தமிழுக்குள் மித மிஞ்சிப் போய் கிடக்கின்றது
எத்தனையோ சொற்களை, அவைகள் தமிழ் சொற்களா இல்லையா என்பதை அறிவதே மிகக் கடினமாக இருக்கின்றது. அதே போன்று பல துறைகளில் ஆங்கிலம் போன்ற மொழிகளின் ஆதிக்கம் இருக்கின்றது. வட்டாரப் பேச்சு வழக்கு மொழிகளாக இருந்தவை தனி மொழிகளாக பிரிந்து போனதையும் தமிழ் மொழி சந்தித்திருக்கின்றது. இன்றைக்கு தமிழ் கொண்டிருக்கும் நூற்றுக் கணக்கான வட்டார மொழிகள் நாளை தனி மொழிகளாக மாறி விடாது என்று உறுதியாக நம்புவதற்கு போதுமான காரணங்கள் இல்லை. "பொதுவான தமிழ்" இன்றைக்கு எழுத்தில் மட்டும்தான் இருக்கின்றது. ஆனால் "வட்டார மொழி இலக்கியங்கள்" என்ற பெயரில் வருகின்ற அதிகரித்த படைப்புக்கள் இதற்கும் முடிவு கட்டி விடுமோ என்ற அச்சத்தைக் கொடுக்கின்றது. தமிழ் நாட்டின் சென்னை போன்ற பெரு நகரங்களிலும், புலம் பெயர்ந்த நாடுகளிலும் வாழும் இளந்தலைமுறை தமிழை எவ்வளவு தூரம் பேசுவதற்கும், கற்பதற்கும் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.
இன்றைக்கும் தமிழ் மொழி உயிரோடு இருப்பதன் ஒரே ஒரு காரணம், தமிழை பேசுபவர்கள் ஆறு கோடிக்கும் மேற்பட்டவர்களாக இருப்பதுதான். ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை ஒன்றில் முப்பது ஆண்டுகளில் அழியப் போகின்ற மொழிகளில் ஒன்றாக தமிழும் இருப்பதாக செய்தி ஒன்று சில ஆண்டுகளுக்கு முன்பு ஊடகங்களில் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் முப்பது ஆண்டுகளில் எல்லாம் தமிழ் அழிந்து விடாது. முப்பது ஆண்டுகள் என்பது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று. அதே வேளை நீண்ட காலத்திற்கு நாம் இப்படி இறுமாப்போடு இருக்க முடியாது. பேசுபவர்களின் எண்ணிக்கையில் மட்டும் ஒரு மொழியின் இருப்பு தங்கியிருக்க முடியாது. எண்ணிக்கையும் மாறுபடக் கூடிய ஒன்றுதான். மொழி அழிவதற்கு தேவையான மற்றைய காரணிகளும் தமிழில் இருக்கின்றன. ஆகவே தமிழ் மொழி நீடித்து நிலைக்க வேண்டும் என்ற சிந்தனை ஒவ்வொரு தமிழரின் நெஞ்சிலும் இருந்தால் மட்டும்தான், தமிழ் மொழி நீண்ட காலத்திற்கும் நிலைக்கும். இல்லையென்றால் "அழிந்து போன மொழிகளின் பட்டியலில்" தமிழ் இடம் பெறுவது தவிர்க்க முடியாததாகி விடும். மரியா ஸ்மித் ஜோனஸின் உடலோடு "ஏயக்" மொழியும் புதைக்கப்பட்டுவிட்ட இந்த நாளில் தமிழர்களைப் பார்த்து சொல்லக் கூடிய செய்தி இதுதான்.
தமிழரோடு தமிழில் பேசுவோம்...
தமிழன் என்று சொல்வோம்....
தலை நிமிர்ந்து நிற்போம்.....
"தமிழன் இல்லாத நாடில்லை
தமிழனுக்கென்று ஒரு நாடில்லை..."

Thursday, February 24, 2011

லஞ்சம் – ஊழல்… இந்தியாவை அரிக்கும் புற்றுநோய் ! – டாக்டர் கலாம்


by-dr-apj-abdul-kalamதுபாய்: இந்தியா சந்தித்து வரும் மிகப்பெரும் சவால்களில் ஊழலும் ஒன்று. அது புற்று நோயைப் போல தேசத்தை அரித்து வருகிறது, என முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தெரிவித்தார்.
துபாயில் ஒரு நிகழ்ச்சிக்காக வந்துள்ள அப்துல்கலாம், அங்குள்ள பத்திரிகை ஒன்றிற்கு அளித்த பேட்டியில் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும் அவர் கூறுகையில், “அரசியல்-அதிராக வர்க்கம்-நீதி அமைப்பில் ஊழல் பரவி வருகிறது. அதன் வளர்ச்சி வேதனை அளிக்கிறது. இந்த இக்கட்டான நேரத்தில் இந்தியா அதற்கு ‘கீமோதெரபி’ அளிப்பது மிக அவசியம். தனிமனித நேர்மை மிக முக்கியம். வளரும் தலைமுறை இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஊழலற்ற இந்தியாவை உருவாக்குவது கஷ்டம்தான் என்றாலும் அது சாத்தியமே. நம்மால் முடியும். ஆனால் அதற்கான மனநிலையை வளர்த்தெடுக்க வேண்டும்.” என்றார் கலாம்.

சூரியனுக்கு வெளியே ‘புதிய பூமி’!


kepler10b2சியாட்டில்: சூரிய குடும்பத்துக்கு வெளியே பூமியைப் போன்றே பாறைகள் கொண்ட புதிய கோளை (exoplanet) அமெரிக்காவின் நாஸா விண்வெளி ஆய்வு மையம் கண்டுபிடித்துள்ளது.
நாஸா அனுப்பியுள்ள கெப்ளர் விண்கலம் இந்த கோளை கண்டுபிடித்தது. சூரிய குடும்பத்துக்கு வெளியே இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள சுமார் 700 கோள்களும் வாயுக்கள் நிறைந்ததாகவோ அல்லது மணல் போன்ற துகள்கள் மட்டுமே கொண்டதாக இருக்கும் நிலையில், முதல் முறையாக பாறைகளுடன் கூடிய பூமியைப் போன்ற கோள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் சூரிய குடும்பத்துக்கு வெளியே கண்டறியப்பட்டுள்ள மிகச் சிறிய முதல் கோளும் இது தான்.
கெப்ளர் 10பி என்று பெயரிடப்பட்டுள்ள இந்தக் கோள் பூமியை விட 40 சதவீதம் மட்டுமே பெரிதானது. ஒரு நட்சத்திரத்தை 20 மணி நேரத்துக்கு ஒருமுறை சுற்றி வருகிறது. நமது சூரியன் அல்லாத பிற நட்சத்திரங்களை சுற்றி வரும் இதுபோன்ற கோள்களுக்கு எக்ஸோபிளானட் (exoplanet) என்று பெயர்.
மிக அதிகமான வெப்ப நிலையுடன் காணப்படும் இந்தக் கோள் உயிரினங்கள் வசிக்கும் நிலையில் இப்போது இல்லை. ஆனால், பூமி உருவாகும்போது இதைவிட மிக அதிகமான வெப்ப நிலையில் தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கெப்ளர் 10பி கோள் உருவானபோது மிகப் பெரியதாக, இன்னும் அதிக வெப்ப நிலையுடன் இருந்திருக்கலாம், பின்னர் சுருங்கி, வெப்ப நிலையும் குறைந்து இந்த அளவை அடைந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
எனவே பூமி போன்ற உயிர்கள் வாழும் கிரகங்கள் உருவான வரலாற்றை அறிவதில் இந்த கெப்ளர் பி பெருமளவில் உதவலாம் என்று நம்பப்படுகிறது.
2009ம் ஆண்டில் விண்ணில் செலுத்தப்பட்ட கெப்ளர் விண்கலம் சிக்னஸ் மற்றம் லைரா வானியல் மண்டலங்களுக்கு இடையே உள்ள சுமார் 1.5 லட்சம் நட்சத்திரங்களை ஆய்வு செய்து, அவற்றைச் சுற்றி வரும் கோள்களை கண்டுபிடித்து வருகிறது.kepler10b
இந்த விண்கலம் அனுப்பும் படங்கள், தகவல்களுடன் பூமியில் உள்ள நாஸாவின் பல்வேறு வானியல் தொலைநோக்கிகளும் இணைந்து இந்தக் கோள்களை ஆய்வு செய்து வருகின்றன.
இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள கெப்ளர் 10பி கோள் பூமியிலிருந்து 560 ஒளி ஆண்டுகள் (light years) தொலைவில் உள்ளது. இதன் வயது 8 பில்லியன் ஆண்டுகளாக இருக்கலாம் என்று தெரிகிறது.

மனுஷ்யபுத்திரன் கவிதை

புதிர் விளையாட்டின் இளவரசிக்கு
மனுஷ்ய புத்திரன்

புதிர் விளையாட்டின்
கலைந்த உருவங்களைச் சேர்ப்பதில்
அம்மு ஒரு நிபுணியாகிவிட்டாள்

அவளைக் குழப்பும்
எனது எல்லா முயற்சிகளையும்
அவள் வெற்றிகரமாகக் கையாள்கிறாள்

ஒரு முறை கூட அவள்
சிங்கத்தின் தலையில்
ஒரு மாட்டின் தலையைப் பொருத்துவதில்லை

குதிரையின் கால்களுக்குப் பதில்
வாத்தின் கால்களை
மாற்றி வைத்ததில்லை

தச்சனின உபகரணங்களில்
அவள் தையல் ஊசியை
சேர்ப்பதில்லை

ஒப்பனை செய்யும்
பெண்ணின் கையில்
அவள் சுத்தியலைக் கொடுப்பதில்லை

தும்பிகளின் விலாக்களில்
அவள் பருந்தின் சிறகுகளை நுழைப்பதில்லை

மீனின் கண்களின் இடத்தில்
கழுகின் கண்களை மாற்றியதேயில்லை

அம்மு அவள் பூர்த்தி செய்யவேண்டிய
புதிர் விளையாட்டின் சிறு பகுதி
காணாமல் போகும்போது
அமைதியிழந்து விடுகிறாள்
அவளது மொத்த உலகின்
சிதைக்கப்பட்ட ஒரு பகுதிபோல
அது அவளது ஆறாத காயமாகிறது
அது தனது வெற்றிகளுக்கு
எதிரான நெறியற்ற சதி என்பதை
அவள் சீக்கிரமே கண்டுபிடித்து விடுகிறாள்

நான் எனது
எல்லா புதிர்விளையாட்டுகளிலும்
ஒரு புலியின் உடலில்
ஒரு ஆட்டின் தலையாக இருந்தேன்
அல்லது ஒரு மீனின் உடலில்
பாம்பின் வாலாக அசைந்தேன்

எப்போதும் என் விதியின் வரைபடத்தில்
காணாமல் போகும் பகுதிகளை
நான் தேடியதே இல்லை
இதுதான் முழுமை என்று
எப்போதும் பிடிவாதமாக நம்பவைத்தேன்

எல்லாவற்றையும் விட
கலைக்கப்பட்ட எதையும்
உரிய இடத்தில் வைக்கும்
ஒவ்வொரு முயற்சியிலும்
நான் அதை
இன்னும் கொஞ்சம் சீர்குலைக்கிறேன்
அதில்
இன்னும் கொஞ்சம் ரத்தம் சிந்துகிறேன்

சிறுகதை; வேப்பெண்ணெய்க் கலயம்

சிறுகதை
வேப்பெண்ணெய்க் கலயம்
பெருமாள்முருகன்
பேரனைக் கையில் பிடித்துக்கொண்டு குள்ளப்பாட்டி வீட்டை விட்டுப் புறப்பட்டபோது பொழுது கிளம்பியிருக்கவில்லை. பேரன் முகத்தில் தூக்கம் படர்ந்திருந்தது. பாட்டி எங்கே கூட்டிப்போகிறாள் என்று அவனுக்குத் தெரியாது. ஆனால் ஏதோ புது இடத்திற்காகத்தான் இருக்கும். பாட்டி வீட்டுக்கு வந்த இந்த இரண்டு வாரத்தில் அவன் கண்ட இடங்கள் எல்லாம் புதிதானவை. அவன் கனவுகளில்கூட நுழைந்திராத புத்தம்புதுப் பிரதேசங்கள். ‘எங்க ஆயா போறம்’ என்று சிணுங்கலோடு பலமுறை கேட்டு நச்சரித்தான். பாட்டி தன் குட்டைக் கையைத் தூக்கி முன்னால் காட்டி ‘அங்க போறம்’ என்றாள். ‘அங்கன்னா எங்காயா’ என்று கால்களை நிலத்தில் உதைத்துக்கொண்டு கேட்டான். ‘அங்கன்னா அங்கதான்’ என்று சொன்னாள் பாட்டி. இருவருக்கும் அது ஒரு விளையாட்டுப் போலவும் நடையை அலுப்பில்லாமல் தொடரவும் உதவியது.
எப்படியும் தெரியத்தானே போகிறது என்று அவன் பாட்டிக்கு முன்னும் பின்னுமாக ஓடி வேறு விளையாட்டுக்கு மாறினான். விளையாட்டு அலுக்கும்போதெல்லாம் ஓடி வந்து பாட்டியின் கைகளைப் பிடித்துக்கொண்டு கெஞ்சுவது போல ‘எங்காயா போறம்’ என்பான். எங்கே போகிறோம் என்று தெரிந்து அதற்காகத் தயாரிப்புகள் எல்லாம் செய்து புறப்பட்டுத்தான் அவனுக்குப் பழக்கம். பாட்டி வீட்டுக்கு வரும் முன் அவன் மட்டுமல்லாமல் அவன் அப்பா அம்மாவும் சேர்ந்து எத்தனையோ தயாரிப்புகள் செய்தார்கள். எதுவுமே இல்லாமல் எங்காவது போவது இந்தப் பாட்டியால்தான் முடியும். அவனுக்கு ஏதாவது பதில் சொல்லிக் கொண்டும் பதில் சொல்லாமல் வெறும் பொக்கைச் சிரிப்பைத் தந்துகொண்டும் தன் கூனுடம்பை மெல்ல நகர்த்திக் காடுகளை இணைத்துச் செல்லும் கொடித்தடத்தில் ஊர்ந்தாள் பாட்டி.
அவனுடைய பெயர் பாட்டிக்கு வாயில் நுழையவில்லை. அதனால் அவள் ‘குஞ்சு’ என்று அழைத்தாள். ‘குள்ளப்பாட்டி பேரன் குஞ்சு’ என்று ஊர்ச் சிறுசுகளும் பெரிசுகளும் கேலி செய்தார்கள்.
குஞ்சு குஞ்சு
குட்டிக் குஞ்சு
கோழிக்குஞ்சு
காக்காக் குஞ்சு
கருவாட்டுக் குஞ்சு
டவுசர் போட்ட
டவுனுக் குஞ்சு
எனச் சிறுவர்கள் ராகம் போடும்போது மண்ணை அள்ளித் தூற்றிவிட்டு ஓடி வந்துவிடுவான். பதினைந்து நாள்களுக்குள் குஞ்சு இத்தனை தெரிந்துகொண்டிருக்கிறான் என்பதில் பாட்டியின் முகம் பூரிக்கும். கைகளால் வாரிக் கன்னத்தில் இருத்திக்கொள்வாள்.
பேரன் என்றால் நேரடிப் பேரன் இல்லை. கொள்ளுப் பேரன். பாட்டிக்குப் பேத்தி மகன். மகள் வயிற்றுப் பேத்தி. மகள் போயே சில வருசங்கள் ஆகிவிட்டன. பேத்தி எப்படியோ ஞாபகம் வைத்திருக்கிறாள். பாட்டியின் சொந்தங்கள் எல்லாம் இறக்கை முளைத்த குஞ்சுகளாய் இரை தேடி திக்காலுக் கொன்றாய்ப் பறந்து போயின. ஊரில் நல்லது கெட்டது என்று எதற்காவது யாராவது வரும்போது பாட்டியையும் பார்த்துப் போவார்கள். கையில் ரூபாய்த் தாள்களைத் திணிப்பார்கள். அதை வாங்கித்தான் அவள் சாப்பிட வேண்டும் என்பதில்லை. மாதாமாதம் வருமானம் வருகிற மாதிரியான ஏற்பாடு இருக்கிறது. ஒண்டிச் சீவனுக்கு அதுவே தாராளம். என்றாலும் வாங்கிக் கொள்வாள். கொடுப்பவருக்கு சந்தோஷம் கிடைக்குமானால் கெடுப்பானேன்? எல்லாரும் ஒருநாளைக்குச் சேர்ந்து வருவார்கள். பாட்டிக்கு இத்தனை சொந்தங்களா என்று ஊரே கண் விரியப் பார்க்கும். அப்போது எல்லாரையும் பார்க்கத் தன்னால் முடியாது என்று தோன்றும். தூக்கம் வராத இரவுகளில் வானத்தைப் பார்த்துக்கொண்டு தன் சொந்தங்களின் கிளைகளை எல்லாம் எண்ணிப் பார்ப்பாள். யாருடைய முகமாவது நினைவில் வராமல் போனால் வருத்தமாகிப் போகும். எப்படியாவது முயன்று அந்த முகத்தை மனத்திற்குக் கொண்டு வந்த பின்னால்தான் நிம்மதியாகும். பெயர்கள் நினைவிலிருந்து கழன்று வெகுகாலமாகி விட்டது.
பாட்டியின் உடல் குறுகிப் போய்விட்டது. ஆனால் அவளுடைய அன்றாட வேலைகளில் எந்தச் சுணக்கமும் இல்லை. வீடு வாசலைச் சுத்தம் செய்வது, சமைப்பது, சாப்பிடுவது, குளிப்பது என்று நாள் ஓடிவிடும். வாசல் திண்ணையில் உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருந்தால் எத்தனையோ காட்சிகள். மனிதப் பேச்சுகளும் நடவடிக்கைகளும்தான் காணக் காணத் தீராத வேடிக்கைகளாய் விரிகின்றன. ஆகாத பண்டமாய் ஒதுங்கிக் கிடந்தாலும் பாட்டியை வம்புக்கிழுத்து யாராவது ஒன்றிரண்டு வார்த்தை பேசிப் போவார்கள். அதுவே அன்றைய நாளுக்குப் பெரிய ஆறுதலாகிவிடும். ‘யாரப் பாத்துக்கிட்டு உக்காந்திருக்கற பாட்டி’ என்று எவளாவது குமரியொருத்தி பாட்டியின் வாயைக் கிளறுவாள். முன்பெல்லாம் இப்படி யாராவது கேட்டால் பாட்டியும் பதிலுக்கு வம்பாகச் சொல்வாள் ‘உன்னூட்டுக்காரன் பொழுது மசங்க வர்றமுன்னான். அதான் பாத்துக்கிட்டு உக்காந்திருக்கறன்’. பதிலும் வரும், ‘பாட்டிக்கு இன்னம் கொழுப்பு அடங்கல பாத்துக்க’ என்கிற மாதிரி. ஆனால் இப்போதெல்லாம் பொக்கை வாய் விரியச் சிரித்துக்கொண்டு ‘அந்தக் கூத்துவந்தான் வருவான்னு பாக்கறன்’ என்கிறாள். ‘எல்லா ஊட்டுக்கும் கூத்துவன அனுப்பிட்டுக் கல்லாட்டம் உக்காந்திருக்கற. நீதான் கூத்துவன் போ’ என்று கேலி செய்கிறார்கள். அதில் உண்மையும் இருப்பதால் பாட்டியின் முகம் வாடிப் போகும். எத்தனையோ சாவுகளைப் பார்த்துவிட்டவள். ‘நானா மாட்டீங்கறன். ஏனோ கூத்துவனுக்கு என்னயப் புடிக்க மாட்டீங்குது’ என்று நினைத்துக் கலங்குவாள்.
அருகில் நெருங்காத கூற்றுவனின் கொடூர சிந்தை பற்றி எண்ணமோடி ‘இன்னம் என்னென்னத்தப் பாக்கோனுமின்னு எந்தலையில எழுதி வெச்சிருக்கற’ என்று தனக்குள்ளாகவே புலம்பியபடி திண்ணையில் தலைசாய்த்திருந்த நண்பகல் பொழுதில் அவளுக்கு முன்னால் மோட்டார் வண்டியில் பேத்தியும் அவள் புருசனும் இந்தக் குஞ்சுவோடு வந்து இறங்கினார்கள். வேறேதாவது வேலையாக வந்தவர்கள் அப்படியே பார்த்துப் போக வந்திருப்பார்கள் என்று நினைத்து வரவேற்றாள். உடனடியாக அடையாளம் கண்டுகொண்டதும் சில விஷயங்களை விசாரித்ததும் அவர்களுக்குப் பெருத்த மனநிறைவைக் கொடுத்தன. பாட்டி தண்ணீர் மொண்டுவர உள்ளே போனபோது ‘கெழ்டுக்கு வயசாவ வயசாவக் கண்ணு காதெல்லாம் நல்லாக் கூராகிக்கிட்டே வருது’ என்று பேத்தி பேசுவது காதில் விழுந்தது. குஞ்சு பாட்டியையே பார்த்துக்கொண்டு இறுகி நின்றான்.
பேத்தி வந்த காரியம் கொஞ்ச நேரம் கழித்துத்தான் விளங்கியது. அவர்கள் இரண்டு பேருமே ‘ஆப்பீஸ் வேலை’யில் இருப்பவர்கள். இரண்டு பேருக்கும் ஒரே சமயத்தில் வெளியூர் போய்ச் சில நாட்கள் இருக்கும்படி நிர்ப்பந்தம். பையனுக்குக் கோடை விடுமுறை. அதனால் இந்தக் குஞ்சுப் பையனை பாட்டிதான் பார்த்துக்கொள்ள வேண்டும். வேறெங்கும்விட வழியில்லை. பாட்டியால் முடிகிறவரை பார்த்துக்கொண்டால் போதும். அதற்குள் வேறு ஏதாவது ஏற்பாடு செய்துகொள்வார்கள். இன்னும் இரண்டு மூன்று இடங்களையும் யோசித்து வைத்திருந்தார்கள். பாட்டி மறுத்து விடுவாளோ என்னும் பயத்தில் பேத்தி ரொம்பவும் கெஞ்சுகிற தொனியில் விஷயத்தைச் சொன்னாள். இன்னும்கூடத் தன்னால் ஏதோ பயன் இருக்கிறது என்று பாட்டி அப்போதுதான் உணர்ந்தாள். ‘தாராளமா உட்டுட்டுப் போம்மா. ஒரு மாசத்துக்குனாலும் குஞ்ச நா பாத்துக்கறன்’ என்று சொன்னாள். ஆறு வயதுப் பையன். இதுவரை அப்பா அம்மாவைப் பிரிந்து இருந்ததில்லை. நிர்ப்பந்தத்தால் இந்தக் கிழவியிடம் விடவேண்டியிருக்கிறதே என்னும் கவலை மிகுந்த அவர்கள் முகத்தைப் பார்த்ததும் சமாதானப்படுத்தி நம்பிக்கை கொடுக்கப் பாட்டி முயன்றாள். தன் ஈரம் மிகுந்த கைகளால் குஞ்சுவின் கன்னத்தை வாரிப் பிடித்துக்கொண்டாள். அவன் நெளிந்தான். காப்புக் காய்ச்சிய வடுக்கள் உரசின. ஆனால் அந்தத் தொடுதல் அவனால் விலக்க முடியாததாக இருந்தது.
‘குஞ்சு உனக்கு வேணுங்கறத இந்தப் பாட்டி வாங்கிக் குடுப்பன். இந்த வீதியெல்லாம் உன்னோடதுதான். ஓடி வெளையாடலாம். காட்டுக்குள்ள ஒரு மரத்துல கிளிக்குஞ்சு இருக்குது உனக்குப் புடிச்சுத் தருவன். என்ன குஞ்சு என்னோட இருந்துக்குவியா.’
பையனின் முகத்தில் தெளிவும் குழப்பமும் மாறிமாறித் தோன்றின. உடலெங்கும் சுருக்கங்களும் இடுங்கிய கண்களும் கூனிய முதுகும் கொண்ட கிழவியை அவன் கார்ட்டூன் படங்களில் கொடூர சூன்யக்காரிகளாகத் தான் பார்த்திருக்கிறான். இந்தக் கிழவியின் தோற்றம் அப்படி இருந்தாலும் பேச்சில் வழியும் பிரியமும் இதுவரைக்கும் அவனை யாரும் அழைக்காத விதத்தில் ‘குஞ்சு’ என்று அவள் கூப்பிடுவதும் குழப்பின. வாய்க்குள் அமுங்கிக்கிடக்கும் உதடுகளை வெளிப் பிதுக்கி அவள் பேசுவதும் பையனுக்கு அவ்வளவாகப் புரியவில்லை. அப்பாவும் அம்மாவும் அவனுக்கு எத்தனையோ சொல்லித்தான் கூட்டி வந்தார்கள். அடம் செய்தால் அழ அழ விட்டுவிட்டுப் போய்விடுவார்கள். கோடைகாலச் சிறப்பு வகுப்பு என்று சொல்லி எங்காவது விடுதியில் விட்டுவிடும் அவர்கள் யோசனையை அவன் முன்பே அழுது வன்மையாக நிராகரித்திருந்தான்.
பத்து நாட்களுக்கான தின்பண்டப் பைகளையும் சாக்கு போன்ற பெரிய பொம்மைப் பை ஒன்றையும் கொடுத்துவிட்டு நான்கைந்து பெரிய ரூபாய்த் தாள்களைப் பாட்டி கையில் வைத்தார்கள். பேத்தி முகத்தைக் கலவரமாக நோக்கி ‘எதுக்கும்மா’ என்றாள் பாட்டி. பையனைப் பார்த்துக்கொள்ளக் கூலியோ என்று விதிர்த்துப்போனாள். ‘பையன் அதையும் இதையும் கேப்பான். வாங்கிக் குடு. அதுக்குத்தான் அம்மாயி’ என்று பேத்தி சொல்லவும்தான் மனம் சமாதானப்பட்டது. பையனைப் பிரிய மனமே இல்லாமல் ஏதாவது சொல்லிக்கொண்டே இரண்டு பேரும் நின்றார்கள். ஏழெட்டுக் குழந்தைகளைப் பெற்று வளர்த்தவள் பாட்டி. பெற்றுச் சில மாதங்களிலேயே இறந்து போனது ஒன்று. தெருவெல்லாம் ஓடிப் புழுதி அடித்துக்கொண்டு வெண்ணிறமாய் மாறிவரும் குறும்பிராயத்தில் துள்ளத்துடிக்க ஒன்றை வாரிக்கொடுத்தாள். அந்தக் குழந்தைதான் இப்போதும் கண்களில் வந்து நின்று கொட்டிச் சிரிக்கும். அது வளரவே இல்லை. குழந்தையாகவே இத்தனை வருசங்களாகச் சிரித்தாடுகிறது. வளர்ந்து வேலைவெட்டி என்று ஓடிவிட்டவர்களின் குழந்தைத் தோற்றம் இப்போது நினைவில் இல்லை. தன் மனத்தில் அப்படியே இருக்கும் அந்தக் குழந்தைதான் குஞ்சுவாக வந்திருப்பதாகத் தோன்றியது. இல்லை என்றால் இத்தனை வருசம் கழித்துத் தன்னைத் தேடி ஒரு குழந்தை வருவானேன்? பாட்டியின் உடலிலும் மனத்திலும் புதுத்தெம்பு கூடியது.
இரண்டு வாரமாகப் பாட்டிக்கு நிற்க நேரமில்லை. குஞ்சுவின் தேவைகளைப் பார்த்துப் பார்த்துச் செய்தாள். மூன்று வேளையும் அவனுக்குச் சூடாக வேண்டும். ஒருவேளை செய்ததையே நாள் முழுதுக்கும் வைத்துக்கொண்டிருந்தவள் இப்போது மூன்று வேளையும் செய்ய வேண்டியதாயிற்று. அவனைக் குளிக்கவைக்கப் பெரும்பாடுபட வேண்டியிருந்தது. தன் கைச்சமையல் அவனுக்குப் பிடிக்குமோ என்னவோ என்று பாட்டிக்குக் கவலை. அவனும் விரும்பிச் சாப்பிட்டான். மசாலா போட்ட உணவு வகைகளைச் சாப்பிட்டுப் பழகியிருந்த அவன் நாக்கு இத்தகைய ருசிகளைக் கண்டதேயில்லை. இத்தனைக்கும் பாட்டி மிளகாயைக் கிள்ளிப் போட்டுப் பருப்பைப் பன்னீராட்டம் கடைவாள்; பீர்க்கங்காய், நக்கிரி, சுரைக்காய், கத்திரிக்காய் என்று எல்லாவற்றையும் கடைவாள். காய்களின் ருசி மாறாத அந்தக் குழம்புகளை ஆவலாகச் சாப்பிட்டான் குஞ்சு. சமைக்கும் வேலை எந்நேரமும் இருந்தது. கொஞ்ச நேரம் கால் நீட்டிப் படுக்கவோ கண்மூடவோ பகலில் நேரம் கிடைப்பது அரிதாயிற்று. ஆனால் பாட்டி அதை உணரவில்லை.
அவனுக்கென்று பால் வாங்கித் தயிர் போட்டாள். கெட்டித் தயிரை வழித்து நக்கிச் சாப்பிட்டான். காலை நேரத்தில் குஞ்சு வெகுநேரம் தூங்கினான். அவனை எழுப்பவே மனம் வராது. பத்து மணிக்கு மேலும் அவனும் அசந்து தூங்குவான். சமைத்து வைத்துவிட்டு அவன் எழுந்திருப்பானா என்று அவனையே பார்த்தபடி உட்கார்ந்திருப்பாள். தூங்குகிற பையனை இப்படிப் பார்த்துக்கொண்டிருந்தால் தன் கண்ணே பட்டுவிடும்; சாயங் காலம் அவனுக்குச் சுத்திப்போட வேண்டும் என்று நினைப்பாள். வெறும் வயிற்றோடு தூங்குகிறானே என்று மனமே இல்லாமல் எழுப்புவாள். அவசர அவசரமாக எழுப்பி வேகவேகமாகப் புறப்பட வைத்துப் பள்ளிப் பேருந்தில் திணித்து ஓட வேண்டிய தேவையில்லாததாலும் பாட்டி தன்னைத் திட்டி ஒரு வார்த்தையும் சொல்லாததாலும் அவனுக்கு அந்தப் பட்டிக்காடு ரொம்பவும் பிடித்திருந்தது. பாட்டி செய்துவைத்திருக்கும் உணவைத் தின்றுவிட்டு ஓடிவிடுவான்.
தெருவில் ஏற்கனவே பலவிதமான விளையாட்டுகள் களை கட்டியிருக்கும். அதில் ஏதாவது ஒன்றுக்குள் அவனும் நுழைந்துவிடுவான். அப்புறம் மறுபடியும் சாப்பிடப் பாட்டி வந்து கூப்பிடும்போதுதான் அவனுக்கு நினைவே வரும். அவன் விளையாடும் இடத்திலேயே பாட்டி சுற்றிச் சுற்றி வந்து கூப்பிடுவாள். ராசா, குஞ்சு, கண்ணு, பொன்னு என்று எத்தனையோ இனிய வார்த்தைகளால் அவனை அழைப்பாள். ஆனால் காதிலேயே வாங்கிக்கொண்ட மாதிரி தெரியாது. உடனே விளையாட்டில் இருக்கும் மற்ற பையன்களிடம் கெஞ்சுவாள். அவர்களை இப்படிச் சாப்பிடச் சொல்லி அழைக்க யாரும் வருவதில்லை. அந்த ஏக்கம் கேலிச் சிரிப்பாய் மாற அவனை அனுப்பிவைப்பார்கள். சாப்பிட்ட உடனே வந்து விடுவேன் என்று அவர்களுக்கு உறுதி கொடுத்துவிட்டு ஓடி வருவான். வீட்டுக்குப் பாட்டி வந்து சேர்வதற்குள் அவன் சாப்பிட்டு முடித்திருப்பான். மீண்டும் விளையாட்டை நோக்கி ஓட்டம்தான். மாலையிலும் விளையாட்டு. பேத்தி கொடுத்துப் போன பொம்மைப் பை பிரிபடாமல் அப்படியே கிடந்தது.
முன்னிரவில் வீட்டு வாசலில் கட்டிலைப் போட்டுப் படுத்துக் கொள்வார்கள். அவன் கதை சொல்லச் சொல்வான். பாட்டிக்குக் கதைகள் எல்லாம் மறந்து போயிருந்தன. சொல்லிப் பல வருசங்கள் ஆனதால் இப்போது நினைவுக்குக் கொண்டுவர முயன்று பார்த்தாள். அப்புறம் தனிக்கதை எதற்கு என்று தன் வாழ்க்கைக் கதையையே சொல்ல ஆரம்பித்தாள். அது குஞ்சுவுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவனுக்காகப் பல சம்பவங்களை நினைவிலிருந்து மீட்டு அவற்றை உருக்கத்தோடும் ஏக்கத்தோடும் சொல்லிக்கொண்டிருந்தாள். அவளுக்குள் இறுகிக்கிடந்த எல்லாம் இளகிப் பாகுக் குழம்பாய் வெளியேறிக்கொண்டிருந்தன. எந்தச் சந்தேகம் கேட்டாலும் பாட்டி திட்டாமல் அவளுக்குத் தெரிந்த பதிலைச் சொன்னாள். அதனால் குஞ்சு நிறையக் கேள்வி கேட்டான். பாட்டிக்கு இப்போது கூத்துவன் மறந்துபோனான். எதிரில் அவன் வந்தால்கூட அவளுக்கு அடையாளம் தெரியாது. தெரிந்தாலும் இன்னும் கொஞ்ச நாள் கழித்து வா என்று விரட்டிவிடுவாள். பாட்டி தன்னுடைய இளவயதில் இருந்த சந்தோசத்தையும் களிப்பையும் இப்போது அனுபவித்துக் கொண்டிருந்தாள்.
தினந்தோறும் இரவில் எட்டுமணிக்குத் தவறாமல் பாட்டி வீட்டுக்குக் கொஞ்சம் தள்ளியிருந்த வீடு ஒன்றிற்குத் தொலைபேசி வரும். பாட்டியும் குஞ்சுவும் போய்க் காத்திருந்து பேசுவார்கள். பாட்டி இதுநாள்வரை தொலைபேசியில் பேசியதே இல்லை. குஞ்சுதான் சொல்லிக்கொடுத்தான். குஞ்சுவின் அப்பனும் அம்மாவும் மாறி மாறி அவனுக்குப் புத்தி சொல்லிக்கொண்டே இருப்பார்கள். பாட்டிக்கும் புத்திதான். அவனை எப்படி எப்படி எல்லாம் கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் அவர்கள் பேச்சின் முழுமையாக இருக்கும். அவர்கள் என்ன சொன்னாலும் அவன் ‘ம்’ ‘சரி’ என்றுதான் சொல்லிக்கொண்டேயிருப்பான். அவனைப் பார்த்துப் பாட்டியும் அப்படிச் சொல்லக் கற்றுக்கொண்டாள். பாட்டி பேசி முடிக்கும்வரை வாங்கியைப் பாட்டியின் காதின்மேல் வைத்துப் பிடித்துக்கொண்டேயிருப்பான் குஞ்சு. அப்பனையும் அம்மாவையும் வரச் சொல்லி ஒருமுறைகூடக் குஞ்சு சொல்லவே இல்லை. அதுதான் பாட்டிக்குச் சந்தோசம் தருவதாக இருந்தது. ‘பேரன் வந்தொடனப் பாட்டியக் கைல புடிக்க முடியல’ என்று சொல்லி மற்றவர்கள் சிரித்துக் கேலி செய்வதையும் பாட்டி சந்தோசமாகவே எடுத்துக்கொண்டாள்.
குஞ்சுவின் உலகம் தெருவோடு நின்றுவிடவில்லை. பையன்களோடு சேர்ந்துகொண்டு அவன் காடுகளுக்குள் திரியப் போனான். சில பையன்கள் பனைகளில் ஏறி நுங்கு வெட்டிக்கொடுத்தார்கள். விரல்விட்டு நோண்டி அப்படியே வாயருகில் வைத்து நுங்கை உறிஞ்சத் தெரிந்துகொண்டான். மொட்டை மரங்களில் கிளிக்குஞ்சைத் தேடித் திரிந்தார்கள். கடும் கானல். ஆனால் குஞ்சு மற்ற பையன்களோடு சேர்ந்து திரிவதை நிறுத்தவில்லை. பாட்டிக்குக் காடுகளுக்குள் போய்த் தேடி அவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. மத்தியானச் சோற்றை ஆக்கி வைத்துவிட்டுத் தெருமுனையையே பார்த்த படி உட்கார்ந்திருந்தாள். சூடு பிடித்து அவன் மல்லவே சிரமப்பட்டுக் கத்தினான். அப்போதிலிருந்து பாட்டிக்குப் பயம் பிடித்துக்கொண்டது. கம்மஞ்சோற்று நீத்தண்ணியை வடித்துக் குண்டா நிறையக் குடிக்கக் கொடுத்தாள். கொஞ்ச நேரத்தில் சரியாகி விட்டதென்றாலும் மறுநாள் அவனை எங்கும் போக விடவில்லை பாட்டி. அவனுக்கு ஏதாவது ஒன்று என்றால் பேத்திக்கு என்ன பதில் சொல்வது என்று பயந்தாள். சூடு பிடித்த விசயத்தைப் பேத்திக்குத் தொலைபேசியில் சொல்லவில்லை. பயந்து போய்விடக்கூடும் என்று பாட்டியும் குஞ்சுவும் சேர்ந்து மறைத்துவிட்டனர். குஞ்சுவின் துணையோடு பெரிய காரியம் ஒன்றைச் செய்துவிட்டதுபோலப் பாட்டி மகிழ்ந்தாள். மறைப்பில் இருக்கும் இன்பம் அவளுக்கு இந்த வயதிலும் விளங்கியது.
ஒருநாள் முழுக்க வீட்டருகிலேயே விளையாடிக்கொண்டிருந்தான். தன்னந் தனியாக விளையாடுவது அவனுக்குப் பழக்கம் தான் எனினும் பாட்டி வீட்டுக்கு வந்ததிலிருந்து அது விட்டுப்போயிருந்தது. தெருவையே ஏக்கத்தோடு பார்த்தபடி விளையாடினான். வழக்கத்திற்கு மாறாக மத்தியானத்தில் நல்ல தூக்கம் போட்டான். பையன்கள் சிலபேர் வந்து வந்து ‘குஞ்சு வெளையாட வர்லியா’ என்று கேட்டுப் போனார்கள். அடுத்த நாள் அவனால் வீட்டோடு இருக்க முடியவில்லை. ரொம்ப தூரம் போகமாட்டேன் என்று உறுதி கொடுத்துவிட்டுத் தெருவுக்குப் போனான். பாட்டியால் கறாராக மறுத்துச் சொல்ல முடியவில்லை. அவன் கொஞ்ச நேரத்தில் வழக்கம் போல மாறிவிட்டான். ஆனால் காட்டுப் பக்கம் போகவில்லை. அவன் விளையாடும் இடத்திற்குப் போய்ச் சாப்பிடக் கூட்டி வந்தாள். ஓரிரு நாட்கள் இப்படிக் கழிந்தது.
அடுத்தொரு நாள் யாரும் எதிர்பாராத வகையில் அவன் மற்ற பையன்களோடு சேர்ந்து கிணற்றுக்குப் போய்விட்டான். வெயில் காலத்துக் கிணறு வாய் திறந்து எல்லாரையும் வாவாவென்று கூப்பிட்டுக்கொண்டிருக்கும். பையன்கள் கிணற்றின் பல பக்கங்களிலிருந்தும் மாறி மாறிக் குதித்துக்கொண்டிருப்பார்கள். நீச்சல் பழகியவர்களின் ஆரவாரத்துக்கிடையே புதிதாகப் பழகுபவர்களின் அழுகைக் குரல்களும் ஓரளவு பழகியவர்கள் சுரைப் புருடையையோ முருங்கைக் கட்டையையோ முதுகில் கட்டிக்கொண்டு முழுக் கிணற்றையும் வட்டமடிக்கும் சந்தோசக் கூச்சலும் இடைவிடாது கேட்டுக்கொண்டிருக்கும். குஞ்சு கிணற்று மேட்டின் ஒரு ஓரத்தில் உட்கார்ந்து உள்ளேயே பார்த்துக் கொண்டிருந்தான். இறங்கி நீந்த வேண்டும் என்னும் ஆவலைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அங்கிருந்த திளைப்பில் அவனை யாரும் கண்டுகொள்ளவில்லை. ஒரு சுரைப் புருடை இருந்தால் தானும் கிணற்றுக்குள் இறங்கலாம் என்று யோசித்தான்.
அன்று இரவு பாட்டியிடம் சுரைப் புருடை கேட்டு நச்சரித்தான். அவன் கிணற்றுப் பக்கம் போனான் என்பதையே பாட்டியால் தாங்க முடியவில்லை. வெயில் காலக் கிணறு சந்தோசத்தை வெளிப்படுத்தும். குரூரத்தைத் தனக்குள் மறைத்துவைத்திருக்கும். சந்தர்ப்பம் பார்த்துக் குரூரம் வெளிப்பட அது எக்காளமிடும். இரண்டு மூன்று வருசத்திற்கு ஒருமுறை சின்னப் பையன்கள் யாரையாவது காவு வாங்கிவிடும். எல்லாரும் சந்தோசமாக நீந்திக்கொண்டிருக்கும்போது நீச்சல் தெரியாத யாரையாவது மெல்ல உள்ளிழுத்துக்கொள்ளும். பாட்டியின் ஆயுளில் அவள் எத்தனையோ முறை இத்தகைய சாவுகளைப் பார்த்துவிட்டாள். அப்போதெல்லாம் ‘சேவேறி முத்துன கட்ட கெடக்கறன். என்னய உட்டுட்டுச் சின்னக் கொழுந்தக் கிள்ளிப் போட்டுட்டயே அப்பா’ என்று கூத்துவனைப் பார்த்துப் புலம்புவாள். குஞ்சு அந்தப் பக்கம் போகிறான் என்பதை அவளால் செரித்துக்கொள்ள முடியவில்லை. கிணற்றின் இயல்பு அவளுக்குத் தெரியும். அது ஆசை காட்டிக்கொண்டேயிருக்கும். ஒருமுறை அந்தப் பக்கம் போனவர்களை மீண்டும் மீண்டும் வரச் சொல்லி மாயக்கரம் நீட்டி மயக்கும் குரல் கொண்டு அழைப்பு விடுத்தபடியே இருக்கும். அதை மீறுவது யாருக்கும் கடினம்தான்.
யாராவது பொறுப்பான பெரிய பையனைப் பார்த்துச் சொல்லிக் குஞ்சுவுக்கு நீச்சல் பழக்கிவிடலாம். பாட்டியும் போய்க் கிணற்று மேட்டின்மேல் காவலுக்கு உட்கார்ந்துகொள்ளலாம். கண்களை இடுக்கியபடி அவனையே பார்த்துக்கொண்டிருக்கலாம். அவனுக்கு ஏதாவது என்றால் உள்ளிறங்கிக் காப்பாற்ற முடியவில்லை என்றாலும் கத்திக் கூப்பாடு போட முடியும். கல்யாணம் ஆகிக் குழந்தை எல்லாம் பிறந்த பின்னும் பாட்டி கிணற்றுக்குள் குதித்து நீச்சல் போட்டிருக்கிறாள். ஆனால் இப்போது அந்த வலுவில்லை. உடல் தசைகள் இளகாமல் அங்கங்கே இறுகிப் பிடித்துக்கொண்டிருக்கின்றன. கை விரல்கள்கூடச் சிலசமயம் நீட்டினால் மடக்க முடிவதில்லை. மடக்கினால் நீட்ட முடிவதில்லை. நீச்சலுக்கு வலுவில்லை என்றாலும் குரல் இப்போதும் கூர்மையோடும் வலுவோடும் இருக்கிறது. குஞ்சுவுக்கு ஒன்றும் ஆகாமல் இருக்கக் குரல் பாதுகாப்பு போதும். ஆனால் பேத்தியை நினைத்துப் பயந்தாள். அம்மாயி என்று வாய் நிறைய அழைப்பவள் பையன் கிணற்றுக்குப் போனான் என்று தெரிந்தால் எப்படி ஆவாளோ? அதுவும் புரடை கட்டி நீச்சல் அடித்தான் என்றால் சந்தோசப்படுவாளா?
கிணற்றுப் பக்கம் போகக் கூடாது என்று குஞ்சுவுக்கு எவ்வளவோ சொன்னாள். கிணற்றுப் பக்கம் போகாத பையன்களோடு விளையாட வேண்டும் என்று கெஞ்சினாள். ஆனால் பொழுது நெற்றிக்கட்டுக்கு நேராக வந்துவிட்டால் போதும் எல்லாப் பையன்களும் கிணற்றில்தான் இருந்தார்கள். கிணறும் நிறைந்திருந்தது. கிணற்று மேடும் நிறைந்திருந்தது. குஞ்சு என்ன செய்வான்? அவனை இனிக் கட்டுப்படுத்த முடியாது என்பது தெரிந்ததும்தான் பாட்டி இந்த முடிவுக்கு வந்தாள். பாட்டியின் தேவை முடிந்துவிட்டது எனத் தோன்றியது. குஞ்சை உரிய இடத்தில் சேர்க்கும் நேரம் வந்துவிட்டது. ஏதோ இந்த வயதில் இப்படிக் கொஞ்ச நாள் பயன்படும்படி விதித்த சாமிக்குக் கைமாறாக என்ன செய்வது என்று தெரியவில்லை. வேப்பெண்ணெய்க் கலயமும் ஒரு வேலைக்கு ஆகும் என்று செலவாந்தரம் சொன்னது பொய்யாகுமா?
பேத்தி சொல்லியிருந்தது போலக் குஞ்சுவை மெல்ல அழைத்துக் கொண்டு போய் நகரத்துக்கு முன்னாலேயே இருக்கும் இன்னொரு பேத்தி வீட்டில் விட்டுவிட்டால் போதும். அவர்கள் குஞ்சுவை அவன் அப்பா அம்மாவிடம் பொறுப்பாகச் சேர்த்துவிடுவார்கள். கிழக்கே மலையின் பக்கவாட்டில் இருந்து பொழுது சிவப்புப் பந்தாய் எழும்புவதைக் குஞ்சு ஆர்வமாகப் பார்த்தான். உடலை லேசாகக் கூனியபடி பாட்டி மெல்ல நடந்தாள். அவள் வெகுதூரம் நடந்து பல நாட்களாகிவிட்டன. வீட்டைவிட்டு வெளியே போவது இரண்டு குடம் தண்ணீருக்காகவும் வாசல் தெளிக்கச் சாணம் எடுத்துவரவும்தான். உள்ளூரிலேயே நடக்கும் விசேசங்களுக்குக் கூடப் போவதில்லை. வீட்டில் என்றால் கால் நீட்டி உட்காரலாம். கொஞ்ச நேரம் படுக்கலாம். போகிற இடத்தில் எப்படி இருக்குமோ? விசேசப் பலகாரங்களை யாராவது வீடு தேடிக் கொண்டுவந்து கொடுத்தால் பாட்டி மறுப்பதில்லை.
சிவப்புப் பந்து மெல்ல நிறம் மாற மாறக் குஞ்சுவுக்குக் குதூகலம் பீறிட்டது. அறுவடை முடிந்த மேட்டாங்காடுகள் பரந்து கிடந்தன. யாரோ கழற்றி வீசி எறிந்திருந்த கிழிந்த நீளக் கோவணத்துணியெனக் கிடந்த ஒற்றையடித் தடத்தைவிட்டு விலகி அவன் குதித்துக் கொண்டோடினான். விடிகாலைப் பனி எங்கும் லேசான ஈரத்தைப் பரப்பியிருந்தது. ‘குஞ்சு குஞ்சு’ என்று பாட்டி கத்தக் கத்த அவன் காட்டுக்குள் சுழன்றோடினான். துவரங்கட்டைகளோ கொட்டக் கட்டைகளோ காலில் ஏறிவிடும் என்று பாட்டி பயந்தாள். ஆனால் குஞ்சுவின் உற்சாகத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. காட்டுக்குள் இறங்கியிருந்த மைனாக் கூட்டம் ஒன்று கத்தியபடி மேலெழும்பிப் பறந்தது. அற்புதமான கோலம் ஒன்று வானில் விரிவதை அவன் கண்டான். அந்தக் கோலம் கணந்தோறும் மாறிக் கொண்டேயிருக்கும் விந்தையை அண்ணாந்து பார்த்தபடி நின்றான். பாட்டியும் அண்ணாந்து பார்த்தாள். கரும்புள்ளிகள் இணைந்து நகர்வதாய்த் தெரிந்தது. ‘எதப் பாத்தாலும் குஞ்சுக்கு அரிசயம்தான்’ என்று வாய்விட்டுச் சொல்லிக்கொண்டாள்.
அவளுக்குச் சின்னஞ்சிறு பிள்ளையாய் அந்தக் காடுமேடுகளில் தான் திரிந்த காலங்கள் நினைவில் வந்தன. முகம் காலை மலராய்ப் பொலிந்தது. குஞ்சுவின் இருப்பு பாட்டியின் இத்தனை கால ஆயுளுக்கு மாபெரும் அர்த்தத்தைக் கொடுப்பது போலிருந்தது. இன்னும் சிலநாள் குஞ்சு இங்கேயே இருக்கலாம். அடுத்தடுத்த விடுமுறைகளுக்கு அவன் இங்கே வந்து தங்கிப் போகலாம். அவனை விடுவார்களா? ஒவ்வொரு விடுமுறையின் போதும் அவர்களுக்கு ஏதாவது வேலை வர வேண்டுமே. குஞ்சு இங்கிருந்தே பள்ளிக்குப் போனால் என்ன? அவனைக் கூடஇருந்து கவனித்துக்கொள்ளும் வலு பாட்டிக்கு இருக்கத்தான் செய்கிறது. அந்தப் புலர்பொழுது அவளுக்குள் ஏராளமான எண்ணங்களைக் கிளறிவிட்டன. சமீப காலத்தில் பாட்டி இத்தனை யோசித்திருக்கவில்லை.
ஏன் இவன் வந்திருக்க வேண்டும். இப்படிச் சீக்கிரத்தில் போக வேண்டும். அவன் போகக் கேட்கவில்லை. அவர்களும் வந்து அழைக்கவில்லை. ஆனாலும் அவனை வைத்திருக்கப் பயமாக இருக்கிறது. இன்னொரு பேத்தி வீட்டில் அவனை ஒப்படைத்துத் திரும்பிவிட்டால் பொறுப்பு முடிந்தது. ஒற்றையடிப் பாதை வேலியடிக்குப் போய் அதை ஒட்டி நீளப் போகும் மற்றொரு ஒற்றையடிப் பாதையில் முடிந்தது. பாட்டிக்கு மூச்சிரைத்தது. வெயிலேறிவிட்டால் நடப்பது இன்னும் சிரமமாகிவிடும். கல்லொன்றில் உட்கார்ந்தாள். குஞ்சு காட்டுக்குள் இருந்து ஓடி வந்தான். ‘இது என்ன ஆயா’ என்று கண்களை விரித்துக் கேட்டான். அவனுடைய இத்தனை நாள் இருப்பில் காட்டு வேலியை அவனுக்குக் காட்டியிருக்கவில்லை. ‘வேலி குஞ்சு’ என்றாள். ‘இது எங்கிருந்து வருது?’ என்றான் குஞ்சு. அதுதானே இது எங்கிருந்து வருகிறது? பாட்டி இத்தனை காலத்தில் யோசித்ததில்லை. கிளுவை, நொச்சி, வேம்பு, மின்ன மரங்கள் என்று எத்தனையோ மரங்களும் கொடிகள் ஏறிய அடம்பும் கொண்ட இந்த வேலி எங்கே தொடங்குகிறது? பாட்டி யோசித்தாள்.
அவளுக்கு வேலி போகும் பல காடுகள் நினைவுக்கு வந்தன. அவற்றைத் தாண்டியும் வேலி போய்க்கொண்டிருந்தது. அடுத்த ஊர், அதற்கடுத்த ஊர், அதற்கும் அடுத்தது என்று அவளுக்குத் தெரிந்த தூரம்வரைக்கும் வேலி போனபடியே இருந்தது. எங்கே தொடங்குகிறது என்று சொல்ல முடியவில்லை. ‘அங்கருந்து வருது’ என்று குருட்டாம் போக்கில் கை காட்டினாள். ‘எங்கருந்து?’ ‘ஊரத் தாண்டி’ ‘அதுக்கப்பறம் எங்கருந்து?’ ‘அடுத்த ஊரு’ ‘அப்பறம்’ பாட்டி பதில் சொல்லி ஓய்ந்துபோனாள். ‘ஒருநாளைக்கு நாம ரண்டு பேரும் நடந்து போயிக் கண்டுபுடிக்கலாம்’ ‘வானத்தத் தாண்டிப் போவுமா?’ என்றதும் ‘வாடா என் ராசு’ என்று அவனை அருகிழுத்து மடியமர்த்தி முத்தமிட்டாள். பற்களற்ற வாய்க்குள்ளிருந்து பிதுங்கிவந்த உதடுகள் மெத்தெனக் கன்னத்தில் பதிந்தன.
அவளிடமிருந்து விடுவித்துக்கொண்டு ‘இப்ப எங்க போறம். சொல்லு’ என்றான். ‘உங்க பெரியம்மா ஊட்டுக்குப் போறம்’ என்று ஆனந்தமான முக பாவனையோடு சொன்னாள் பாட்டி. பாட்டிக்கு முதுகைக் காட்டிக்கொண்டு திரும்பி நின்றான் குஞ்சு. அனேகமாகப் பாட்டியின் தந்திரம் அவனுக்குப் புரிந்திருக்க வேண்டும். ‘எந்தப் பெரியம்மா வீட்டுக்கு?’ என்றான். அந்தப் பேத்தியின் பெயர் பாட்டிக்கு மறந்துவிட்டது. அந்த ஊர்ப் பெயரைச் சொன்னாள். குஞ்சுவைப் பாட்டியிடம் ஒப்படைக்கும் போது அவன் அம்மா சொன்னது அவனுக்குள் பதிந்திருந்தது. ‘உன்னால முடியலீன்னா பக்கத்தூர்ல இருக்கறாளே எங்க பெரியம்மா பொண்ணு. அதான் உம்மவ ஆராயியோட பேத்தி . . . நெனப்பிருக்குதா அம்மாயி? அவுங்க ஊட்டுல கொண்டாந்து உட்ரு. அங்க டிவி இருக்குது. பாத்துக்கிட்டுக் கெடப்பான். ஒன்னு ரண்டு நாள்ல நான் எதாச்சும் ஏற்பாடு பண்ணிக்கறன்.’ அம்மா சொன்ன அந்த வீட்டுக்குத்தான் பாட்டி கூட்டிப் போகிறாள் என்பது முடிவாகிவிட்டது. குஞ்சுவை அங்கே விட்டுவிட்டுப் பாட்டி திரும்பிவிடுவாள். இனி இந்த ஊர் அவ்வளவுதான்.
திடுமென ‘நான் வர்ல’ என்று கத்திக்கொண்டே வேலிக்குள் ஓடினான் குஞ்சு. தடுமாறிப் பாட்டி எழுவதற்குள் வேலியின் தொக்கடவுக்குள் புகுந்துவிட்டான் குஞ்சு. ‘குஞ்சு குஞ்சூ’ என்று பதறி விளித்தாள் பாட்டி. வேலியில் பாம்புகள் நடமாடும். ஒடக்கான்களும் பல்லி, அரணைகளும் சாதாரணமாக உலவும். பெருக்கானுக்கும் எலிக்கும் வேலியைப் போல வசிப்பிடம் வாய்ப்பதில்லை. அடர்புதர் கொண்ட வேலிப் பகுதியில் முயல்கள் காது விறைத்து நிற்கும். கொஞ்சம் ஏமாந்தால் வேலிமுட்கள் துணிகளை மட்டுமல்ல உடம்புச் சதையையும் பதம் பார்க்கும். வேலிகளில் சில கொடிகள் உண்டு. அவை உடம்பைச் சுற்றி முறுக்கிக்கொண்டால் விடுபடுவது கடினம். பாட்டிக்கு அந்த வேலி சின்னஞ்சிறு வயது முதலே பழக்கமானதுதான். வீட்டிலிருந்து வெகுதூரம் நடந்த களைப்பால் பாட்டி சோர்ந்து போயிருந்தாள். கண் மசமசத்தது. குஞ்சு வேலிக்குள் மறைந்துவிட்டான்.
‘கண்ணூ குஞ்சூ ராசூ’ என்று பலவிதமாக அழைத்துப் பார்த்தாள். ‘பாட்டீ’ என்று அவன் குரல் வேலித் தொக்கடவு ஒன்றின் பக்கமிருந்து சிரிப்போடு வந்தது. மங்கலாக அவன் முகம் தெரிந்தது. ‘வா குஞ்சு’ என்று அவள் அழைக்க அழைக்க அவன் சிரித்தபடியே தொக்கடவுகளுக்குள் புகுந்து புகுந்து ஓடிக்கொண்டேயிருந்தான். அவன் முகம் எல்லாத் தொக்கடவுகளிலும் தெரிந்தது. இனி அவனை ஒன்றும் செய்ய முடியாது. ‘என்னயும் கூட்டிக்கிட்டுப் போ குஞ்சு. இந்த வேலி எங்க தொடங்குதுன்னு நானும் பாக்கறன்’ என்று கூவிக்கொண்டே உடலை நகர்த்தியபடி வேலியை ஒட்டிச் செல்லும் கொடித்தடத்தில் ஓடுவதுபோல நடந்தாள் பாட்டி. குஞ்சுவின் சிரிப்பொலி வழிநடத்தியது.